பயனர் பேச்சு:Mariano Anto Bruno Mascarenhas/தொகுப்பு 2
உரையாடல்களின் தொகுப்பு |
---|
போக்குவரத்து
தொகுவாருங்கள் Mariano Anto Bruno Mascarenhas, நல்வரவு. போக்குவரத்து பேச்சுப் பக்கத்தில் உங்கள் பங்களிப்புகள் நன்று. ஒரு சிறிய விடயம் நீங்கள் புது கலைச் சொற்களை பரிந்துரக்கும் போது ஏனயவர்களின் பரிந்துரைகளை நிக்காதிகள். அப்படி நிக்குவதாயின் உங்கள் கருத்தை பேச்சுப் பக்கத்தில் இட்டு பின்னர் யாரும் முரன்படாவிட்டால் திருத்தலாம். மேலும் அப்பக்கத்தில் உள்ள பெரும்பாலன செற்களைC.R.Selvakumarதான் ஆக்கியிருந்தார். அவரிடமும் கலந்துரையாடுவது நல்லது. மேலும் பிழை என நீங்கள் கருதினாலும் அதை நீக்காமல் <del></del> அடையாளம் மூலம் வெட்டிக் காட்டுங்கள்--டெரன்ஸ் 22:56, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
- Please see [1]I have not removed any word. Also in the talk page [2] :I have not deleted any word I just capitalised the words and wikified
- Please tell me whether I have done anything wrong [3]
புருனோ மஸ்கரனாஸ் 02:35, 17 ஆகஸ்ட் 2006 (UTC) மன்னிக்கவும் 198.62.10.100 என்ற பயனர் தான் இதனை செய்துள்ளார். உங்கள் பெயரும் இவ் ஐபியும் பக்கத்தில் வர மாற்றி பதிந்து விட்டேன்.--டெரன்ஸ் 04:48, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
தனி தமிழ் இயக்கம்
தொகுதமிழில் இருக்கும் பிற மொழி வார்த்தகளை கண்டு , அவற்றுக்கான தூய தமிழ் வார்த்தகளை புழக்கத்தில் கொண்டு வருவதற்காக மறைமலைஅடிகளால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் , தனி தமிழ் இயக்கம்.
பிற மொழி சொற்கள் - தூய தமிழ் சொற்கள்
கர்ணம் - காது
கும்பம் - குடம்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
சந்திரன் - மதி/நிலவு
சத்ரு - பகை
சப்தம் - ஒலி
சிநேகம் - நட்பு
சூரியன் - பகலவன்/ஆதவன்
நிசப்தம் - அமைதி
ப்ருஹதீஸ்வரர் - பெருவுடையார்
பந்தம் - உறவு
பௌர்ணமி - முழுமதி
மத்தியானம் - நன்பகல்
ராத்திரி - இரவு
லட்சியம் - இலக்கு
ஜன்மம் - பிறப்பு
ஜீவன் - உயிர்
ஆனந்தம் - மகிழ்ச்சி
ஆதாரம் - அடிப்படை
கேசம் - முடி
சௌக்கியம்/சுகம் - நலம்
சௌகரியம் - வசதி
நாஷ்டா - சிற்றுண்டி
பாதம் - அடி
பாலன் - சிறுவன்
புஷ்பம் - பூ
வாகனம் - வண்டி
விரதம் - நோன்பு
நமஸ்காரம் - வணக்கம்
அபிப்ராயம் - எண்ணம்
உஷார் - எச்சரிக்கை
சந்தோசம் - மகிழ்ச்சி
ஜாஸ்தி - அதிகம்
கம்மி - குறைவு
கஷ்டம் - சங்கடம்
வைத்தியம - மருத்துவம்
புத்தகம் - நூல்/ஏடு
சந்திரன் - திங்கள்
சூரியன் - ஞாயிறு
சத்ரு - எதிரி
மத்திய - நடு
ராஜா - அரசன்
ஜென்மம் - வாழ்க்கை
ஜெயம் - வெற்றி
ஜாச்தி / அதிகம் - நிரம்ப
ஆயுதம் - கருவி
பிரார்த்தனை - வேண்டுதல்
சக்தி - வலிமை
உபயோகம் - பயன்பாடு
உத்தியோகம் - பணி/வேலை
அதிகாலை - விடியற்காலை
நாகரிகம் - பண்பாடு
சுதந்திரம் - விடுதலை
மத்தியானம் - நண்பகல்
ராத்திரி - இரவு
ஊர்களின் தூய தமிழ் பெயர்கள்
தொகுதூய தமிழ் பெயர் - பிற மொழிப்பெயர்
மறைக்காடு - வேதாரண்யம்
நாவலம்பொழில் - ஜம்புதீவு
புளியங்காடு - திண்டிவனம்
கீரிமலை - நகுலேஸ்வரம்
குரங்காடுதுறை - பித்தலம்
பழமலை, திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
திருநெய்ததானம் - தில்லை ஸ்தானம்
திருவுச்சி - சிவகிரி
மாதொருபாகன் - அர்த்தநாரீஸ்வரர்
புள்ளிருக்குவேளுர் - வைத்திருசுவரன் கோயில்
திருநாணா - பவானி
திருநல்லம் - கோனேரிராசபுரம்
தில்லை - சிதம்பரம்
மயிலாடுதுறை - மாயுூரம், மாயவரம்
திருப்பருப்பதம் - சிறீசைலம்
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
கடவுள்களின் தூய தமிழ் பெயர்கள்
தொகுதூய தமிழ் பெயர் - பிற மொழிப்பெயர்
பெருவுடையார் - பிரகதீஸ்வரர்
பிறவிமருந்திறைவர் - பவஒளஷதீஸ்வரர்
ஐயாற்றார் - பஞ்சநதீஸ்வரர்
பற்றிடங்கொண்டார் - வான்மீகநாதர்
கூடுதுறையார் - சங்கமேஸ்வரர்
தடங்கண்ணி - விசாலாட்சி
திருச்சுற்று - பிரகாரம்
திருமுற்றம் - சாந்தி
கருவுண்ணாழி - கற்பக்கிரகம்
பல்குடுக்கை நன்கணியார் - பக்குடுக்கச் சாயனா
இடகலை - இடா
பிங்கலை - பிங்களா
சுழிமுனை - சூட்சுமானா
வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மீனவத் தலைவர்கள்
தொகு19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செம்படவர்கள், கடலோடிகள், மீனவர்கள் என்று அழைக்கப்பட்டு வரும் பரதர் / பரதவர் (Parathar / Bharathar / Paravar / Paravan / Parathavar) என்ற இனத்தாரின் மேன்மை.
நெல்லை மாவட்டத்தில் நீண்ட கடற்கரைப் பகுதியில் கடலை நம்பி நீண்ட காலம் தொழில் நடத்துபவர்கள் பரதவர்கள். இவர்களின் ஊர்த்தலைவர்கள் “பட்டம்கட்டிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். கடற்கரை ஊர்கள் அனைத்திற்கும் இவர்களே தலைவர்களாக இருந்து வந்தார்கள். இவர்களை அந்தக் காலத்தில் சாதித்தலைவர்கள் என்று அழைத்தார்கள். இந்தத் தலைவர்களின் தலைநகர் தூத்துக்குடி. இவரது பதவி பரம்பரையாக வருவதாகும். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மன்னர்கள் என்று கூறலாம். குடும்பத்தின் மூத்த மகனே இந்த பதவிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவர்.
பட்டாபிஷேகம்
தொகுஇவர்கள் பதவி ஏற்கும் விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. அதை பட்டாபிஷேக விழா என்றே குறிப்பிடுவர். பரத நல வரலாற்று ஆசிரியர் திரு. M.X. மிராண்டா இந்த விழாவைப் பற்றி வர்ணிக்கையில் “ஜாதித்தலைவர்கள் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் குருவின் கரத்தால் ஆசீர் பெற்றுக்கொள்வர். பிறகு மகிமையுடன் அரியணை ஏறி அமர்வர். அவர்களது துணைவர்கள் செலுத்தும் இறையை பெற்றுக்கொள்வர். இந்த முடிசூட்டுவிழாவைத்தொடர்ந்து கோலாகலப்பவனி நடக்கும். தங்கப் பல்லக்கில் தலைவர் அமர்ந்துவர தீவட்டிகள், பாவாடை, குடை சுருட்டிகள், யானைகள், வாத்தியங்கள், பல்வேறு இசைக்கருவிகள் தாரை, தப்பட்டை என இத்யாதி அம்சங்கள் ராஜபவனிக்கு அழகு செய்யும். இதை தூத்துக்குடியில் இதுவரை கண்டுபிடிக்காத ஒரு கல்வெட்டில் பட்டாபிஷேகம் என குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்து அதிசயித்தேன்.
நடை பாதையில்
தொகுதூத்துக்குடியில் புனித பீற்றர் ஆலயம் புராதனமானது. இங்கு இன்று வழிபாடு எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆலயம் இருந்த தெருவே பீற்றர் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது (சிலுவைக்கோவில் பின்புறம்). இங்குள்ள கல்லறைத்தோட்டம் அழிக்கப்பட்டு இங்கு இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன (St. O’Lasalle). இங்குதான் கேள்வி கேட்பாரில்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு பல புதிய உண்மைகளைச் சொல்கின்றன.
அதிசய செய்திகள்
தொகுதமது 36வயதில் காலமான (1835) ஜார்ஜ் ரெண்டோ என்னும் குருக்களைப் பற்றியது ஒரு கல்வெட்டு. இவரது பெயரை வைத்து இவர் போர்த்துக்கீசியர் என்று முடிவு செய்யலாம். பரத குலத்தின் முதல் குரு 1894-ல் தான் தோன்றினார் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இவர் வெளி நாட்டவராக போர்த்துகீசியராகவே இருக்க வேண்டும். கல்லறை கல்வெட்டு பகுதியில் எண்ணை பூசியும் மாலைகள் அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் (தூத்துக்குடியிலுள்ள) மறக்குடித் தெரு, பீற்றர் கோவில் தெரு, பெரிய கடைத் தெரு கத்தோலிக்க மக்கள் பல்வேறு கோரிக்கைகள் நோய் தீர்த்தல், ஆண் குழந்தை வேண்டி இன்னும் பிரார்தனை செலுத்தி வருகிறார்.
சகோதரர்கள் வசிக்கும் விடுதியின் நுழைவாயிலில் கல்லறை கல்வெட்டு ஒன்று நடைபாதையாக பயன்பட்டு வருகிறது. அதனால் அதிலுள்ள எழுத்துக்கள் மிகவும் கெட்டுப் போய் காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் தமிழ்ப்பகுதியில் மெய் எழுத்துக்களுக்கு புள்ளி இல்லை. இந்த கல்வெட்டின் காலம் கி.பி. 1808. இதன் வாசகம் இப்படி இருக்கிறது.
“மதுரைக்கடல் துறை முதல் தலங்களிலுண்டாகி பரதர் ஜாதிகட்கெல்லாம் ஜாதித் தலைமையென்றதானத்திற்கு மிகவும் யோக்கியமுள்ளவராகி இருந்த வி.வி.டோம் கபிரியேல்தா குருவாஸ் கோமாஸ் அவர்கள் பிறந்தது 1753-ம் வருடம் மார்கழி மாதம் 3-ம் தேதி,. அவர்களுக்கு சாதித்தலைமை என்ற பட்டாபிஷேகம் சூட்டினது 1779-ம் வருடம் ஆடி மாதம் 10-ம் உ அவர்கள் தெய்வமானது 1808 தைமீ 11-ம் தேதி” என்றும் அவரது மனைவியின் மறைவு குறித்தும் செய்திகள் உள்ளன. சி.சி. சிஞ்ஞோர் சாதித் தலைவருக்குரிய அடைமொழி, இது போர்ச்சுக்கீசியர் சொல் என்பதை கவனிக்க வேண்டும்.
தங்கத்தேர்
தொகுதூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்கத்தேர் முதன் முதலாக ஓடியது 1806-ம் ஆண்டுதான். அந்த தங்கத் தேரை செய்தவரும் இவர்தான் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ!
ஊமைத்துரைக்கு ஆயுதங்கள் தந்து உதவிய மீனவத்தலைவன்
தொகுவெள்ளையன் எதிர்ப்பு உணர்வுகள் நெல்லை மாவட்டத்தில் தான் முதலில் தோன்றியது. இந்த எதிர்ப்பில் கட்டபொம்மன் அவனுக்குப்பின்னர் ஊமைத்துரை இவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக அதிசயத்தக்கது. பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பி வெள்ளையர்களாள் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பெரும் மனித சக்தியைத் திரட்டி ஒரு வாரத்திற்குள் கட்டினான். அந்த கோட்டையின் அமைப்பு வெள்ளையர்களால் பெரிதும் பேசப்பட்டது. அதைத் தகர்ப்பது அவர்களுக்குச் சாமானியமானதாக இல்லை. தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளால் அதை நொருக்க முடியாத நிலையில் திருச்சியிலிருந்து அவர்களின் இஞ்ஜினியர்கள் வர வழைக்கப்பட்டு கோட்டையை ஆராய்ந்தார்கள். பின்னர் அதை தகர்க்க வேண்டுமானால் 12 பவுண்டர் பீரங்கி தான் வேண்டுமென்று அதை திருச்சியிலிருந்து கொண்டு வந்தார்கள். பெரும் முயற்சியால் கோட்டை தகர்க்கப்பட்டது. கோட்டைக்குள் சென்று பார்க்கும் போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான போர் வீரர்களின் சடலங்களை ஒரு குவியலாக மலை போல் கிடந்ததை பார்தேன் என போர்க்கள தளபதி ஜெனரல் காலின்ஸ் தனது குறிப்பில் எழுதி வைத்துள்ளார். ஊமைத்துரையிடம் துப்பாக்கிகள் மற்றும் நவீன ஆயுதங்கள் இருந்தன என்றும் அவை எப்படி கிடைத்தது என்பது புதிராகவே உள்ளது என்றும் ஆங்கிலத் தளபதி வியந்து கூறியுள்ளார். அந்த அளவிற்கு உதவிகள் அற்ற வீரனுக்கு உதவிகள் செய்தது யார் என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. ராஜய்யன் அவரது "South Indian Rebellion" என்ற ஆய்வு நூலில் இரண்டாவது [[பாஞ்சாலங்குறிச்சி]ப் போரை நடத்திய ஊமைத்துரைக்கு உதவி செய்தவர்களைப் பற்றிக் கூறும் போது “கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவர்கள் என்றழைக்கப்படும் பரவர்கள் தங்களுடைய ஜாதித் தலைவர் (அல்லது) தலைவர் வழி நடந்த விடுதலைப் போரில் பங்கு கொண்டதோடு, துப்பாக்கி மற்றும் அதன் உபகரணங்களான மருந்துப் பவுடர்களையும் சப்ளை செய்தனர்”
மேலும் “காடல்குடியில் நடந்த ஆங்கிலேயர் எதிர்ப்புக் கூட்டத்தில் சாதித்தலைவர் கலந்து கொண்டதாக குறிப்பிடுகிறார். ராமநாதபுரத்தைச் சார்ந்த மேலப்பன் திருநெல்வேலியைச் சார்ந்த நாகராஜ மொனிகர் மற்றும் தூத்துக்குடியிலுள்ள ஜாதித்தலைவர் மூவரும் சேர்ந்து கூட்டம் நடத்தினார்கள். அவர்களுடைய நோக்கங்கள் எல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இதன் முழு விபரம் தெரியமுடியவில்லை.
டாக்டர் ராஜய்யன் சாதித்தலைவர் கல்வெட்டில் கூறப்படும் சாதித்தலைவர் (மேலே விவரித்துள்ள) தாம் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஊமைத்துரை தலைமையில் நடந்த பாஞ்சலங்குறிச்சி யுத்தம் 1801-ல் நிகழ்ந்தது. கல்லறைக் கல்வெட்டின்படி 1808 வரை இவர் சாதித்தலைவர் பதவி வகித்திருக்கிறார். ஆகையால் கால அடிப்படையின் படி பார்க்கும் போது வெள்ளையர் எதிர்ப்பில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்று கருதலாம்.
மதுரை கடல்துறை என்று கடற்கரைப் பகுதிகள் சில அழைக்கப்பட்டன என்பது கல்வெட்டில் முதல் வரியிலிருந்து தெரிகிறது. காலமானார் என்பதை தெய்வீகமானார் என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதனை இக்கல்வெட்டால் அறிகிறோம்.
Few Pages
தொகுhttp://ta.wikipedia.org/wiki/பயனர்:Mariano_Anto_Bruno_Mascarenhas/Articles