பண்டார் கின்ராரா

சிலாங்கூர், பூச்சோங் பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம்

கின்ராரா அல்லது பண்டார் கின்ராரா (மலாய்: Bandar Kinrara; ஆங்கிலம்: Kinrara Town; சீனம்: 金銮镇); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம் ஆகும். ஆயர் ஈத்தாம் வனக் காப்பகம் (Ayer Hitam Forest Reserve) இந்த நகரத்திற்கு தெற்கே அமைந்துள்ளது.[1]

கின்ராரா
Kinrara
கின்ராரா நகரம்
கின்ராரா நகரம்
பண்டார் கின்ராரா is located in மலேசியா
பண்டார் கின்ராரா
      கின்ராரா
ஆள்கூறுகள்: 3°3′2.26″N 101°38′56.41″E / 3.0506278°N 101.6490028°E / 3.0506278; 101.6490028
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
உருவாக்கம்1991
அரசு
 • நிர்வாகம்சுபாங் ஜெயா மாநகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

கின்ராரா வீடமைப்பு நிறுவனம் (Kinrara Housing Berhad), 1991-ஆம் ஆண்டில் கின்ராரா நகரக் கட்டுமானத்தைத் தொடக்கி வைத்தது. அந்தக் கட்டுமானத்தின் முதல் கட்டமாக, கின்ராரா 1 (Bandar Kinrara 1 - BK 1) எனும் மலிவு வீட்டு திட்டம் உருவானது. அதைத் தொடர்ந்து கின்ராரா 2 (Kinrara 2 - BK 2) எனும் மலிவு வீட்டு திட்டம் தொடக்கப் பட்டது..

அதன் பின்னர், கின்ராரா பகுதியில் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை (Bukit Jalil Highway) எனும் கூட்டரசு சாலை 217 (மலேசியா) (Federal route 217) உருவாக்கப்பட்டது. இந்தச் சாலைதான் கின்ராரா நகர வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது என்று அறியப் படுகிறது.[2]

பொது

தொகு

கின்ராரா நகரக் கட்டுமானம் 1991-ஆம் ஆண்டில் தொடங்கியது. 1,904 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. அந்த இடம் முன்பு கின்ராரா தோட்டம் (Kinrara Estate) என்று அழைக்கப்பட்டது. அது ஒரு ரப்பர் தோட்டமாக இருந்தது.[3]

கின்ராரா பி.கே 1–9 (BK 1–9) என 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பி.கே 1; பி.கே 2; பி.கே 3; ஆகிய மூன்று பிரிவுகளும், புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில், பூச்சோங் நோக்கிச் செல்லும் பகுதியில் உள்ளன. பி.கே (BK) என்றால் பண்டார் கின்ராரா எனும் கின்ராரா நகரம் (Bandar Kinrara).

பி.கே 4; பி.கே 5; பி.கே 6; பி.கே 7; பி.கே 8; பி.கே 9; ஆகிய ஆறு பிரிவுகளும், புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையின் தெற்குப் பகுதியில் உள்ளன.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்

தொகு

கின்ராரா நகரம்; சுபாங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள்:

கின்ராரா தமிழ்ப்பள்ளி

தொகு

கின்ராரா நகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் கின்ராரா தமிழ்ப்பள்ளி.[4] 554 மாணவர்கள் பயில்கிறார்கள். 36 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[5][6]

இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
கின்ராரா SJK(T) Ldg Kinrara கின்ராரா தமிழ்ப்பள்ளி பூச்சோங் 554 36

மேற்கோள்கள்

தொகு
  1. June 11, Ethel Khoo / The Edge Malaysia (11 June 2019). "Puchong is bounded on the north by Bandar Sunway, on the south by Bandar Saujana Putra, on the east by the Ayer Hitam Forest Reserve and on the west by Putra Heights and Kota Kemuning". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Integrated development of Bandar Kinrara of Selangor, Malaysia". பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.
  3. The Edge Top Property Developers Awards 2009: Consolidating for greater growth.
  4. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  5. "SJKT Kinrara - கின்ராரா தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.
  6. RAJENDRA, EDWARD. "Parents want speed limit near school reduced". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_கின்ராரா&oldid=4168199" இலிருந்து மீள்விக்கப்பட்டது