ஹிபாயத்துல்லா, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றிய இவர் தற்போது தினமணி செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். ஹிபாயத்துல்லா, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார். இசுலாம், வரலாறு, அரசியல், தமிழ்நாட்டு ஊர்கள், தமிழக நபர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவதோடு விக்கியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி, தமிழ் முஸ்லிம்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தமிழ்நாடு வக்பு வாரியம், கா.காளிமுத்து, இராம. வீரப்பன் ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.
-மார்ச் 1, 2010ல் தமிழ் விக்கிப்பீடியா முதற் பக்கத்தில் என்னைப்பற்றி இடப்பட்ட சிறு குறிப்பு