ஆச்சாம்பட்டி ஊராட்சி
வாருங்கள்!
வாருங்கள், ஆச்சாம்பட்டி ஊராட்சி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சா. அருணாசலம் (பேச்சு) 14:19, 3 ஏப்பிரல் 2024 (UTC)
ஆச்சாம்பட்டி
தொகுஆச்சாம்பட்டி என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கே உள்ள தங்க அரசர் கோயில் பிரபலமானது. தங்க அரசா் கோவில் ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி,மற்றும் கொத்தம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் சொந்தமான கோவில் ஆகும். தமிழ்த் தேசியப் போியக்கத் தலைவரும் தமிழ்த் தேசியத் தமிழா் கண்ணோட்டத்தின் ஆசிாியருமான தோழா் பெ. மணியரசன் அவா்கள் பிறந்த சொந்த கிராமம் ஆகும்
ஆச்சாம்பட்டி அம்பலக்காரர் மற்றும் ஆச்சாம்பட்டி கீழத்தெரு கோட்டார் தலையாரி வகயிறா வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூருக்கு அருகில் உள்ள வெள்ளவெட்டான் விடுதிதான் ஆச்சாம்பட்டி அம்பலக்காரர் மற்றும் ஆச்சாம்பட்டி கீழத்தெரு கோட்டார் தலையாரி வகையிராக்கள்,விராலிப்பட்டி வடக்கு கீழத்தெருகாரர்கள் மற்றும் கல்லுப்பட்டி கீழத்தெருகாரர்கள் ஆகியோருக்கு சொந்த ஊர்.
முன்னோருக்காலத்தில் அம்பலக்காரர் வெள்ளவெட்டான் விடுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் (அம்பலக்காரருடைய மனைவியின் அண்ணனுக்கும்) மைத்துனருக்கும் அம்பலக்காரருக்கும் தகறாராம் வாமடையை அம்பலக்காரர் மைத்துனர் திறக்க இரண்டு பேருக்கும் வயல்காட்டில் ஒரே தகராறு முற்றியதாம் அப்போது ஆத்திரம் அடைந்த அம்பலக்காரர் தான் வைத்திருந்த மண்வெட்டியால் மைத்துனரின் தலையை வெட்டினாரம். தலை வேறு முண்டம் வேறாக விழுந்ததாம். தலை விழும்போது சந்திரா சூர்யா நீதான் சாட்சி என்று கூறியபடி விழுந்ததாம். அம்பலக்காரர் மைத்துனரின் உடலை வயல்காட்டிலேயே வாமடையில் வைத்து புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாராம். அன்று மாலை வீட்டில் உள்ளவர்கள் அம்பலக்காரரின் மனைவி, ஊர்க்காரர்கள் மற்றும் அம்பலக்காரரும் சேர்ந்து அம்பலக்காரரின் மைத்துனரை தேடுகிறார்களாம் ஒரு மாதம் தேடியும் கிடைக்கவில்லையாம்.
தேடி ஓய்ந்த பிறகு அம்பலக்காரர் அவருடைய வீட்டில் கட்டிலில் ரெட்டணைக்கால் போட்டு வானத்தை பார்த்தபடி படுத்து இருந்தாராம் அப்போது நிலவை பார்த்து அம்பலக்காரர் கள கள என சிரித்தாராம் அப்போது அம்பலக்காரர் மனைவி அண்ணனை காணவில்லை கணவன் ஏன் சிரிக்கிறார் என சந்தேகப்பட்டு இப்படி சிரிக்கீறிர்கள் என அம்பலக்காரரிடம் பல முறை துருவி துருவி கேட்டாராம்.
அம்பலக்காரர் தன் மனைவியிடம் வயல்காட்டில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும்போது உன் அண்ணனுக்கும் எனக்கும் தகராறு உன் அண்ணனை நான் வெட்டி வாமடையில் புதைத்து விட்டேன் உன்னுடைய அண்ணன் தலை விழும்போது சந்திரா சூர்யா நீதான் சாட்சி என்று கூறியபடி விழுந்தது ஆகையால் நான் இப்போது சந்திரனை வானத்தில் பார்த்தேன் எனக்கு சிரிப்பு வந்தது அதனால் சிரித்தேன் என்று நடந்த உண்மையை மனைவியிடம் கூறினாராம்
உடனே அம்பலக்காரரின் மனைவி ஊரில் உள்ளவர்களிடம் நடந்தவற்றை கூறினாராம். உடனே அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து அம்பலக்காரரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்களாம் இதை அறிந்த அம்பலகாரர் அங்கிருந்து தப்பிக்க எண்ணி ஊரை விட்டு கிளம்பினாராம் . இதை அறிந்த உடனே அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் அனைவரும் அம்பலக்காரரை பிடிக்க விரட்டிக்கொண்டு வந்தனராம்.
விரட்டிக்கொண்டு கல்லுக்காரன்பட்டிக்கு அருகில் வரும்போது தற்போது ஆச்சாம்பட்டியில் வசிக்கும் கீழவீட்டு கோனார்களின் சொந்த ஊர் கல்லுக்காரன்பட்டியாம் கீழவீட்டு கோனார்கள் கல்லுக்காரன்பட்டியில் செம்மறி ஆட்டு கிடை போட்டு இருந்தார்கள். அப்போது அந்தவழியாக மூச்சு இறைக்க ஓடிவந்த அம்பலக்காரரை பார்த்து என்னங்க அய்யா இப்படி ஓடிவருகிறீர்கள் என்று கீழவீட்டு கோனார்கள் கேட்டார்களாம். நடந்தவற்றை கீழவீட்டு கோனார்களிடம் அம்பலகாரர் கூறினாராம்.
உடனே கீழவீட்டு கோனார்கள் ஆடு அடைப்பதற்காக வைத்திருந்த கூடாரத்தில் அம்பலக்காரரை காப்பாற்றுவதற்காக அடைத்தார்களாம் அப்போது அந்தவழியாக அம்பலக்காரரை பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் கீழவீட்டு கோனார்களிடம் இந்தவழியாக ஒருத்தன் ஓடுறானா என கேட்டார்களாம் . இப்பதான் இந்த வழியாக ஒருத்தன் மூச்சு இறைக்க ஓடுறான் என அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்களிடம் கீழவீட்டு கோனார்கள் கூறினார்களாம் . ஏன் அய்யா அவனை விரட்டிக்கொண்டு போகிறீர்கள் என கேட்டார்களாம் அதற்கு அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் நடந்தவற்றை கீழவீட்டு கோனார்களிடம் கூறினார்களாம். அப்படியா செய்தான்
அவனை விடக்கூடாது கீழவீட்டு கோனார்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அம்பலக்காரரை பிடிப்பதற்காக ஓடினார்களாம். ஓடி ஓடி களைத்துப்போய் வாக்காளளி எங்கிட்டோ ஓடிப்போய்விட்டாண்டா என்று கூறியபடி அம்பலக்காரரை பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் திரும்பி உள்ள வெள்ளவெட்டான் விடுதிக்கு சென்று விட்டார்களாம்.
அம்பலக்காரரை பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்காரர்களோடு வந்த கீழவீட்டு கோனார்கள் மீண்டும் திரும்பி கூடாரத்தில் அடைக்கப்பட்டிருந்த திறந்துவிட்டு நடந்தவற்றை அம்பலக்காரரிடம் கூறினார்களாம்.பிறகு அம்பலக்காரரும் கீழவீட்டு கோனார்களோடு சேர்ந்துகொண்டு ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தாராம்.
ஒரு நாள் அம்பலக்காரர் கீழவீட்டு கோனார்களோடு ஆடு மேய்த்துக்கொண்டு நொடியூர் அருகிள் வரும்போது நொடியூர் பட்டினத்தில் ராஜாக்கள் சொக்கட்டாங்காய் விளையாடிக்கொண்டு இருந்தனர் அதை பார்த்த அம்பலகாரர் அவரும் விளையாட்டில் பங்கேற்றார் விளையாட்டில் பங்கேற்றார் அப்போது அம்பலகாரருக்கும் மற்ற ராஜாக்களுக்கும் கடும்போட்டியாம். அப்போது அம்பலகாரர் உங்கள் எல்லோரையும் நான் ஜெயித்துவிட்டால் என்னுடைய சுட்டு விரலில் மண்ணெடுத்து சுண்டி விடுவேன் அந்த மண் எந்த எந்த இடங்களில் எல்லாம் போய் விழுகிறதோ அந்த இடங்களெல்லாம் என்னுடைய ஆளுகைக்கு தர வேண்டும் என்று பந்தயம் போட்டாராம் மற்ற ராஜாக்களும் பந்தயத்திற்கு ஒத்துக்கொண்டார்களாம் . பந்தயபடி அம்பலகாரர் போட்டியில் ஜெய்த்துவிட்டாராம். சுட்டு விரலில் மண்ணெடுத்து சுண்டிவிட்டாராம் அவர் சுண்ட்டி விட்ட மண் பதினெட்டு பட்டியிலும் விழுந்ததாம் அதாவது மு.சோழகம்பட்டி, நத்தமாடிபட்டி, விராலிப்பட்டி வடக்கு , விராலிப்பட்டி தெற்கு . ஆச்சாம்பட்டி , கொசுவபட்டி , கொத்தம்பட்டி ,கல்லுப்பட்டி , திராணிப்பட்டி, மலையப்பட்டி தச்சன்குறிச்சி., குறும்பூண்டி, சவேரியர்பட்டி, நொடியூர்,கிள்ளுக்கோட்டை ,உலங்காத்தான்பட்டி, டி பி சான்டோரியம், நாட்டாணி ஆகிய கிராமங்கள். அதிலிருந்துதான் செங்கிளை நாட்டு அம்பலகாரர் என்று பதினெட்டுபட்டி கிராம மக்களால் அழைக்கப்பட்டாராம்.
ஆச்சாம்பட்டி கீழத்தெரு கோட்டார் தலையாரி வகயிறா வரலாறு
அம்பலக்காரரை பிடிப்பதற்காக கல்லுக்காரன்பட்டி வரைக்கும் விரட்டிக்கொண்டு வந்த அம்பலகாரரின் மனைவி ஊர்க்காரர்கள் அனைவரும் வெள்ளவெட்டான் விடுதிக்கு திரும்பிய உடன் அந்த வாக்காளளி (அம்பலக்காரரை) ஓடிவிட்டான் அவனை சேர்ந்த பறையர்களை இங்கு வைக்கக்கூடாது என்று திட்டம் போட்டார்களாம் . இந்த திட்டத்தை ஊர்க்காரர் ஒருவர் அம்பலகாரரின் பறையர்களிடம் வந்து கூறிவிட்டாராம் .
அம்பலகாரரின் பறையர்கள் அண்ணன் தம்பி மூன்று நபர்கள் ஒரு தங்கை சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு இரவோடு இரவாக கோவிலுக்கு சென்று தொம்பரக்காத்தான் பட்டவன் இரண்டு சாமிகளையும் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக நொடியூருக்கு தற்போது தொம்பரக்காத்தான் கோவில் இருக்கும் இடத்தில் வரும்போது பொழுது விடிந்து கோழி கூவியதாம். சாமியை வைத்துவிட்டு காலை கடனை முடித்துவிட்டு சாமியை தூக்கும்போது சாமியை தூக்க முடியவில்லையாம். சாமியை அப்படியே வைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையில் இருந்தார்களாம் .
விடியற்காலை என்பதால் அருகில் உள்ள விராலிப்பட்டியில் கோழி கூவியதாம் பக்கத்தில் ஊர் இருப்பதை அறிந்த இவர்கள் விரலிபட்டிக்கு சென்றபோது ஊரில் உள்ளவர்கள் இவர்களை விசாரித்து இருக்கிறார்கள் . இவர்கள் நடந்ததை கூறியிருக்கீரார்கள். உடனே நொடியூரில் இருக்கும் அம்பலகாரருக்கு ஆள் அனுப்பி உங்கள் பறையர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள் என்று தகவல் சொல்லி இருக்கிறார்கள் உடனே அம்பலகாரர் பறையர்களை அழைத்து எல்லாரும் பத்திரமாக வந்துட்டிங்களா என விசாரித்து மூத்தவனும் தங்கையும் விராலிப்பட்டியில் கோனாருக்கு ஆதரவாக இருக்குமாறும் சின்னவன் கல்லுப்பட்டியில் படையாச்சிக்கு ஆதரவாக இருக்குமாறும் நடுவுளவன் என்னுடன் அம்பலக்காரருடன் இருக்குமாறும் சொல்லி இருக்கிறார். பின்பு நொடியூரில் ஆடுமாடுகளுக்கு போதிய மேய்ச்சல் இல்லை என்பதால் ஆச்சாம்பட்டி காசங்காட்டில் ஆடுமாடு மேய்ந்தால் அதிக பால் கறந்ததாம். பின்பு கீழவீட்டு கோனார்களையும் பறையர்களையும் ஆச்சாம்பட்டிக்கு அழைத்துகொண்டுவந்து நிரந்தரகமாக ஆச்சாம்பட்டியில் தங்கிவிட்டாராம்.அந்தப்பறையர்கள் தான் தற்போது ஆச்சாம்பட்டி கீழ தெருவில் வசிக்கும் கோட்டார் தலையாரி வைகையிராக்கள்.ஆச்சாம்பட்டி கீழதெருவில் 5 வகுப்புகள் ( வகையறா)) இருக்கின்றன
1. கொடுவை தத்தரை
2.பூசாரி
3.செல்லப்பட்டையார்
4.சத்தக்காரர்
5.கோட்டார் தலையாரி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files. ஆச்சாம்பட்டி ஊராட்சி (பேச்சு) 14:24, 3 ஏப்பிரல் 2024 (UTC)