பத்து காவா
பத்து காவா (மலாய் மொழி: Batu Kawa; ஆங்கிலம்: Batu Kawa; சீனம்: 石角) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவு; கூச்சிங் மாவட்டத்தில் உள்ளது ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
பத்து காவா நகரம் | |
---|---|
Batu Kawa Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 1°30′50″N 110°18′52″E / 1.51389°N 110.31444°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் |
மாவட்டம் | கூச்சிங் |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 1,859 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 93250 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 6082 |
இந்த நகரப் பகுதியின் வழியாக பான் போர்னியோ நெடுஞ்சாலை (Pan Borneo Highway) செல்கிறது. அந்த வகையில் கூச்சிங், பாவ், லுண்டு, செமத்தான் ஆகிய நகரங்களையும் இந்த நெடுஞ்சாலை இணைக்கின்றது.
பத்து காவா (Batu Kawa) எனும் பெயர் மலாய் வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது. "பத்து" என்றால் கல்; "காவா" என்றால் அரிசி சமைக்கப் பயன்படும் பானை.
பொது
தொகு1997-ஆம் ஆண்டில், மூடா ஜெயா (MJC) நிறுவனத்தின் மூலமாக பத்து காவா புதிய நகர்ப்பகுதி உருவாக்கப்பட்டது. கூச்சிங் வாழ் மக்களால் "எம்.ஜே.சி." என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த நகர்ப்பகுதி 265 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டது. கூச்சிங் நகரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
மாவட்டப் பிரிவுகள்
தொகுபத்து காவாவில் 12 சிறிய மாவட்டப் பிரிவுகள் உள்ளன.
- பத்து காவா - Batu Kawa
- சுதாபோக் - Stapok
- சின் சான் தூ - Sin San Tu
- மோயான் - Moyan
- கிம் சு சிங் - Kim Choo Sing
- லுவோ சி கான் - Luo Zhi Gan
- சியா சா லோங் - Xia Sha Long
- சுங்கை தாப்பாங் - Sungai Tapang
- ரந்தாவ் பாஞ்சாங் - Rantau Panjang
- செஜிசாக் - Sejijak
- சுங்க தெங்கா - Sungai Tengah
- பங்காலான் பாரு - Pangkalan Baru
மேற்கோள்கள்
தொகு- ↑ "In 1997, Mudajaya Corporation Berhad via its subsidiary MJC City Development Sdn. Bhd. ('MCity"), embarked on the Batu Kawah New Township at Kuching, Sarawak. Batu Kawah New Township, or affectionately known as "MJC" by the Kuchingites is developed on a 265 acres of land. Strategically located only 7KM to downtown Kuching". www.mudajaya.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2022.