பப்லோ கங்குலி

பப்லோ கங்குலி (Pablo Ganguli) ஒரு தொழில்முனைவோர்,[1] கலைஞர், தயாரிப்பாளர்,[2] இயக்குநர் [3] மற்றும் இசையரங்குச் செயலாளர்[4][5] ஆவார். இவர் பல சர்வதேச விழாக்கள்,[6] இயக்கங்கள் மற்றும் கலை, இலக்கியம், ஊடகங்களின் உச்சிமாநாடு, திரைப்பட வெளியீடு ஆகியவனற்றை தனது லிபெரட்டம் நிறுவனத்தின் மூலம் நடத்தியுள்ளார் .[7]

பப்லோ கங்குலி
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிதொழில்முனைவோர், கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையரங்குச் செயலாள
செயற்பாட்டுக்
காலம்
2001–present
அறியப்படுவதுFounder, Liberatum

கங்குலியின் அமைப்பான லிபெரட்டம் சுற்றுச்சூழல், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் மற்றும் பிற முக்கிய பிரச்சனைகளையும் ஊக்குவிக்கிறது.[8]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கங்குலி இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஒரு பெங்காலி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[9] ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற வங்காள கவிஞரான ரவீந்திரநாத் தாகூரின் தனிச் செயலாளராக இவருடைய பெரியப்பாக்களில் ஒருவர் இருந்தார் என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன.[10] இவரை அவரது பாட்டி வளர்த்தார் என்றும் அவர் தனது தாயை சந்தித்ததில்லை என்றும் கூறினார், மேலும் அவரது குழந்தை பருவத்தில் அவரது தந்தை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்க வருவதாகவும் கூறினார்.[11]

தொழில் வாழ்க்கை

தொகு

2001 ஆம் ஆண்டு தனது 17 வது வயதில் கங்குலி தனது நிறுவனமான லிபெரட்டம் மூலம் உலகெங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.[12]

ஆகஸ்ட் 2006 இல், லண்டனின் ஈவினிங் ஸ்டாண்டர்டில் ஒரு கட்டுரையாளர், கங்குலி "கல்கத்தாவில் பிரெஞ்சு படிக்கும் ஒரு மாணவனாக இருந்து மூன்றே ஆண்டுகளில் உலகின் முன்னணி இலக்கிய வரவேற்புரை வழங்குநர்களில் ஒருவராக குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.[9]

நவம்பர் 2010 மற்றும் 2011 இல், கங்குலி லண்டனில் ஈவினிங் ஸ்டாண்டர்டால் 1000 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

மார்ச் 2011 இல், கங்குலி அவர் நடத்தும் கலாச்சார விழாக்கள் குறித்து பின்வருமாறு கூறினார்: “இது ஒரு வேலை அல்ல. இது என் வாழ்க்கை. அதைத்தான் நான் கனவு காண்கிறேன்”. பலரிடம் உதவித் தொகை பெற்று தான் அவர் இந்த திருவிழாக்களை நடத்தி வருகிறார். அதனைப் பற்றி குறிபிடுகையில் இது "எளிதானது அல்ல, கடின உழைப்பு தேவைப்படுகிறது" என்று அவர் கூறுகிறார். அவர் தனது விழாக்களில் கலந்து கொள்ளும் பேச்சாளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை: "இது ஆஸ்கார் விழாவில் கலந்து கொள்வதற்காக ஒருவருக்கு கட்டணம் கொடுப்பது போன்றது."[14] என்று அதனைப் பற்றி குறிப்பிடுகிறார்.

ஐக்கிய இராச்சியத்தில் கலாச்சார விழாக்கள்

தொகு

2005 ஆம் ஆண்டு கங்குலி ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றார். அதே நேரத்தில், அவர் உலகின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார விழாக்களை உருவாக்கி இயக்கத் தொடங்கினார்.[11]

வட ஆப்பிரிக்கா

தொகு

மராகே விழாவில் கலைகள்

தி ஆர்ட்ஸ் இன் மராக்கே சர்வதேச கலாச்சார விழாவினை ஒருங்கிணைத்தார்.அதற்கு முன் ஸ்காட்டிஷ் வீக் மராகே , 21-28 செப்டம்பரில், கங்குலியால் ஏற்பாடு செய்யப்பட்டது.[15]

இந்தியா

தொகு

புதிதில்லி

தொகு

ஹிந்துஸ்தான் டைம்ஸ் 7–9 ஏப்ரல் 2006 இல் கிடாப் எனும் இலக்கிய நிகழ்வினை ,இந்தியாவின் தெற்கு தில்லியில் உள்ள இந்திய வாழிட மையத்தில் நடத்தியது.[16][17] தி டைம்ஸ் ஊடக பங்களிப்பாளராக செயல்பட்டது.இது இந்தியாவின் முதல் சர்வதேச இலக்கிய விழா ஆகும்.[18]

கிடாப் மும்பை

தொகு

சீனா

தொகு

லிபரடாம் ஆங்காங்

தொகு

ஆசிய டாட்லர் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் 2012 இல் ஆங்காங்கில் கங்குலி இலக்கிய கலாச்சார விழாவினை நடத்த உள்ளதாக அறிவித்தது.[19] பங்கேற்பாளர்களில் பாரெல் வில்லியம்ஸ், ரோஸி டி பால்மா, பால் ஷ்ரேடர், தாமஸ் ஹீதர்விக், டேனியல் வு மற்றும் கலீல் ஃபாங் ஆகியோர் பங்கேற்பாளர்கள் ஆவர்.[20]

சான்றுகள்

தொகு
  1. "Pablo Ganguli on Istancool", Another Magazine, 24 June 2010
  2. 'Pablo Ganguli, roi de la people connexion', 'Le Monde', 17 May 2016
  3. "Watch James Franco, Hans Zimmer and Paul Schrader talk inspiration" பரணிடப்பட்டது 6 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம், GQ, 19 May 2014
  4. Britain goes to Moscow, T2 The Times, 6 May 2009
  5. "Pablo Ganguli Reveals the Secrets of Hosting the World's Artistic Elite", NOWNESS, 28 December 2011
  6. "Liberatum brings Pharrell Williams and Mike Figgis to Hong Kong", CNN, 22 March 2012
  7. Ganguli's Guardian Profile, Comment is free
  8. "Pablo Ganguli profile on Vogue Italia" பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம், Vogue Italia, 23 November 2010
  9. 9.0 9.1 Caroline Philips, 'The boy who beguiled London's literary luvvies', Evening Standard (London), 24 August 2006
  10. David Robinson, "Ariel perspectives", The Scotsman, 24 February 2007
  11. 11.0 11.1 'The talented Mr Ganguli, one of London's best connected people' பரணிடப்பட்டது 7 சனவரி 2010 at the வந்தவழி இயந்திரம், London Evening Standard, 5 January 2010
  12. "A meeting of minds on the Bosphorus", The Independent, 6 June 2011. Retrieved 16 September 2018.
  13. ES (15 November 2011). "London's 1000 most influential people 2011: Literati". Evening Standard இம் மூலத்தில் இருந்து 26 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120126124959/http://www.thisislondon.co.uk/standard-home/article-24007174-londons-1000-most-influential-people-2011-literati.do. 
  14. Emma Jacobs (24 March 2011). "Lucrative celebration: earning money from festivals". Financial Times. http://www.ft.com/cms/s/0/c2a7f5fa-4e56-11e0-a9fa-00144feab49a.html#ixzz1HdJd6qzm. 
  15. Tim Bullamore, 'Bagpipers facing a battle to be heard', Times (UK)
  16. Boyd Tonkin, 'A Week in Books'[தொடர்பிழந்த இணைப்பு], The Independent (UK), 14 April 2006
  17. Subuhi Jiwani, 'Literary festival gets a novel spin', Daily News and Analysis, India, 24 March 2006
  18. Geordie Grieg, 'Giggles and some Goldie philosophy', Times (UK), 15 April 2006
  19. 'Pablo Ganguli Brings Liberatum To Hong Kong' பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம், Asia Tatler, 6 February 2012
  20. 'Pharrell Williams, V.S. Naipaul, Marianne Faithfull on Liberatum’s Lineup', The Wall Street Journal, 14 March 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்லோ_கங்குலி&oldid=4161466" இலிருந்து மீள்விக்கப்பட்டது