வாருங்கள்!

வாருங்கள், தா.சிதம்பரம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நற்கீரன் (பேச்சு) 00:19, 5 மே 2022 (UTC)Reply

தோவாளை முத்தையாபிள்ளை சிதம்பரதாணுபிள்ளை.(டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை.வக்கீல் மற்றும் திருவிதாங்கூர் ஸ்ரீ சித்ரா மாநில மேலவை உறுப்பினர்.சிறுகுறிப்பு.

தொகு

தோவாளை, வக்கீல்.-தென் திருவிதாங்கூர் சமஸ்தான மேனாள் ஸ்ரீ சித்ரா சட்ட மேலவை உறுப்பினர் (M.L.C)முத்தையாபிள்ளை சிதம்பரதாணுபிள்ளை (டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை) ஒரு வரலாற்று குறிப்பு.

தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோவாளை தாலுகா ,நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.தோவாளை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட வக்கீல் மற்றும் மேனாள் தென்திருவிதாங்கூர் சமஸ்தான ஸ்ரீ சித்ரா சட்டமேலவை உறுப்பினர் (M.L.C) காலஞ்சென்ற திரு.டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை ஆவார்.அன்னாரது தந்தையார்.முத்தையாபிள்ளை ,தாயார் சிதம்பரவடிவு ஆகும். இவருடைய பொது வாழ்க்கையின் போது மொழிவாரியாக நமது பாரத தேசம்பிரிக்கப்படவில்லை.எனினும் தமிழர்களுக்கு தென் திருவிதாங்கூர் சமஸ்தன மன்னர்கள் ஆட்சியின் போது தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்க பெறவில்லை.ஆட்சி மொழி மலையாளம் மற்றும் ஆங்கிலமாகவே இருந்தது.சட்டமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் வழக்குகள்,அலுவலக நடவடிக்கைகள் , மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடந்து வந்தது. வக்கீல்டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை.நாகர்கோவில் மஜிஸ்ரேட்கோர்ட்டில் 10/09/1946 ம் நாளான்று ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாகர்கோவில் நீதிமன்ற நடவடிக்கைகள் ,வழக்குகள்,தீர்ப்புகள் அனைத்தும் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும் ,தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் நாஞ்சில்நாட்டில் மக்களின் நலன் கருதி நீதிமன்ற நடவடிக்கைகளை ,வழக்கு மற்றும் தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுவை சமர்பித்தார். அதன் எண் File No.D.Dis.3894/1946,Judicial dated 17/10/1946 ,Memorandum submitted byT.M.Chidambarathanupillai.M.L.C, Nagercoil dated 10/9/1946.K.A.T.V.M.என்பதாக Trivancore Gazetteer ல் பதிவாகி உள்ளது.அதன் பிறகு நாகர்கோவில் நீதிமன்ற நடவடக்கைகள், வழக்குகள்,தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. மருமக்கள் தாயம் என்ற சமுதாய வழக்கம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.இந்த வழக்கம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு பல இன்னல்களையும்,குடும்ப அநீதிகளையும் விளைவித்து வந்தது.இந்த வழக்கத்தை ஒழிக்க பல தமிழ் சமுதாயத்தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள்.அதில் வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளையும் ஒருவர். 29ம் தேதி ஏப்ரல் மாதம் 1921ம் ஆண்டு நடந்த நாஞ்சில் நாட்டு .வெள்ளாளர் சமுதாய சங்கம் ஏழாவது கூட்டம் குலசேகரன்புதூர்,என்ற உயரவிளை(ஒசரவிளை)ல் வைத்து திரு.வேலுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.இதில் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளையும் கலந்து கொண்டு மருமக்கள் தாய வழக்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள்.திருவிதாங்கூர் ராஜாராஜா வர்மா குழு நடத்திய "மொழி கேட்டல்"என்ற நிகழ்விலும் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை கலந்து கொண்டு மருமக்கள் தாய வழக்கத்தின் குறைகளை விளக்கி கூறினார்.அதன் விளைவாக மருமக்கள் தாயம் ஒரு முடிவுக்கு வந்தது.

டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை தன்னுடைய சட்ட மேலவை உறுப்பினர் பதவியின் போது தோவாளை தாலுகா விவசாய பெருங்குடி மக்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் தேவஸ்தானம் கோவில்களில் பணிபுரிந்த மணியக்காரர்களால் கடுமையான விவசாய வரி புகுத்தப்பட்டு விவசாயிகள் பெருந்துன்பத்திற்கு ஆளானார்கள்.இதை கண்டித்து வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை,ஒரு மாபெரும் கிரிஷிகர்மார் மாநாட்டை நடத்துவதாக இருந்தது. மகாத்மா காந்தியடிகள் சுடப்பட்டு காலமானதால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அடுத்தநாள் மாகாத்மாவின் இறுதி அஞ்சலி கூட்டமாக மாற்றப்பட்டது என்று முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் பதிவு செய்கிறார்.

திரு.டி.எம்.சிதம்பர தாணுபிள்ளை, தோவாளையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நாகர்கோவில் இராமவர்மபுரத்திலிருக்கும் ஜவகர் தெருவிலுள்ள தன்னுடைய சொந்த வீட்டில் வசித்துவந்தார்.நல்ல பெயரோடும் புகழோடும் வாழ்ந்த வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை 23/04/1951 ம் நாள் நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானர்.

ஆதாரம்.

1)நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மீகம்.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

2) முனைவர்.அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்றுவியல்.

3)Dr. R. Maheswari Assistant Professor Department of History D.G.Govt.Arts College Mayiladuthurai

4)Proceedings of the Travancore Sri Chitra State Council. Third Council. Fourth session. Saturday ,the 20th July 1946 ..Original report. Vol.XXVIII No.1. தா.சிதம்பரம் (பேச்சு) 00:29, 5 மே 2022 (UTC)Reply