Kalanithe
வாருங்கள்!
வாருங்கள், Kalanithe, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சிவகுமார் 04:09, 28 நவம்பர் 2005 (UTC)
50px|தொகுப்பு
|
---|
1 2 3 |
ஐரோப்பிய மையப் பார்வை
தொகுநீங்கள் தொடர்ந்து ஒரு துறையில் கவனமெடுத்து கட்டுரைகள் எழுதி வருவது நன்று. கட்டுரைகளை எழுதும் பொழு நாம் பலரும் ஐரோப்பிய மையப் பார்வையை ஏற்று அதையே பிரதிபலிக்க உந்தப்படுகின்றோம். பொருளியல் நோக்கிய பழம் சீன சிந்தனைகளையும், காந்திய சிந்தனைகளையும், பிற சிந்தனைகளையும், முதற்குடிகள் சிந்தனைகளையும் அலசுவது எமது புரிதலுக்கு உதவும்.
classical economics = தொன்மை+பொருளியல் என்பது முதலில் ஐரோப்பியர் மத்தியில் பொருளியல் நோக்கிய உறிதியான சிந்தனைகளை குறித்து நிக்கின்றது எனலாம். செந்நெறி அல்லது செம்மை என்பது இங்கு பொருந்தாதுதான். என்றால், பிற சிந்தனைகளையும் முடிந்தால் இணைக்கவும். நன்றி. --Natkeeran 17:50, 9 அக்டோபர் 2006 (UTC)
கணக்கு பதிவியல் - கணக்கியல்
தொகுகணக்கு பதிவியல் என்ற பகுப்பிற்குப் பதிலாக கணக்கியல் என்று பகுத்தால் என்ன? நன்றி. --கோபி 18:24, 2 நவம்பர் 2006 (UTC)
கணக்குப்பதிவியல் book keeping எனும் ஆங்கிலத்தின் பெயர்ப்பு அதேசமயம் கணக்கியல் acconutancy ஆகும் கணக்கியல் book keeping உள்ளடக்கிய பெரிய பகுப்பாகும்.பலவிதமான வேறுபட்ட வியாபார நடமுறைகள் எவ்வாறு ஏடுகளில் பதியப்படவேண்டும், என கூறப்படுவதே book keeping ஆகும்.அப்படியாயின் கணக்குபதிவியலை உப பகுப்பாக்கலாமென என்னுகின்றேன்.உங்கள் கருத்தை கவனிக்கின்றேன்.--கலாநிதி 17:03, 3 நவம்பர் 2006 (UTC)
- நீங்கள் கூறுவது சர்யானதுதான். கணக்கு பதிவியலை கணக்கியலின் உப பகுப்பாக்கியுள்ளேன். தேவையெனின் கட்டுரைகளைச் சரியான பகுப்புக்களுள் பகுத்து உதவக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:09, 3 நவம்பர் 2006 (UTC)
மொத்த உள்நாட்டு உற்பத்தி
தொகுகலாநிதி, மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான கட்டுரையின் உள்ளடக்கம் தவறானது என்று அது தொடர்பான வார்ப்புருவையும் கட்டுரையில் இட்டிருந்தீர்கள். நான் இது தொடர்பான விளக்கத்தை நீண்ட நாட்களுக்கு முன்னரேயே பேச்சுப் பக்கத்தில் இட்டிருந்தேன். உங்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இன்னமும் தகவல் பிழையானதென்று நீங்கள் கருதினால், இது தொடர்பான ஆங்கிலக் கட்டுரையையும் பார்த்துவிட்டு உங்கள் விளக்கத்தைத் தரவும். இது போன்ற குறுங் கட்டுரை ஒன்றைச் சர்ச்சைக்குரியதாகத் தொடர்ந்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை. பொதுக் கருத்து இல்லாவிட்டால் நீக்கிவிடலாம். ஆனால் அதற்குமுன் உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். Mayooranathan 15:36, 5 நவம்பர் 2006 (UTC)
மயூரநாதன் remind க்கு நன்றி.இது தொடர்பாக சில குறிப்புக்களை தேடவேண்டியுள்ளது.ஒரு வாரம் பொறுக்கவும்.--கலாநிதி 16:22, 5 நவம்பர் 2006 (UTC)
த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்(நாவல்)
தொகுஇத்தலைப்பில் அடைப்புக் குறிக்கு முன்னர் இடைவெளி வர வேண்டும். மேலும் நாவல் தமிழ்ச் சொல் அல்ல. அதற்கு இணையாக நவீனம், புதினம் என்பன பயன்பட்டன. ஆயினும் நவீனம் என்பது வடசொல் என நினைக்கிறேன். அதனால் புதினம் பயன்படுகிறது. ஏனைய பயனர்களது கருத்தையும் அறியலாம். பகுப்பு:புதினங்கள் (நாவல்கள்) , ஈழத்துப் புதின நூல்களின் பட்டியல் போன்று முன்னரும் புதினம் என்பது தவி யில் பயன்பட்டுள்ளது. நன்றி. --கோபி 18:48, 9 நவம்பர் 2006 (UTC)
- புதினங்கள் என்ற சொல் தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள், formal உரையாடல்களில் வழக்கில் உள்ளது தான். நல்ல தமிழ்ச் சொல். தொடர்ந்து பயன்படுத்தலாம்--Ravidreams 21:10, 10 நவம்பர் 2006 (UTC)
தயவு செய்து பார்க்க
தொகுசும்மா..
தொகுஉங்கள் பயனர் பக்கத்தில் உங்கள் விக்கிப்பீடியா ஈடுபாடு குறித்து படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 3 மயூக்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது :) இலங்கை தொடர்பான செய்திகள் இற்றைப்படுத்தலில் தொடர்ந்து கனகு, நற்கீரன், உமாபதி ஆகியோரோடு இணைந்து பங்காற்றுங்கள். நன்றி--Ravidreams 17:25, 12 நவம்பர் 2006 (UTC)
இலங்கையின் பெருந்தெருக்கள்
தொகுஎன்ற தளங்களில் இருந்து எடுத்தேன்--டெரன்ஸ் \பேச்சு 04:51, 14 நவம்பர் 2006 (UTC)
பணி - occupation
தொகுoccupatioan என்பதற்குப் பணி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். சுருக்கமாக இருப்பதோடு இது ஒருவரது தொழிலையும் அவர் செய்த செவையையும் குறிக்கப் பொதுவாகப் பயன்படக் கூடியதாகும். --கோபி 19:41, 21 நவம்பர் 2006 (UTC)
கலைச்சொற்கள்
தொகுமுகாமைத்துவம், நிர்வாக தொடர்பான கலைச்சொற்களுக்கு:
- ச.நா. தணிகாசலம்பிள்ளை. (1999). கல்வி நிர்வாகம். யாழ்ப்பாணம்: தணிகைப்பத்திப்பகம்.
பாராட்டுக்கள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வத்துடன் நூலகங்களில் உசாத்துணைகளைத் தேடிக் கண்டுபிடித்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு சரியான தகவல்களைச் தொடர்ச்சியாக் சேர்த்தமைக்கு நன்றி. உங்களின் பணிதொடர வாழ்த்துக்கள். தயவு செய்து நீங்கள் செய்திகளை இடும்போது --~~~~ என்றவாறு கையொப்பமிடவும் (வலது பக்கத்தில் கடைசியில் இருந்து இரண்டாவதாக இருக்கும் ஐகானைக் கிளிக் பண்ணவும்). நன்றி --Umapathy 16:58, 26 நவம்பர் 2006 (UTC)
ஆமாம், கையெழுத்து இட --~~~~ இலகு ஆயிற்றே. தமிழில் பெயர் தெரிய வேண்டும் என்றாலும், கையெழுத்தை மாற்றியமைக்கலாம். --Natkeeran 01:18, 8 டிசம்பர் 2006 (UTC)
ஆண்டு அறிக்கை
தொகுகலாநிதி, உங்களின் சற்று விரிவான பார்வையை இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review முன்வைத்தால் நன்று. சற்று முன்னோக்கி சிந்தித்து, விமர்சித்து, சில ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்களுடன் அந்தப் பார்வை அமைந்தால் நன்று. --Natkeeran 01:32, 8 டிசம்பர் 2006 (UTC)
பொங்கல்
தொகுகலாநிதி, பேச்சு:பொங்கல் (திருநாள்) பக்கத்தில் நீங்கள் கருத்துத் தெரிவித்தீர்களா? --கலாநிதி 17:16, 8 ஜனவரி 2007 (UTC)
விக்கிபீடியர் கவனத்துக்கு, மேலே கலாநிதியைக் கேட்டதும் இப்பொழுது இதனை எழுதுவதும் கலாநிதியல்ல. கோபியே, --கலாநிதி 17:17, 8 ஜனவரி 2007 (UTC)
- கலாநிதி மன்னிக்க. விக்கிப்பீடியா என்னை நீங்களாக ஓரிரு தடவை நினைத்தமைக்கு நான் பொறுப்பாளியல்லன். :-) இத்தகைய தவறுகள் நிகழ்வதற்கு ஏதும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம். நன்றி. கோபி 17:26, 8 ஜனவரி 2007 (UTC)
- கலாநிதி, நீங்கள் என் பயனர் பக்கத்தில் இட்ட குறிப்பும் என் பெயரிலேயே பதிவாகியுள்ளது. அத்துடன் பேச்சுப் பக்க மாற்றம் எனக்கு புதிய செய்தியென அறிவிக்கப்படவும் இல்லை. விக்கி மென்பொருளுக்குப் பொழுது போகவில்லை போலிருக்கிறது. அதுவும் பாவம்தானே. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக் கணக்கில் பயனர்கள் அதனைப் படுத்தாத பாடு படுத்துகின்றனர். ஒரு மாற்றத்துக்கு எம்மைப் பாடுபடுத்த அது நினைத்திருக்கலாம். அல்லது எம்முடன் விளையாடிப் பார்க்கவும் நினைத்திருக்கலாம். அல்லது கலாநிதி ஏன் கலாநிதியாகவும் கோபி ஏன் கோபியாகவும் இருக்க வேண்டும் என்றும் அது நினைத்துப் பார்த்திருக்கலாம். :-) எதற்கும் கடவுச் சொல்லை மாற்றிப் பாருங்கள். நன்றி. --கோபி 17:51, 8 ஜனவரி 2007 (UTC)
பண்டங்கள்
தொகுபண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவதா அல்லது சேர்த்து எழுதுவதா பொருத்தமானது? இலவசப் பண்டம், பிரதியீட்டுப் பண்டம் என்றவாறாகப் பிரித்து எழுதுவது சரிபோற்படுகிறது. பாடத்திட்டத்தில் எப்படி? --கோபி 17:15, 16 பெப்ரவரி 2007 (UTC)
கோபி இவ்விடயம்பற்றி செல்வாவுடன் ஆலோசிப்பது நல்லமுடிவை தரும் என் நினைக்கின்றேன் நானும் இவ் விரு முறைகளிலும் எழுதியேவந்துள்ளேன்--கலாநிதி 17:39, 16 பெப்ரவரி 2007 (UTC)
பண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவது சரியே!--ஞானவெட்டியான் 12:01, 14 மார்ச் 2007 (UTC)
படிம உரிமம்
தொகுபடிமங்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றின் உரிமம் யாது. ஆகிய இரண்டு விடயங்களும் படிமக் கோப்பு ஏற்றப்படும் பொழுது தரப்பட வேண்டும். நன்றி. --Natkeeran 19:07, 17 பெப்ரவரி 2007 (UTC)
தலைப்பைப் பிரித்து எழுத்துவது பற்றி
தொகுகலாநிதி, கோபி அவர்கள் என் பேச்சுப் பக்கத்தில் இப்படிக் கேட்டிருந்தார்கள்: "பண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவதா அல்லது சேர்த்து எழுதுவதா பொருத்தமானது? இலவசப் பண்டம், பிரதியீட்டுப் பண்டம் என்றவாறாகப் பிரித்து எழுதுவது சரிபோற்படுகிறது. உங்கள் கருத்தறிந்து மாற்றஞ் செய்வதைக் கலாதி விரும்புகிறார்."
பிரித்து எழுதுவதே நல்லதென்பது என் கருத்து. ஏன் எனில் படிக்கச் சற்று எளிதாக இருக்கும். சிறு தொடர்கள் என்றால் - எடுத்துக் காட்டாக, "ஏன் எனில்" என்பதை ஏனெனில் என எழுதலாம். இங்கு கூட ஏன் எனில் எனப் பிரித்து எழுதவதால் தவறில்லை. படிக்க எளிதாக இருக்கும்.--செல்வா 15:35, 18 பெப்ரவரி 2007 (UTC)
ஏனெனில் = சரி ஏன் எனில் = சரியல்ல; ஏன் என்றால் = சரி --ஞானவெட்டியான் 12:03, 14 மார்ச் 2007 (UTC)
- ஏன் எனில் எனப் பிரித்து எழுதினால் தவறாகாது, ஆனால் இத்தகைய சிறு சொற்களை அப்படிப் பிரித்து எழுதிவது தேவை இல்லாதது. சரியில்லை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை (இங்குகூட சொல்வதற்கொன்றுமில்லை என்று சேர்த்தெழுதலாம்). இன்றைய சூழலில், தமிழ்ச் சொற்களைப் பிரித்து எழுத்வதே நல்லதாகத் தோன்றியதால் கூறினேன். "இங்கு கூட" என்று நான் முன்மொழி இட்டதும் தேவை இல்லை என்பதாலேயே. ஆனால் தவறென்று கூற இயலாது.--செல்வா 12:18, 14 மார்ச் 2007 (UTC)
உங்கள் கவனத்துக்கு
தொகுகலாநிதி, இன்று சில இடங்களில் என் உரையாடலில், காசுப்பாய்ச்சல், மேந்தலை முதலான சொற்கள் பொருத்தமாக இல்லாதது பற்றி குறிப்பிட்டுள்ளேன். அவை அனைத்தும் சொற்களைப் பற்றித்தான், உங்களைப் பற்றி இல்லை. அருள் கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம். பாடநூல்களில் உள்ள தலைப்பத்தான் நீங்கள் இடுகின்றீர்கள் என அறிவேன். இக் குறிப்புகள் சிக்கலெண், Wikipedia பேச்சு:சொல் தேர்வு ஆகிய இடங்களில் இட்டிருந்தேன். --செல்வா 21:26, 20 மார்ச் 2007 (UTC)
FARC
தொகுTamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language
--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)
Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்
தொகுWikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)
மீண்டும் வருக
தொகுவருக கலாநிதி, நீண்ட நாட்கள் கழித்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.--சிவகுமார் \பேச்சு 06:22, 31 ஜனவரி 2008 (UTC)
- கலாநிதி, மீண்டும் வருக. எங்கே உங்களை நெடுங்காலமாகக் காணோம், என்று சில மாதங்கலுக்கு முன்னர் நினைத்தேன். பொருளியல் பற்றிய கட்டுரைகள் நீங்கள் விட்டுச்சென்ற நிலையிலேயே உள்ளது என்று நினைக்கிறேன். உங்கள் முதன்மையான பணிக்களுக்கு ஊறு விளையாமல் இயன்றபொழுது வந்து ஆக்கம் தாருங்கள் --செல்வா 17:00, 6 மார்ச் 2008 (UTC)
- கலாநிதி, மீண்டும் வருக! --செல்வா 17:49, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
:படிமம்:Gurustill.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Gurustill.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 03:59, 19 பெப்ரவரி 2008 (UTC)
:படிமம்:Guruposter.JPG இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Guruposter.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 04:00, 19 பெப்ரவரி 2008 (UTC)
கணக்கியல், நிதி, வணிகவியல், பொருளியல்
தொகுகலாநிதி, நீங்கள் கணக்கியல், வணிகவியல், பொருளியல் ஆகிய தலைப்புகளில் நிறைய கட்டுரைகள் ஆக்கியுள்ளீர்கள். நன்றி.
ஆங்கிலத்தில் Finance என்பது தமிழில் நிதி அல்லது நிதியியல் எனலாமா? நிதியியலுக்கும் வணிகவியலுக்கும் வேறுபாடு என்ன?. நிதியியல் வணிகவியலின் உள்பிரிவா?
கணக்கியல், வணிகவியல், பொருளியல் ஆகித தலைப்புகளில் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்) நூல்கள் இணையத்தில் உண்டு. அவற்றில் கலைச்சொற்களையும் தகவல்களையும் பெற முடியும்.
மேலும், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கீழ்வரும் தலைப்புகள் பட்டியலைத் தொகுத்தவலாம்.
- பொருளியல் தலைப்புகள் பட்டியல்
- வணிகவியல் தலைப்புகள் பட்டியல்
- கணக்கியல் தலைப்புகள் பட்டியல்
- நிதியியல் தலைப்புகள் பட்டியல் (இது ஒரு பெரும் பிரிவு என்றால்)
--Natkeeran 22:01, 27 செப்டெம்பர் 2008 (UTC)
ஆங்கிலத்தில் Finance என்பது தமிழில் நிதி அல்லது நிதியியல் எனலாமா?
ஆம் நிதியியல் எனலாம்,
நிதியியலுக்கும் வணிகவியலுக்கும் வேறுபாடு என்ன?. நிதியியல் தனியே பணம்,மூலதனம் பற்றிய கற்கை,வணிகவியல் வியாபாரமும் அதனைசார்ந்த நடவடிக்கை எனலாம்,
நிதியியல் வணிகவியலின் உள்பிரிவா? சரியாக தெரியவில்லை உங்களுடைய வேண்டுகோளை விரவில் நிறைவேற்ற முயற்சிக்கின்றேன்.--கலாநிதி 16:52, 2 அக்டோபர் 2008 (UTC)
2008 த.வி வேலைத்திட்டம்
தொகுவணக்கம் கலாநிதி:
பொருளியல் துறையில் உங்கள் பங்களிப்பு முக்கியமானது. நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கு பங்களிப்பதற்கு மிக்க நன்றி.
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
:படிமம்:புலிநகக் கொன்றை.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:புலிநகக் கொன்றை.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:38, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Srilankan population.png இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Srilankan population.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:43, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:அபியும் நானும்.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:அபியும் நானும்.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:52, 8 ஏப்ரல் 2009 (UTC)
:வாழ்த்துக்கள்
தொகு- பணி சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து கட்டுரை எழுதுங்கள்.--Ragunathan 19:55, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
பங்களிப்பாளர் அறிமுகம்
தொகுவணக்கம் கலாநிதி, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 11:25, 5 அக்டோபர் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 00:01, 19 பெப்ரவரி 2010 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் கலாநிதி. தமிழ் விக்கிப்பீடியாவின் மிகவும் தொடக்க கால பங்களிப்பாளரான உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். நன்றி.--ரவி 06:41, 5 ஏப்ரல் 2010 (UTC)
- கலாநிதி, உங்கள் அறிமுகக் கட்டுரையை முதற்பக்கத்தில் காண்பதில் மிகவும் மகிழ்கின்றேன். பொருளியல் தொடர்பான கட்டுரைகளை எழுதி அருமையான பங்களிப்பை நல்கினீர்கள். மறக்க இயலாது. நல்வாழ்த்துகள்!--செல்வா 15:12, 19 ஏப்ரல் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:25, 27 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுநினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் கலாநிதி. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:24, 2 மே 2011 (UTC)
- பங்களிக்கவிட்டாலும் தினமும் விக்கிபீடியாவினை நான் கவனித்தே வந்துள்ளேன் இரவி உங்களின் வேண்டுகோளுக்கு நன்றி,இனிவரும் நாட்களில் பங்களிக்க எண்ணியுள்ளேன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.--கலாநிதி 16:04, 2 மே 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த ஐந்தொகை (கணக்கியல்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 19, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ஆங்கிலம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 2, 2012 அன்று வெளியானது. |
இவ்வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை அறிவிப்பு
தொகுவணக்கம் கலாநிதி, நலமா? நீங்கள் பரிந்துரைத்திருந்த கார்ல் மார்க்சு கட்டுரை இவ்வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உங்கள் தொடர் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். நன்றி--இரவி 16:38, 5 பெப்ரவரி 2012 (UTC)
நலமா?
தொகுவணக்கம், Kalanithe! உங்களைத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் நீண்ட நாட்களாகக் காணவில்லையே?! நலமாக உள்ளீர்களா? தற்போது, நாம் 1,70,585 கட்டுரைகளைக் கொண்டு நன்றாக வளர்ந்து வருகிறோம். நீங்களும் அவ்வப்போது பங்களித்து வந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்! நன்றி.--இரவி 22:37, 19 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி ரவி நலமாக உள்ளேன் வேலைப்பளு காரண்மாக பங்களிப்பது இல்லை தவிர விக்கியின் வளர்ச்சியினை கவனித்துக்கொண்டுதான் உள்ளேன் --கலாநிதி 18:00, 3 மார்ச் 2012 (UTC)
நன்றி சண்முகம் --கலாநிதி 18:11, 3 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி
தொகுநன்றி | ||
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! Anton (பேச்சு) 04:08, 4 ஏப்ரல் 2012 (UTC) |
விக்கிப்பிடியர் சந்திப்பு ஏற்பாடுகள்
தொகுகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:30, 13 மார்ச் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுநீங்கள் பங்களித்த மட்டக்களப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 28, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த சிவன் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகஸ்ட் 4, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
சைவத்திருமுறைகள்
தொகுதாங்கள் வடிவமைத்த சைவத் திருமுறைகள் வார்ப்புருவினை சற்று வடிவம் மாற்றியுள்ளேன். ஒரு முறை அதனை கண்டு மாற்றம் ஏதேனும் தேவைப்படுமானால் செய்யவும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:30, 19 மே 2013 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:02, 24 சூன் 2013 (UTC)
நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை
தொகுவணக்கம் கலாநிதி, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மூலதனப் பண்டம். எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:22, 12 மே 2014 (UTC)
கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்
தொகுதமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள கலாநிதி,
நலமா?
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.