பதேபூர், இராஜஸ்தான்
பதேபூர் (Fatehpur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழகில், செகாவதி பிரதேசத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். பதேபூர் நகரம் சிகார் மற்றும் பிகானேர் நகரங்களுக்கிடையே, தேசிய நெடுஞ்சாலை எண் 52-இல் அமைந்துள்ளது.
பதேபூர்
பதேபூர் (செகாவதி பிரதேசம்) | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27°59′N 74°57′E / 27.98°N 74.95°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | சிகார் |
ஏற்றம் | 324 m (1,063 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 92,595 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 332301 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-23 |
மாவட்டத் தலைமையிடமான சிகாரிலிருந்து பதேபூர் நகரம் 50 கிலோ மீட்டர் தொலைவிலும்; சூரூவிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பதேப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 92595 ஆகும். அதில் ஆண்கள் 47601 மற்றும் பெண்கள் 44994 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13367 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.73% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 37.53%, இசுலாமியர் 36.68%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.32%, கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Fatehpur
- Ramgarh Shekhawati பரணிடப்பட்டது 2022-01-30 at the வந்தவழி இயந்திரம்