படால் புவனேசுவர்

உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு குகை

படால் புவனேசுவர் (Patal Bhuvaneshwar) என்பது ஒரு சுண்ணாம்புக் குகைக் கோயிலாகும். இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பிதௌரகர் மாவட்டத்தில் கங்கோலிஹாட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள புவனேசுவர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் குகை சிவன் மற்றும் முப்பத்து மூன்று வகையான தேவதைகள் சிலையைக் கொண்டுள்ளது என்று புராணங்களும் நாட்டுப்புறக் கதைகளும் கூறுகின்றன. இந்த குகை 160 மீ நீளமும் நுழைவாயிலிலிருந்து 90 அடி ஆழமும் கொண்டது. சுண்ணாம்பு பாறை வடிவங்கள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் பல்வேறு கண்கவர் உருவங்களை உருவாக்கியுள்ளன. இந்த குகை ஒரு குறுகிய சுரங்கப்பாதை போன்ற திறப்பைக் கொண்டுள்ளது. இது பல குகைகளுக்கு வழிவகுக்கிறது. குகையில் முழுமையாக மின்சார விளக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. நீரின் ஓட்டத்தால் கட்டப்பட்ட படால் புவனேசுவர் ஒரு குகை மட்டுமல்ல, குகைகளுக்குள் தொடர்ச்சியான குகைகளும் ஆகும்.

வரலாறு

தொகு

நம்பிக்கையின் படி சூரிய வம்சத்தின் மன்னர் ரிதுபர்ணா திரேத யுகத்தில் குகையை கண்டுபிடித்தார். ஆதி சங்கராச்சாரியார் கி.பி 1191 இல் இந்த குகைக்கு வருகை புரிந்தார்.[1] இதுதான் படால் புவனேசுவரின் தொடக்கமாகும். [2] குகைக்குள் பாதுகாப்பாக பயணம் செய்ய இரும்புச் சங்கிலிகளைப் பிடித்துச் செல்ல வேண்டும். குகையிலிருந்து, கயிலை மலைக்குச் செல்ல ஒரு நிலத்தடி பாதை இருப்பதாக என்று நம்பப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 26 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2012-06-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Patal Bhuvaneshwar: The shrine beneath – Tourism pamphlet published by Uttarakhand Tourism Development Board, Dehradun.
  3. Uttarakhand ‘The abode of Gods’ Published by Nest and Wings Ed. A.P. Agarwala 2009-10 page 218

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=படால்_புவனேசுவர்&oldid=3315243" இலிருந்து மீள்விக்கப்பட்டது