பட்டணவர்
பட்டணவர் (Pattanavar) அல்லது பட்டினவர் எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு மீனவ சமூகத்தினர் ஆவர். இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற சோழ மண்டலக் கடற்கரை பகுதியில், ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக, பாரம்பரியமாக மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து, கடற்படை மற்றும் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.[2][3][4] இவர்கள் செட்டி என்னும் பட்டத்தை கொண்டுள்ளனர்.[5]
பட்டணவர் | |
---|---|
மதங்கள் | இந்து, கிறிஸ்தவம் |
மொழிகள் | தமிழ் |
உட்பிரிவுகள் |
|
தொடர்புடைய குழுக்கள் | தமிழர், கரையார், கரவா |
சொற்பிறப்பு
தொகுபட்டணவர் என்ற சொல்லுக்கு ஒரு பட்டினத்தில் வசிப்பவர் என்று பொருள். முன்னொரு காலத்திலிருந்து பட்டினம் என்ற சொல் துறைமுக நகரத்தை குறிக்க வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் மற்றும் சென்னப்பட்டினம் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டது.[6][7] இவர்களுள் பெரிய பட்டணவர் மற்றும் சின்ன பட்டணவர் என பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய என்ற சொல்லுக்கு "பெரியது" என்றும், சின்ன என்ற சொல்லுக்கு "சிறியது" என்றும் பொருள்படும், அங்கு பெரிய பட்டணவர், சின்ன பட்டணவரை விட சமூக ரீதியாக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது..[8]
பட்டணவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கரையார் என்று அழைக்கப்படுகின்றனர், இவர்கள் இச்சமூகத்தின் துணைப்பிரிவுகளில் ஒன்றாகும்.[4] கரையார் என்றால் "கடற்கரை மக்கள்" என்று பொருள். இது இலங்கையில் உள்ள மீனவ சாதியினரும் பயன்படுத்தும் சொல்லாகும். படையாச்சி என்ற துணைக்குழுவின் பெயர் "போர் வீரன்" என்று பொருள்படும்.[9]
வரலாறு
தொகுபாரம்பரியமாக சங்கம் நிலப்பரப்பில் வசிக்கும் சமூகங்களில் பட்டணவர் சமூகமும் ஒன்றாகும்.[10] பண்டைய காலங்களிலிருந்தே இவர்கள், சோழ மண்டலக் கடற்கரை பகுதியில் வசித்து வருகின்றனர்.[11] பட்டணவர் தமிழ் மன்னர்களின் கீழ் கடற்படையில், கூலிப்படையினராக பணியாற்றினர். ஹெர்மன் குல்கே போன்ற சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சோழர் கடற்படையில் பட்டணவர் சமூகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pārati, Paktavatcala (1999). Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste (in ஆங்கிலம்). Pondicherry Institute of Linguistics and Culture. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185452098.
- ↑ Sudarsen, V.; Selvaraj, B.; Raj, A. Xavier (1995). Knowledge of the Sea: Some Maritime Communities in India (in ஆங்கிலம்). PPST Foundation. p. 4.
- ↑ Grewal, J. S.; Culture, Project of History of Indian Science, Philosophy, and (2005). The State and Society in Medieval India (in ஆங்கிலம்). Oxford University Press. p. 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195667202.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 4.0 4.1 Pārati, Paktavatcala (1999). Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste (in ஆங்கிலம்). Pondicherry Institute of Linguistics and Culture. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185452098.
- ↑ "பட்டணவர்".
- ↑ Raghavan, M. D. (1971). Tamil culture in Ceylon: a general introduction (in ஆங்கிலம்). Kalai Nilayam. p. 141.
- ↑ Kōvintacāmi, Mu (1977). A Survey of the Sources for the History of Tamil Literature (in ஆங்கிலம்). Annamalai University. p. 93.
- ↑ Hollen, Cecilia Coale Van (1998). Birthing on the Threshold: Childbirth and Modernity Among Lower Class Women in Tamil Nadu, South India (in ஆங்கிலம்). University of California, Berkeley with the University of California, San Francisco. p. 23.
- ↑ Ramasamy, K. (1978). Padayachi Dialect of Tamil (in ஆங்கிலம்). Annamalai University. pp. i.
- ↑ Pālaṉ, Je (1982). Caṅkaṟukkum enkaḷ kulam. Neytal Patippakam. p. 8.
- ↑ Bavinck, Maarten; Vivekanandan, Vriddagiri. "(PDF) Qualities of self-governance and wellbeing in the fishing communities of northern Tamil Nadu, India - the role of Pattinavar ur panchayats". ResearchGate. Maritime Studies (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ Hermann Kulke, K Kesavapany, Vijay Sakhuja. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia. Institute of Southeast Asian Studies, 2009. pp. 92–93.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)