பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1

நன்றி. கட்டுரை சிறப்பாக உள்ளது. அஞ்சல் கோடு என்பதை அஞ்சல் குறியீட்டு எண் என்று மாற்ற விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 20:06, 29 மார்ச் 2016 (UTC)

பூஜை என்பதை அனைத்துக் கட்டுரைகளிலும் பூசை என்றே ஒரு மாதிரியாகக் குறிக்கலாம்.
ஏற்கனவே உள்ள கோயில் கட்டுரைகளை நாம் வழங்கியுள்ள ஆவணத்தின் (இந்த ஆவணம் கோயிலின் நிருவாகத்தால் வழங்கப்பெற்றவை ஆகும்) அடிப்படையில் ஒரு மாதிரியாக மாற்றலாம்.
ஒரே கோவிலுக்கு இரண்டு வெவ்வேறு தரவுகள் இருப்பின் அவற்றை தனியாகப் பிரித்து ஒப்பிட்ட பின் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 20:14, 29 மார்ச் 2016 (UTC)

6 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் - 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் - என்றிருக்க வேண்டும். தகவல் சட்டத்திலும் மாற்றம் வேன்டும். மேலும், குறிப்பிட்ட இக்கட்டுரை ஏற்கனவே திருமழபாடி வைத்தியநாதர் கோயில் என்ற தலைப்பில் உள்ளது. எனவே இரன்டு கட்டுரைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏராளமான கட்டுரைகளை உருவாக்கி விட்டு பின்னர் இணைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.--Kanags \உரையாடுக 01:25, 30 மார்ச் 2016 (UTC)

@பரிதி, பூஜை என்பது அரசுத் தரவில் இருந்த தகவல். அவற்றை எப்படித் தானியக்கத்திலேயே மாற்றுவது என்று பார்க்கிறேன். @Kanags ஆமாம் ஏற்கனவே உள்ள ஒரு கோவிலை எடுத்துச் சிக்கலைச் சுட்டிக்காட்டவே மாதிரிக் கட்டுரை எழுதியுள்ளேன். மேலும் சிக்கல்கள் குறித்து இங்கே காணலாம்.-நீச்சல்காரன் (பேச்சு)

கட்டுரை வடிவு நன்று. ஊராட்சி கட்டுரைகளைப் போலன்றி கோவிலுக்கு கோவிலுக்குத் தரவுகள் மாறுவதால், அனைத்து வகை தரவுகள், அவற்றின் இன்மையைக் காணும் வகையில் இன்னும் சில மாதிரிக் கட்டுரைகளை உருவாக்குதல் நன்று. தரவு வேறு. உரை நடை வேறு. எனவே, பூஜை -> பூசை போன்ற நடை மாற்றத்தில் சிக்கல் இல்லை. பத்து, அதற்கு கீழே உள்ள எண்கள் எழுத்துகளால் எழுதுவது வழமையான நடை. 6ஆம் நூற்றாண்டு என்பதற்குப் பதில் ஆறாம் நூற்றாண்டு என எழுத வேண்டும். இந்த எண் -> எழுத்து மாற்றத்தை நிரலில் கொண்டு வர முடியுமா? http://dev.neechalkaran.com/p/sulaku.html கொண்டு தரவுகளை ஆய்ந்து அடிக்கடி வரும் சொற்களுக்கு உள்ளிணைப்புகள் தரலாம். அவற்றுக்குத் தனிக்கட்டுரைகள் உருவாக்கலாம். இன்னும் பல மாதிரிக் கட்டுரைகளைக் கண்ட பின் உரை திருத்தங்களைப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 15:23, 30 மார்ச் 2016 (UTC)

கட்டுரை நல்ல வடிவமைப்பில் உள்ளது. ஒரு வாக்கெடுப்பினை நடத்தி 38800 கட்டுரைகளையும் தரவேற்றம் செய்யலாமே!--Thamizhpparithi Maari (பேச்சு) 06:05, 4 மே 2016 (UTC)Reply

கட்டுரை வடிவம் நன்றாக உள்ளது. ஆலய அமைப்பு என்ற துணைத்தலைப்பை திருக்கோயில் அமைப்பு என்று மாற்ற விழைகின்றேன். அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 13:49, 4 மே 2016 (UTC)Reply

@Neechalkaran: எனது மேற்கண்ட கருத்தைக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:00, 5 மே 2016 (UTC)Reply

விக்கித்தரவு

தொகு

அண்மையில் நடைபெற்ற விக்கி நுட்பப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஓர் ஒப்படை :) இக்கோயில் குறித்த விவரங்களை விக்கித்தரவில் சேர்க்க முனைவோமா? பல்வேறு வகை கோயில்களுக்கான கூற்றுகள், பண்புகளை உருவாக்கினோம் என்றால் கட்டுரைகளின் பதிவேற்றத்துடன் விக்கித்தரவிலும் தரவுகளைச் சேர்க்கலாம். கவனிக்க: @மதனாஹரன், Neechalkaran, Balurbala, Tshrinivasan, Info-farmer, and Aathavan jaffna: --இரவி (பேச்சு) 09:30, 7 மே 2016 (UTC)Reply

ஒப்படை?   செய்வோம். --மதனாகரன் (பேச்சு) 01:44, 8 மே 2016 (UTC)Reply
நான் தயார். ஒப்படை    --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:50, 8 மே 2016 (UTC)Reply
செய்வோம். பொதுவான கூற்றுகள், பண்புகளை இங்கே பட்டியலிடலாமா? த.சீனிவாசன் (பேச்சு) 16:49, 8 மே 2016 (UTC)Reply

@மதனாஹரன், Tshrinivasan, and Aathavan jaffna: மகிழ்ச்சி :) தொடர்ந்து முன்னேற இங்கு வாருங்கள்.--இரவி (பேச்சு) 06:04, 11 மே 2016 (UTC)Reply

உரை திருத்தம் தொடர்பான கருத்துகள்

தொகு

@Neechalkaran: மேலும் சில மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. உரை திருத்தம் கருத்துகள் பின்வருமாறு:

  • கோவில், கோயில் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு சொல்லை அனைத்துக் கட்டுரைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
  • Infobox Mandir க்குப் பதில் தகவற்சட்டம் நாடு போன்று முழுக்க தமிழாக்கிய Infobox Hindu temple வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும். இப்படித் தமிழாக்கிய வார்ப்புருக்கள் பயன்படுத்துவதால் விக்கித்தரவு உள்ளிட்ட பிற இடங்களில் ஏதேனும் சிக்கல் வருமா என்று பார்க்க வேண்டும். தமிழாக்க உதவியும் தேவை. கவனிக்க: @Kanags, AntanO, and மதனாஹரன்:
  • அருள்மிகு, திரு (திருக்கோயில் என்ற இடத்தில்) போன்ற முன்னொட்டுகளை நீக்கலாம்.
  • தனியே இருப்பிடம் என்ற துணைத்தலைப்பு தேவையில்லை. அதில் உள்ள அஞ்சல் குறியீடு, சட்டமன்ற / பாராளுமன்றத் தொகுதி விவரங்களை தகவற் பெட்டியிலேயே சேர்த்து விடலாம்.
  • கோயில் வகைப்பாடு பற்றிய தகவல் கோயில் அமைப்பு பற்றிய பகுதியில் வர வேண்டும். அறங்காவல் தன்மை பற்றிய தகவல் இதோடு இணைந்து கோயில் அமைப்பு பற்றிய பத்தியின் இறுதியில் வர வேண்டும்.
  • பகுப்பு:இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் போன்று பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை ஒரே பகுப்பின் கீழ் கொண்டு வருதலைத் தவிர்க்கலாம். இத்திட்டப்பணியின் ஒருங்கிணைப்பைக் கவனிக்க பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம் போன்ற மறைமுக நிருவாகப் பகுப்பைப் பயன்படுத்தலாம்.
  • http://dev.neechalkaran.com/p/sulaku.html கொண்டு இத்தரவில் அதிகம் பயன்படும் சொற்கள் பட்டியலைத் தர வேண்டுகிறேன். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா நடைக்கு ஏற்ப இச்சொற்கள் இருப்பதை உறுத்திப்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, சன்னதி, சுவாமி போன்ற சொற்கள் பல முறை இடம் பெறுகின்றன. இது போல் இன்னும் பல வடமொழிச் சொற்கள் கட்டுரைகளில் இடம்பெறுவது, நாம் இது வரை கவனமாக மேற்கொண்டு வரும் நல்ல தமிழ் நடைக்கு மாறாக அமையும். --இரவி (பேச்சு) 07:46, 9 சூன் 2016 (UTC)Reply


பகுப்பு:இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் என்ற பிரதான பகுப்பினுள் (கட்டுரைக்குத் தேவையில்லை) இடவாரியாக துணைப்பகுப்புக்கள் அமைப்பதும் நன்று. (எ.கா: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள்) --AntanO 08:02, 9 சூன் 2016 (UTC)Reply
தாமதமான அலோசனைக்கு மன்னிக்கவும்.
  1. பெரும்பாலான சிவாலயங்களுக்கு மாவட்ட வாரியாக பகுப்புகள் உண்டாக்கப்பட்டுவிட்டன. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்திற்கு பகுப்பு:அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள் என்ற தலைப்பில் பகுப்புள்ளது.
  2. இக்கட்டுரைக்கு தலைப்பினை திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில் என்று இடுதல் நலம்.
  3. சைவ சமய கோவில்களுக்கு தகவற்சட்டம் சிவாலயம் என்பதை பயன்படுத்தினால் கூடுதல் விவரங்களை இணைக்க முடியும்.
  4. சைவ சமய கோவில்களுக்கு இவற்றையும் பார்க்க பகுதியில் {{வலைவாசல்|சைவம்|boxsize=50}}, வைணவக் கோயில்களுக்கு {{வலைவாசல்:வைணவம்|boxsize=50}} போன்றவற்றை இணைக்க முடிந்தால் சிறப்பு.
  5. ஏறக்குறைய 40000 கட்டுரைகள் என்பதால் பதிவேற்றப்படும் கட்டுரைகளுக்கு ஒரு சில வகைமுறையில் பட்டியல் கட்டுரைகளை அமைத்தால், பார்த்து திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். எ.டு தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:53, 10 சூன் 2016 (UTC)Reply
சிவன் கோவில்கள் என்று இல்லாமல் அனைத்து இடத்திலும் சிவாலங்கள் என்றே பொதுவாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அனைத்துக் கட்டுரையிலும் இவற்றையும் பார்க்க என்ற பகுதி தேவை தேவையில்லை, அதற்குப்பதில் அந்தந்த மாவட்ட சைவ, வைணவப் பகுப்புகளில் இட்டுக் கொள்ளலாம் என நினைக்கிறேன். கோவில் தலைப்பைப் பொறுத்தவரை அரசுத் தரவில் உள்ள பெயரை அவ்வாறே பயன்படுத்தவுள்ளேன்(அதுதான் தற்போதைக்குச் சாத்தியமும் கூட). கிடைக்கும் தரவின் அடிப்படையில் பட்டியல் கட்டுரையை இறுதியாகத் தானியக்கத்தில் செய்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 01:37, 10 சூலை 2016 (UTC)Reply

தரவுகள் சரி பார்ப்பு

தொகு

//ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் முதலாம் ஆதித்ய சோழன் காலத்தைச் சேர்ந்தது// என்று வருகிறது. ஆனால், முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி 871 - 907 என்று அறியமுடிகிறது. பயனர்:Neechalkaran/பெரம்பலூர் பிரகதீஸ்வரர் மற்றும் லெட்சுமி நாராணயப்பெருமாள் கோயில் கட்டுரையில் உள்ள தரவு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துக் கோயில் என்கிறது. ஒரு வேளை, முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்டு பதினெட்டாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதா? இது போன்ற தரவு முரண்களை எப்படி எதிர்கொள்வது? இத்தகைய பழமையான கோயில்களுக்கு, குறைந்தது அவற்றின் காலத்தை உறுதி செய்ய மாற்று தகவல் மூலங்கள் உள்ளனவா? @பா.ஜம்புலிங்கம்:--இரவி (பேச்சு) 08:56, 9 சூன் 2016 (UTC)Reply

சரிபார்க்க முடியாததால் எந்த அரசர் காலம் என்ற தகவல்களைத் தவிர்க்கலாம் என்று நினைத்தால் மீதியுள்ள பல அரசர்கள் பற்றிய தகவல்களையும் இழக்க நேரும். அதனால் உள்ளதை உள்ளவாறே இடுகிறேன். பின்னர் யாரும் ஒப்பிட்டு மாற்றிக் கொள்ளலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 01:47, 10 சூலை 2016 (UTC)Reply

திருத்தம்

தொகு

//காமிக ஆகமத்தின் படியுள்ள இக்கோவிலில்// என்று இருப்பதை "காமிக ஆகம விதிகளுக்கு ஏற்ப அமைந்துள்ள இக்கோவிலில்" என்றும், // படி எடுக்கப்பட்ட கோவில் கல்வெட்டு உள்ளது.// என்று இருப்பதை "இக்கோவிலில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது" என மாற்றினால் நல்லது. ---மயூரநாதன் (பேச்சு) 17:50, 21 சூலை 2016 (UTC)Reply

மாதிரிக் கட்டுரையைத்  திருத்தியுள்ளேன். மகா விஷ்ணுவைத் திருமால் என மாற்றலாம். மற்றவர் கருத்துகளைக் கேட்டு முடிவு செய்யலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு)
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".