வாருங்கள்!

வாருங்கள், Keyan20, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில் 14:32, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

கொஞ்சம் மிதமாக

தொகு

கேயன், உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி :-) கலைகளஞ்சியமென்றாலே கொஞ்சம் அடக்கி வாசிப்பது வழக்கம். (ஆங்கில விக்கியில் உங்களுடன் பலரும் விவாதம் செய்வதிலிருந்து உணர்ந்திருப்பீர்கள்). எ. கா “விருது அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.” என்பதை “விருது அளிக்கப்பட்டது” என்று எழுதினால் போதும். விருது வழங்கப்படுவதே கெளரவிக்கத்தான் (அதனால் தானெ அதை விருது என்கிறோம் ;-)). ஒருவரைப்பற்றி எவ்வளவு குறைவாக மிகைச்சொற்களை பயன்படுத்த முடியுமோ அவ்வளவு குறைவாக பயன்படுத்துவோம். முக்கியமாக தப்பித் தவறியும் கூட கலைக்களஞ்சியக் கட்டுரையில் ரசிகர் தள வாடையடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். --சோடாபாட்டில் 14:39, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

நண்பரே புரிகிறது. இது என்ன சோதனை. நாம் எது செய்தாலும் அது வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறதே. ஏன்?
என்னவோ போ இனி பார்த்துக்கொள்கிறேன். மிக்க நன்றி !!! --Keyan20 14:58, 20 அக்டோபர் 2010 (UTC)Reply
சோதனை இல்ல கேயன். கலைக்களஞ்சியத்துக்கும் பிற தளங்களுக்குமான வித்தியாசம். கலைகளஞ்சியம் என்றாலே நடையில் ஒரு மிதவாதம் இருப்பது வழக்கம் (விக்கிப்பீடியா மட்டுமல்ல, பிரிட்டானிக்கா, பழைய கலைகளஞ்சியங்கள் எல்லாவற்றிலும் இதே வழக்கம் தான்).--சோடாபாட்டில் 15:14, 20 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Keyan20&oldid=615499" இலிருந்து மீள்விக்கப்பட்டது