பன்னு மாவட்டம்

பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தின், மாவட்டம்.

பன்னு மாவட்டம் (Bannu District) (பஷ்தூ: بنو ولسوالۍ, உருது: ضِلع بنوں) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் பன்னு நகரம் ஆகும். இம்மாவட்டம் 1861-இல் பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாவட்டமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2]: 3 முன்னர் இம்மாவட்டம் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதியில் இருந்தது. 2018-இல் நடுவண் நிர்வாகத்தில் இருந்த பழங்குடிப் பகுதிகள் கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

பன்னு மாவட்டம்

ضلع بنوں
மாவட்டம்
நாடு Pakistan
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு2018
தலைமையிடம்பன்னு நகரம்
பரப்பளவு
 • மாவட்டம்1,227 km2 (474 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மாவட்டம்11,67,892
 • அடர்த்தி950/km2 (2,500/sq mi)
 • நகர்ப்புறம்
49,965
 • நாட்டுப்புறம்
11,17,927
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்4

பன்னு மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கில் வடக்கு வசீரிஸ்தான், வடகிழக்கில் கரக் மாவட்டம், தென்கிழக்கில் லக்கி மார்வாத் மாவட்டம், தென்மேற்கில் தெற்கு வசீரிஸ்தான் உள்ளது. கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றத்தில், பன்னு மாவட்டத்தின் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.[3] பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யப்படுகிறார்.[4]

பன்னு மாவட்டத்தின் முக்கியத் தொழில்களாக துணி நெய்தல், சர்க்கரை ஆலைகள், பஞ்சு நூல் ஆலைகள் உள்ளது. குர்ரம் மற்றும் காம்பிலா ஆறுகள பன்னு மாவட்டத்தை வளப்படுத்துகிறது. [5]:392

மாவட்ட நிர்வாகம் தொகு

பன்னு மாவட்டம் 4 வருவாய் வட்டங்களும், 49 ஒன்றியக் குழுக்களும் கொண்டது[6][7]

மக்கள்தொகை பரம்பல் தொகு

2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1227 சகிமீ பரப்பளவு கொண்ட பன்னு மாவட்டத்தின் மக்கள்தொகை 11,67,892 ஆகும். பன்னு மாவட்ட மக்களில் 99.3% பஷ்தூ மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  2. S.S. Thorbourne (1883). Bannu; or our Afghan Frontier. London: Trűbner & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1314135279.
  3. Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP
  4. "The Election Commission :: Untitled Page". 2012-11-15. Archived from the original on 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2017-11-13.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  5. "Imperial Bannu District". Gazetteer of India. Vol. 6. Clarendon Press. 1908.
  6. "Pakistan Tehsil Wise Census 2017 [PDF] (official)" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
  7. Provincial Disaster Management Authority, Government of Khyber Pakhtunkhwa (1 July 2009). "Pakistan: North West Frontier Province District, Tehsil and Union Code Reference Map" (PDF). United Nations Pakistan unportal.un.org.pk. Archived from the original (PDF) on 10 August 2013.


வெளி இணைப்புகள தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னு_மாவட்டம்&oldid=3611275" இலிருந்து மீள்விக்கப்பட்டது