பத்மநாபன் சுப்ரமணியன் போதி
பத்மநாபன் சுப்ரமணியன் போதி (இறப்பு: 1923 பிப்ரவரி 2- இறப்பு: பிப்ரவரி 1998) இவர் இந்தியாவில் கேரளா மற்றும் குஜராத் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தார். ஓய்வு பெற்ற பின்னர் இவர் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இந்திய மக்கள் தீர்ப்பாயத்திற்கு (ஐபிடி) உதவினார். [1]
மாண்புமிகு நீதியரசர் பத்மநாபன் சுப்ரமணியன் போதி | |
---|---|
பிறப்பு | 2 பெப்ரவரி 1923 திருவனந்தபுரம் |
இறப்பு | 1998 திசம்பர் தில்லி |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருவனந்தபுரம் பல்கலை கழகக் கல்லூரி அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம் |
தொழில்
தொகுபோதி 1923 பிப்ரவரி 2 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார். அங்கு சட்டத்தில் இளையவர் பட்டம் பெற்றார். செப்டம்பர் 1945 இல் இவர் திருவாங்கூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆனார். [2]
போதி தனது தொழில் வாழ்க்கையை உ. பி கக்கிலியா, மாநில தலைமை வழக்கறிஞர் மற்றும் பின்னர் தலைமை நீதிபதி ஆகியோரிடமிருந்து தொடங்கினார். 1957 மற்றும் 1960 க்கு இடையில் இவர் கேரள அரசாங்கத்தில் பகுதிநேர வரிவிதிப்பு சட்ட அதிகாரியாக பணியாற்றினார். 1966 முதல் 1970 வரை கேரள சட்ட அமைப்பின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். 1967 முதல் 1969 வரை இவர் கேரள பல்கலைக்கழக சட்ட பீடத்தில் உறுப்பினராகவும், கேரள அரசின் தலைமை வழக்கறிஞராகவும் கேரள வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1969 ஆம் ஆண்டில் கேரள உயர்நீதிமன்றத்தில் ப. சு. போதி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 1981 இல் இவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆனார். பின்னர் 1983 ஜூன் மாதம் கேரள உயர்நீதிமன்றத்தின் நிரந்தர தலைமை நீதிபதியாக பணிஏற்றுக் கொண்டார். ஆகஸ்ட் 1983 இல் இவர் குஜராத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். [2]
முக்கிய தீர்ப்புகள்
தொகுப. சு. போதி நீதிக்காக போராடும் ஏழை மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். [3] ஜனவரி 1985 இல், ப. சு. போதி அவர்கள் பணிபுரிந்த ஆலைகள் மூடப்பட்டபோது இறந்த ஆலைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மூலம் அரசாங்க நலன்களுக்கான விண்ணப்பத்தபோது அது குறித்து தீர்ப்பளித்தார். தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அரசாங்கம் வாதிட்டது. சம்பளம் கொடுக்க மறுத்தது. ப. சு. போதி "சட்டங்களை இயற்றுவது போதுமான பாதுகாப்பிற்காகவோ அல்லது தேவையான நன்மைகளை நீட்டிப்பதற்காகவோ இல்லை. இதுபோன்ற சட்டங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தப்பட வேண்டும்" என்றார். அத்தொழிலாளர்களுக்கு தொகை செலுத்த வேண்டுமென தீர்ப்பளித்து அத் தொகைக்கு 12% வட்டியுடன் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார். [4]
1985 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு பாகுபாட்டை தடைசெய்திருந்தாலும், 1951 இல் ஒரு செய்யப்பட்ட ஒரு திருத்தத்தில் எந்தவொரு பின்தங்கிய குழுவினருக்கும் ஆதரவாக இடஒதுக்கீடு செய்ய மாநிலத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே பழங்குடியின மக்கள், பட்டியல் சாதிகள், பெண்கள் மற்றும் பிற குழுக்களுக்கான இட ஒதுக்கீட்டின் சட்டபூர்வமான கேள்வி ஒரு பிரச்சினை அல்ல, குழுக்கள் பின்தங்கியதாக கருதப்படுகிறது என ப. சு. போதி சுட்டிக்காட்டினார். [5] 1985 ஆம் ஆண்டில் குஜராத்தில் பத்தொன்பது கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களிடமிருந்து இவருக்கு ஒரு வழக்கு வந்தது. சர்தார் சரோவர் திட்டத்தால் நிலம் வெள்ளத்தில் மூழ்கியது. மக்களை தன்னிச்சையாக வெளியேற்றுவதற்கான உரிமை இருப்பதாக அரசாங்கம் கூறியது. போதி சட்ட பிரச்சினையின் மூலம் தீர்க்க விரும்பாமல், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இவர் கூறினார். [6]
ஓய்வுக்குப் பின்
தொகுஓய்வு பெற்ற பின்னர் ப. சு. போதி இந்திய மக்கள் மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் பணியாற்றினார். இது சிந்தபள்ளி அர்சன் வழக்கை விசாரித்தது. அங்கு ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பழங்குடியின குக்கிராமங்களை போலீசார் அழித்தனர். தீர்ப்பாயம் 1988 அக்டோபர் 18 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. குற்றத்திற்கு காரணமான காவல்துறையினரையும், அவர்களின் வனங்கள் மற்றும் பழங்குடியினரின் கொள்கையையும், ஆந்திர அரசையும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டின. [7] 1989 இல் இவர் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய அரசாங்கம் ப. சு. போதி மற்றும் இந்திய காவல்துறை சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி பி.ஏ. ரோசா ஆகியோரை 1984 ல் டெல்லியில் நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவுக்கு நியமித்தது. சஜ்ஜன் குமார் வன்முறை தூண்டி விடுவதில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். போதி-ரோசா குழு 1,000 க்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. 30 வழக்குகள் வழக்குத் தொடர பரிந்துரைக்கப்பட்டன. குமாரை கைது செய்ய மத்திய புலனாய்வுப் பிரிவு முயன்றது. ஆனால் அவர் முன்பிணை பெற்றார். குழுவின் இரு உறுப்பினர்களும் அக்டோபர் 1990 இல் தங்கள் பதைவியை துறந்தனர். [8]
1994 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தீர்ப்பாயம் ராஜாஜி தேசிய பூங்கா வழ்க்கை விசாரித்தது அங்கு பாரம்பரியமாக காட்டில் வாழ்ந்த குஜ்ஜர்களை அகற்ற அதிகாரிகள் விரும்பினர். தீர்ப்பாயம் வன அதிகாரிகள், விஞ்ஞானிகள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் மற்றும் குஜ்ஜர்கள் போன்றோரைச் சந்தித்தது. ப. சு. போடி தீர்ப்பாயத்தின் அறிக்கையைத் தயாரித்தார். இது குஜ்ஜர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் வெளியேற முடிவு செய்தால் அதற்கு தீர்ப்பயம் உதவும் என்றது. இதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு தேசிய பூங்காவில் மனிதர்கள் வாழ முடியாது என்றும் குறிப்பிட்டது. [9] நீதிபதி போதி பல பலரையும் நேரில் சந்தித்து பிரச்சினையின் சிக்கலை சுட்டிக் காட்டுகிறது. மேலும் குடியிருப்பாளர்களை வனத்திலிருந்து வெளியேற்றுவது மட்டுமே வனத்தின் உயிர்வாழலுக்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் தெரிய வந்தது. [10] ராஜாஜி தேசிய பூங்கா குறித்த அவரது அறிக்கை இந்தியாவின் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பற்றிய இதேபோன்ற விசாரணைகளுக்கு ஒரு மாதிரியை வழங்கியது. [3]
பத்மநாபன் சுப்ரமணியன் போதி 1998 பிப்ரவரி மாதம் கேரளாவின் கொச்சியில் மாரடைப்பால் இறந்தார். [3]
குறிப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- Ahuja (1997). People, Law And Justice: Casebook On Public Interest Litigation, Volume 2. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125011897.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bhatt, I C; Poti, P Subramanian (1985-01-29). "D.S. Vasavada, Textile Labour Association, Ahmedabad V. Regional Provident Fund Commissioner, Gujarat State, Ahmedabad" (PDF). National academy for Training and Research in Social Security. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - "Hon'ble Mr. Justice Padmanabhan Subramanian Poti". High Court of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- "JPAM UPDATE". 4 May 1995. Archived from the original on 2004-05-09. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- "Obituary". JPAM Update. February 1999. Archived from the original on 2004-09-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- Lewis, Michael L. (2003). Inventing Global Ecology: Tracking the Biodiversity Ideal in India, 1947-1997. Ohio University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0821415417.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Menon, T.C.; Nag, Jyotirmoyee (18 October 1988). "Report of Indian People's Human Rights Tribunal of the Chintapalli Arson Case" (PDF).
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Saberwal, Vasant K. (2003). Battles Over Nature: Science and the Politics of Conservation. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178240483.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sharma, Kumud (March 2000). "Power and representation: reservation for women in India". Asian Journal of Women's Studies (Ewha Womans University Press) 6 (1): 2. http://home.ewha.ac.kr/~acws/eng/. பார்த்த நாள்: 2019-12-19. Pdf.
- "The probe series". Frontline 22 (18). 27 August – 9 September 2005. http://www.frontlineonnet.com/fl2218/stories/20050909004902400.htm. பார்த்த நாள்: 2012-04-22.