பத்தரமுல்லை
பத்தரமுல்லை (Battaramulla, சிங்களம்: බත්තරමුල්ල) என்பது இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பின் ஒரு புறநகர் ஆகும். இது கொழும்பின் மத்திய பகுதியான கோட்டையில் இருந்து 5.2 மைல்கள் தூரத்தில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் வேகமாக வளரும், நிர்வாக வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும்.
பத்தரமுல்லை
බත්තරමුල්ල Battaramulla | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 10120[1] |
பத்தரமுல்லை முன்னர் தனியான பத்தரமுல்லை நகரசபையினால் நிருவகிக்கப்பட்டு வந்தது. தற்போது இது கடுவலை மாநகர சபையின் கீழ் நிருவகிக்கப்படுகிறது. தளவத்துகொடை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மாலபே ஆகிய நகரங்கள் பத்தரமுல்லையின் எல்லை நகர்கள் ஆகும்.
சுயாதீன தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையம் மற்றும் கல்வி 'இசுருபாய' அமைச்சு, தேர்வு துறை அமைச்சு ஆகியன இங்கே அமைந்துள்ளன. இலங்கையின் பிரபலமான நட்சத்திர விடுதிகளும் மற்றும் தனியார் பாடசாலை, தேசிய பாடசாலைகளும் இங்கே அமைந்துள்ளன.