பன்சூரி சுவராஜ்
இந்திய அரசியல்வாதி
பன்சூரி சுவராஜ் (Bansuri Swaraj-பிறப்பு 3 சனவரி 1984) என்பவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவையின்புது தில்லி மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1][2] பன்சூரி சுவராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மிசோரம் முன்னாள் ஆளுநர் சுவராஜ் கவுசுலின் இணையரின் மகள் ஆவார்.[3]
பன்சூரி சுவராஜ் | |
---|---|
உறுப்பினர்-இந்திய மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | மீனாட்சி லேகி |
தொகுதி | புது தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
உறவுகள் | சுஷ்மா சுவராஜ் (தாய்) சுவராஜ் கவுசா (தந்தை) |
கல்வி | புனித கேத்தரின் கல்லூரி, ஆக்சுபோர்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முதுநிலை) இன்னெர் டெம்பிள் (பார் அட் லா) |
வேலை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
கல்வி
தொகுபன்சூரி சுவராஜ் வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் இன்னர் டெம்பிள் சட்டத்தில் பார் அட் லா ஆவார்.[3][4]
அரசியல் வாழ்க்கை
தொகுசுவராஜ் முதன் முதலாக 2024-இல் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் புது தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு18வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சோம்நாத் பார்தியை 78,370 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Anand, Akriti (2024-03-02). "Meet Bansuri Swaraj — Sushma Swaraj's daughter, poll debutant & BJP candidate". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
- ↑ "BJP's Meenakshi Lekhi passes the baton to Bansuri Swaraj for New Delhi seat". India Today (in ஆங்கிலம்). 4 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
- ↑ 3.0 3.1 "A sneak peek into Sushma Swaraj's life". Dainik Bhaskar. 28 March 2013. Archived from the original on 27 April 2014. பார்க்கப்பட்ட நாள் 27 April 2014.
- ↑ "Sushma Swaraj re-invents herself in a party dominated by Narendra Modi". தி எகனாமிக் டைம்ஸ். 25 February 2014. Archived from the original on 27 April 2014. பார்க்கப்பட்ட நாள் 27 April 2014.
- ↑ "Delhi Lok Sabha Elections Results 2024: BJP makes history with third consecutive clean sweep, but with lower margins". Business Today (in ஆங்கிலம்). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.