பட்காய் மலைகள்
பட்காய் மலைகள் (Patkai) இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள வடகிழக்கு இந்திய மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேல் பர்மா பகுதியில் உள்ள மலைகளின் தொடர் ஆகும்.
பட்காய் மலை Patkai | |
---|---|
பாங்சௌ கணவாயிலிருந்து தெரியும் பட்காய் மலைகள் | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | சரமதி சிகரம்[1] |
உயரம் | 3,826 m (12,552 அடி) |
ஆள்கூறு | 27°0′N 96°0′E / 27.000°N 96.000°E |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, பர்மா |
புவியியல்
தொகுபட்காய் மலை தொடர்கள் இமயமலைகள் போல் கரடுமுரடாக காணப்படுவதில்லை மற்றும் இதன் சிகரங்கள் உயரம் குறைவாகவும் காணப்படுகின்றன. இம்மலைத் தொடர்கள் பொதுவாக கூம்பு வடிவிலான மலையுச்சிகள், செங்குத்தான சரிவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் காணப்படுகின்றன.
பட்காயின் கீழ் மூன்று மலைத்தொடர்கள் இருக்கின்றன. அவை பட்காய் பம்[2] , காரோ-காசி-செயிந்தியா மற்றும் உலுசாய் என்பவை ஆகும். உலுசாய் மலையின் உயரமான புள்ளி புவாங்பூய் திலாங், இதன் மற்றொரு பெயர் நீல மலைகள் என அழைக்கப்படுகிறது. காரோ-காசி-செயிந்தியா மலைகள் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த மலைகளில் அமைந்துள்ள சிரபுஞ்சி மற்றும் மௌசின்ரம் ஆகிய இடங்கள் உலகிலேயே அதிக ஈரமான இடங்கள் ஆகும், இங்கு ஆண்டின் சராசரி மழை அளவு அதிகமாக இருக்கும்.
பாங்சௌ கணவாய் தான் பட்காய் மலைகளுக்குள் செல்லும் வழியாக உள்ளது.
பட்காய் மலைகள் காணப்படும் இந்திய மாநிலங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகுபுற இணைப்பு
தொகு- The Geology of Burma (Myanmar) பரணிடப்பட்டது 2012-09-13 at the வந்தவழி இயந்திரம்