வாருங்கள்!

வாருங்கள், கோ நடராசன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Booradleyp1 (பேச்சு) 05:22, 14 மே 2022 (UTC)Reply

ஆடா தொகு

மலைத்தொடர்களுக்கு இடையே உள்ள பள்ளம் ஆடாவாகும்.அதன் அழகை விவரிக்கிறது கட்டுரை.சகதியில் மாட்டிக்கொள்ளும் கால்நடைகளைப் பற்றியும் மீட்கும் முறைகளையும் காட்சிப்படுத்துவது கூடுதல் அழகு.செம்மறியாடுகள் கதை வேறு வகை. புசுபுசுவென வளர்ந்திருக்கும் மயிர்கள் மீது, ஈரப் புழுக்கை ஒன்றாக இணைந்து, சிறு உருண்டைகளாக காய்ந்து விடும். உடல் முழுவதும் சிறு சிறு கோவில் மணிகளை கட்டிய முனிகளாய் மாறிவிடும். ஓடையை தாண்டும் பொழுது, ஒரு ஆடு விழுந்தாலும், எல்லா ஆடுகளும் விழுந்து விழுந்து ஓடும். உடலெங்கும் களிமண் திருநீரை பூசிவிடும். மழை நாட்களில் மணிகளுக்கு விடுதலை கிடைக்கும். வெயில் நாட்களில் மயிர்களுக்கும் விடுதலை கிடைக்கும்.கவிதையாக முடிவுரை.சரக்கு,பயனம்,சீறும்,மகிழ்ச்சி என உந்து வகைகள் இயற்கை எனும் மரகத புறாக்களை வேட்டையாட,வாயெங்கும் வழிகிறது பச்சை குருதி.உதிர்ந்த பல நிற சிறகுகள், வாய் கட்டும்,கால் கட்டும் கட்டப்பட்டு வங்கிகளில் அடக்கம் செய்யப்பட,ஒரு நீலமலை மாங்குயிலின் ஒப்பரி, எனது அடர் துயிலை உரித்துவிட்டு,வெளிச்ச வெள்ளச் சிறையில் தள்ளிவிட்டு ஓய்கிறது. கோ நடராசன் (பேச்சு) 09:35, 18 அக்டோபர் 2022 (UTC)Reply

காளான் கனவுகள் தொகு

பச்சையாக உண்ணும் அளவிற்கு காளான் சுவையாக இருக்கும்.ஆட்டு இறைச்சி பக்குவத்தில் காளான் குழம்பு இருக்கும். வேறு எந்த ஊனுணவையும் மிஞ்சும் மிகைச்சுவை அது. புலால் துண்டுகளைப் போல மெனக்கட்டு மெல்லத் தேவையில்லை. எலும்பு தொல்லையும் இல்லை. பல் இடுக்குகளில் சிக்கிக் கொள்ளாது. வாயில் வைத்தால் கரையும் அளவிற்கு ஒரு புலவு வகை உண்டு எனில் அது, நீலமலைகளில் விளைந்த இயற்கை காளான் மட்டுமே. சிறுவர்கள் கூட காளான் பறித்து வேர் நீக்கி ,தாளிக்கும் கரண்டியில் உப்பும் வற மிளகாயும் சேர்த்து வதக்கி உண்பார்கள். மிகுதியாக இருக்கும் தண்ணீரை குடித்தால், உலகின் வேறு எந்த வகை சூப்பின் சுவையையும் மிஞ்சக்கூடிய தாக இருக்கும். கோ நடராசன் (பேச்சு) 09:40, 18 அக்டோபர் 2022 (UTC)Reply

எருமைப்புலி தொகு

என் பள்ளி நண்பர்கள் அட்டியில் ஒரு அடிபட்ட எருமையை மக்கள் தினந்தோறும் சென்று ,ஒரு தாய் தெய்வத்தை வணங்குவது போல் வணங்குவதாக பேசிக்கொண்டனர். நானும் பார்க்கலாம் என்று சென்றிருந்தேன். பல இடங்களில் புலிவாய் குதறிய காயங்களும் அதிலிருந்து வழிந்த குருதி கரைகளும் தெரிந்தன. புலி நகங்கள் மேல்தோலை வாரை வாரையாக கிழித்து இருந்தன.ஒரு கொம்பு உடைந்த நிலையில், ஏதோ பச்சிலை வைத்து கட்டுப் போட்டிருந்தார்கள். குருதியும் மருந்தும் கலவையாக வழிந்துகொண்டிருந்தது. எருமை நிற்கமுடியாமல் படுத்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது.கன்றுக்குட்டி ஒன்று சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன் பின்முதுகில் இருந்த காயத்தை கண்ணீரொழுக,மூக்கொழுக ,வாயொழுக நக்க முயற்சித்தது தாயெருமை. கோ நடராசன் (பேச்சு) 09:42, 18 அக்டோபர் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கோ_நடராசன்&oldid=3579612" இலிருந்து மீள்விக்கப்பட்டது