பயனர் பேச்சு:Kalanithe/தொகுப்பு 1

தங்களுடைய பங்களிப்புகளுக்கு மிக்க நன்றி. புதிய கட்டுரைகளை உருவாக்கும் போது தலைப்புகளை தமிழில் தந்தால் நன்று. - சிவகுமார் 04:28, 30 நவம்பர் 2005 (UTC)Reply

தமிழ்த்தலைப்புகள் தொகு

தயவுசெய்து பக்கத்தலைப்புகளை தமிழில் கொடுங்கள். நன்றி--ரவி 15:50, 11 டிசம்பர் 2005 (UTC)

நன்றி தொடர்ந்து முயற்சிக்கிறேன்--kalanithe

Hi Kalanithe, Plz give the initials also in Tamil. e.g D.S= டி. எஸ் -- சிவகுமார் 16:05, 29 டிசம்பர் 2005 (UTC)

பிற்காலசோழர்கள் தொகு

இவை பற்றி மேலும் தகவல்களை எனையவர்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்--kalanithe


வாருங்கள் கலாநிதி, தொகு

உங்களை பற்றிய தகவல்கள் சிலவற்றை பயனர் பக்கத்தில் சேர்த்தால் நன்று. கட்டுரைகளுக்கு தேவையான சில தகவல்களை ஆங்கில விக்கிபீடியாவிலும் கிடைக்கலாம். தொகுத்தலுக்கு எதாவது உதவி தேவை என்றால் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். உங்களின் பங்களிப்பில் தமிழ் விக்கிபீடியா மேலும் சிறப்புறும். --Natkeeran 17:49, 18 டிசம்பர் 2005 (UTC)

உங்களைப் பற்றிய தகவல்களைத் தந்ததற்கு நன்றி, கலாநிதி. -- சிவகுமார் 21:08, 29 டிசம்பர் 2005 (UTC)

நன்றி நக்கீரன் மற்றும் பிற்காலசோழர்கள் பற்றிய கட்டுரையை சரியான இடத்தில் தொகுக்க உதவும் --kalanithe


சோழர்கள் பற்றிய ஒரு கட்டுரை ஏற்கனவே உண்டு. ஆங்கில விக்கிபீடியாவிலும் விபரமான கட்டுரை ஒன்று உண்டு. அவை சோழர் என பொதுவாக அழைக்கப்படும் பிற்கால சோழர் பற்றிதான் என்பது என் எண்ணம். எனினும் உங்களின் கட்டுரை வரவேற்கபடுகின்றது, தகவல்களை ஒன்றினைத்து பின்னர் கட்டுரையை விரிவாக்கி கொள்ளலாம். --Natkeeran 18:11, 18 டிசம்பர் 2005 (UTC)

படிமம் ஆவண அனுமதி தொகு

உங்கள் பங்களிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. அண்மையில் நீங்கள் பதிவேற்றிய படிமம் பார்த்தேன். அதை எந்த "ஆவண அனுமதியின்" கீழ் பதிவேற்றியுள்ளீர்கள் என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். அது உங்கள் சொந்த படிமமாக இருப்பின் வார்ப்புரு:GFDL அல்லது வார்ப்புரு:PD அனுமதியில் தரலாம். இல்லையெனில் காப்புரிமைத் தகவல்களை படிமப் பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி. -- Sundar \பேச்சு 04:31, 20 டிசம்பர் 2005 (UTC)

நிர்வாக உதவி தொகு

புதுப் பயனர்களை வரவேற்று விக்கிபீடிய்யா தள நிர்வாகத்தில் நீங்கள் பங்கெடுப்பது மகிழ்ச்சி. பயனர்களை வர வேற்க வார்ப்புருக்களை பயன்படுத்துவது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். விவரங்களுக்கு பார்க்கவும்:Wikipedia:நிர்வாக உதவி--ரவி 12:45, 1 ஜனவரி 2006 (UTC)

செய்திகள் - இலங்கை தேர்தல் தொகு

புதிய செய்திகளை மேலேயும் பழைய செய்திகளை கீழேயும் திகதி வாரியாக ஒழுங்குபடுத்தில் நன்றாக இருக்குமா! --Natkeeran 17:36, 20 மார்ச் 2006 (UTC)

கலாநிதி நீங்கள் தற்சமயம் தந்திருக்கும் தேர்தல் பற்றிய தகவல்கள் உடனடி கவனத்தையோ அல்து முக்கியத்துவத்தையோ பெறாமல் போகலாம். ஆனால், ஒரு தொடர்ச்சியாக சேகரிக்கப்படும் நேரத்தில், பயனர்கள் அதிகரிக்கும் நேரத்தில் இவை நிச்சியம் உதவும். நன்றி. --Natkeeran 16:58, 5 ஏப்ரல் 2006 (UTC)

"ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு தொகு

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.

வார்ப்புரு தொகு

கலாநிதி, தனிநபர் அறிமுகம் என்பதின் மூலம் எதைக்குறிக்கின்றீர்கள் என்று புரியவில்லை. சற்று விளக்கம் தரமுடியுமா. வார்ப்புருக்கள் ஒரு தக்வலை அல்லது வடிவமைப்பை மீண்டும் மீண்டும் உருவாக்கமால் இருக்க உதவுகின்றன. வார்ப்புரு:உதாரணவார்ப்புரு என்று நீங்கள் ஏற்படுத்தினீர்கள் என்றால் அதை அப்பக்கத்தில் இடுவதன் மூலம் அவ்வார்புவில் இருக்கும் தகவல்கள் அந்தப்பக்கத்தில் தானாகவே சேர்ந்து கொள்ளும். இதை பற்றி மேலும் சில குறிப்புகளை பின்னர் பகிர்கின்றேன். --Natkeeran 17:48, 20 ஏப்ரல் 2006 (UTC)

{{ வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு }}

வார்ப்புருவும் வாழிடமும் ;-) தொகு

கலாநிதி, நீங்கள் வார்ப்புரு பற்றி கேட்டிருந்தீர்கள். ஆங்கில விக்கிபீடியாவில் கிடைத்த ஒரு தொடுப்பு இதோ. [1]

வார்ப்புரு என்பது ஒரே சட்டகப்படுத்தப்பட்ட விடயம் பல பக்கங்களில் அடிக்கடி வரவேண்டுமானால், அதற்கென பயன்படுத்துவதற்கென உருவாக்கப்படும் ஓர் அமைப்பாகும். இது பற்றி எனக்கு முழுமையான விளக்கம் கிடையாது. என்னுடைய கட்டுரைகள் எதிலும் இதுவரை நான் வார்ப்புருக்கள் பயன்படுத்தியதில்லை. நற்கீரன் பயன்படுத்தி வருகிறார். (கனடா சஞ்சிகைகள்).

மற்றது,

நீங்கள் இலங்கையில் தான் இருக்கிறீர்களா? இருந்தால், எங்கே?

கொழும்பில் இருப்பின், சந்திக்க விரும்புகிறேன்.

--மு.மயூரன் 20:07, 20 ஏப்ரல் 2006 (UTC)

கலாநிதி, உங்கள் தொலைபேசி இலக்கத்தை தர முடியுமா? இங்கே விரும்பாவிட்டால் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். mmauran@gmail.com --மு.மயூரன் 17:24, 21 ஏப்ரல் 2006 (UTC)

நபரை விபரிக்க அடிப்படை வார்ப்புரு உருவாக்குவது நன்று தொகு

படிமம் பெயர் தாய் தந்தை காலம் இடம் துறை

உங்களை போன்றே, நானும் இதை பற்றி சிந்தித்தது உண்டு. தேவைக்கேற்படி வார்ப்புருக்களை ஏற்படுத முடியும். ஒரு நபரை விபரிக்க அடிப்படை வார்ப்புரு உருவாக்குவது நன்று என்றுதான் எனக்கும் படுகின்றது. மேற்கூறியவற்றை தவிர நீங்கள் வேறு எவற்றையாவது பரிந்துரைக்க விரும்புகின்றீர்களா? --Natkeeran 03:37, 23 ஏப்ரல் 2006 (UTC)

kudos தொகு

glad to c ur series of articles on economics. i will also try to contribute--ரவி 08:18, 22 மே 2006 (UTC)Reply


பொருளியல் துறையில் சமபந்தமான கட்டுரைகளை தொடர்ந்து நீங்கள் எழுதிவருவது மகிழ்ச்சி. எந்த கலைச்சொற்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றீர்கள் என்று அறிய ஆவல். --Natkeeran 16:49, 28 மே 2006 (UTC)Reply


பொருளியல், கணக்கியல் துறைகளில் உங்களது பங்களிப்புக்கள் சிறப்பாக உள்ளன. பணி தொடர வாழ்த்துக்கள். --கோபி 16:54, 2 ஜூலை 2006 (UTC)

ஆங்கில விக்கிக்கு இணைப்பு தொகு

ஆங்கில விக்கிக்கு இணைப்பு கொடுக்க கடைசியில் [[en:ArticleName]] என்று கொடுக்கவும். இது மட்டுமே போதுமானது. தனியாக வெளிஇணைப்புகளில் கொடுக்க வேண்டியதில்லை. --Sivakumar

கலாநிதி, கிப்பன் பண்டம் கட்டுரையை மேம்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பொருளியல் மற்றும் பிறதுறைக் கட்டுரைகளும் அருமை. கிப்பன் பண்டம் கட்டுரையில் ==அமையத் தேவையான சூழல்== மற்றும் ==மெய்யுலகு எடுத்துக்காட்டுக்கள்== ஆகிய இரு பத்திகளைச் சேர்த்துவிட்டு இங்கு இணைத்து விடலாம். நல்ல சுவையான தகவலாக அமையும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? -- Sundar \பேச்சு 10:46, 25 ஜூலை 2006 (UTC)

ஆம். ஆங்கில விக்கியில் இருந்து தேவையான தகவல்களைப் பெற்று இணைக்கலாம். -- Sundar \பேச்சு 07:27, 26 ஜூலை 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :) தொகு

கலாநிதி,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:12, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

Return to the user page of "Kalanithe/தொகுப்பு 1".