பந்திங் மருத்துவமனை

பந்திங் மருத்துவமனை (மலாய்: Hospital Banting; ஆங்கிலம்: Banting Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டம், பந்திங் நகர்ப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும்.[2]

பந்திங் மருத்துவமனை
Hospital Banting
Banting Hospital
அமைவிடம் சுல்தான் ஆலாம் சா சாலை, பந்திங், சிலாங்கூர்
Jalan Sultan Alam Shah, Banting, Selangor,
சிலாங்கூர்,
 மலேசியா
ஆள்கூறுகள் 2°48′14″N 101°29′31″E / 2.80389°N 101.49194°E / 2.80389; 101.49194
மருத்துவப்பணி பொது நிபுணத்துவ மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு நிதியுதவி
வகை முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவத் துறை
தரநிலை தேசிய தரநிலைகள்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 153[1]
நிறுவல் 8 அக்டோபர் 1974
பட்டியல்கள்
Map
பந்திங் மருத்துவமனை அமைவிடம்

இந்த மருத்துவமனை 1975-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. 10.48 எக்டர் பரப்பளவு கொண்ட இந்த மருத்துவமனையின் கட்டுமானச் செலவு RM 32 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும்.

பொது

தொகு

1991-ஆம் ஆண்டில், புதிதாக ஆண் நோயாளிகள் தங்கு கூடம் (வார்டு); அறுவை சிகிச்சை மற்றும் எலும்பியல் சிகிச்சைத் தங்கு கூடம்; 2000-ஆம் ஆண்டில், இரத்தச் சுத்திகரிப்பு பிரிவு; நிர்வாக வளாகம், மருத்துவப் பதிவுகள் பிரிவு மற்றும் உடலியல் மருத்துவப் பிரிவு ஆகியவை நிறுவப்பட்டன. 2005-இல், முதியோர்களுக்கு என தனிப் பிரிவும் நிறுவப்பட்டது.

8-ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK8) கீழ், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) கட்டி முடிக்கப்பட்டது. பணியாளர்களுக்கு 18 குடியிருப்பு மனைகளும்; மருத்துவர்களுக்கு 6 மனைகளும் கட்டப்பட்டன. டிசம்பர் 2008-இல், பந்திங் மருத்துவமனையில் 6 நோயாளிகள் தங்கு கூடங்கள்; 151 படுக்கைகள் இருந்தன. அக்டோபர் 2009-இல், இருதய தீவிரச் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டது. தற்போது 153 படுக்கைகளுடன் சேவையில் உள்ளது.

உள்ளமைவு

தொகு
  • 153 படுக்கைகள் - (Beds)
  • 2 அறுவை சிகிச்சை அரங்குகள் - (Operating Theaters)
  • 1 முதியவர் தீவிரச் சிகிச்சை படுக்கைகள் - (Adult Intensive Care Unit Beds)
  • 4 இதய சிகிச்சை படுக்கைகள் - (Cardiac Care Unit Beds)
  • 4 குழந்தை தீவிரச் சிகிச்சை படுக்கைகள் - (Pediatric Intensive Care Unit Beds)

முகவரி

தொகு

Hospital Banting, Jalan Sultan Alam Shah
42700 Banting, Selangor
Tel : +603 3187 1333
Faks : +603 3181 8834
Emel: pengurusanhospitalbanting@moh.gov.my
இணையத் தளம்: jknselangor.moh.gov.my/hbanting/

மேற்கோள்கள்

தொகு
  1. Portal Rasmi Kementerian Kesihatan Malaysia
  2. Team, Altfa Support (15 May 2024). "Laman Web Rasmi Hospital Banting". Hospital Banting. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்திங்_மருத்துவமனை&oldid=4048705" இலிருந்து மீள்விக்கப்பட்டது