பமுக்கலெ (Pamukkale) வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டினிசிலி (Denizli) மாகாணத்தில் அமைந்துள்ளன. யுனெசுக்கோ அமைப்பு இவற்றை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது[1][2][3]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஈராபலீசு-பமுக்கலெ
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
பமுக்கலெ வெந்நீரூற்றுகள்
வகைகலவையான
ஒப்பளவுiii, iv, vii
உசாத்துணை485
UNESCO regionஐரோப்பா, வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1988 (12th தொடர்)

அமைப்பு

தொகு

மெண்டிரசு ஆற்றுப்பள்ளத்தாக்கு தான் பமுக்கலெயின் அமைவிடம். இவ்வெந்நீரூற்று 2700 மீட்டர் உயரமும் 600மீ அகலமும் 160மீ உயரமும் கொண்டது. இதிலிருந்து வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கால்சியம் கார்பனேட் அதிகளவு கொண்டிருப்பது குறிக்கவேண்டியது. எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 பாகையிலிருந்து 100 பாகை செல்சியசு வரை காணப்படும். இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் கனிமப் படிவுப்பாறைகள் (செடிமெண்ட்டரி (sendimentary) பாறைகள்) உருவாகின்றன. இப்பாறைகள் பார்ப்பதற்குப் பனிக்கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை 'பஞ்சுக் கோட்டை' என்று அழைப்பர். மலையிலிருந்து 100மீ அடிப்பாகத்தில் இவை அமைந்துள்ளன.

நோய்களைக் குணமாக்கும் வல்லமை

தொகு
 
பமகல பாறைகள்

பமுக்கலெ, 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதய நோய்கள், குருதிச்சுற்றோட்டச் சிக்கல்கள், உயர்குருதி அமுக்கம், நரம்பு சார்பான நோய்கள், வாத (வளிம) நோய்கள், கண் மற்றும் தோல் சார்ந்த நோய்கள், உடல் களைப்பு, மன உளைச்சல், சமிபாட்டுச் (செரிமானச்) சிக்கல்கள், குறைபாடுகள் ஆகியவற்றைக் குணமாக்கக் கூடிய சக்தி இவ்வெந்நீருற்றுக்கு உண்டு.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இங்கு பல சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டன. இதனால் வெந்நீரூற்றுக்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய, பள்ளத்தாக்கின் கீழேயும் மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகளுக்காக அமைக்கப்பட்டன. ஆனால் இவ்வீதியில் மோட்டார் ஊர்திகள் (தானுந்துகள்0 செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. இங்கேயுள்ள சுற்றுலா விடுதிகளை அகற்றி விட்டு, அவ்விடங்களில் செயற்கை முறையிலான நீச்சற் தடாகங்களை அமைக்க துருக்கியின் சுற்றுலாத்துறையினர் தீர்மானித்துள்ளனர். அது மட்டுமன்றி, இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பமுகலெ வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பமுக்கலெ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Scheffel, Richard L.; Wernet, Susan J., eds. (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89577-087-5.
  2. Padfield.com. "Jewish Congregation in Hierapolis".
  3. Kevin M. Miller (July 1985). "Apollo Lairbenos". Numen 32 (1): 46–70. doi:10.1163/156852785X00157. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பமுக்கலெ&oldid=4100385" இலிருந்து மீள்விக்கப்பட்டது