Saran 12345
வாருங்கள், Saran 12345!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
தமிழில் எளிமை
தொகுஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
இங்கே தொகுக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளும் அருமை. வாழ்த்துக்கள்.
மேலும், கட்டுரைகளில் உபயோகபடுதப்பட்டுள்ள வார்த்தைகள் - தமிழை சரியாக புரிந்து கொள்ள முடியாத வாறு அமைந்துள்ளன. செய்தி தாள்களில் வரும் தமிழ் வார்த்தைகளை காட்டிலும் மேம்பட்ட தரத்தில் இருப்பதால் - உடனடியாக பொருள் கொள்ள இயலாமை ஏற்படுகிறது. தயவு செய்து சாதரண தமிழை உபயோகப்படுத்தி கட்டுரை எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அதற்காக ஆங்கிலம் கலந்த தமிழ் உபயோகப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்றாடம் செய்தி தாள்களில் உப்யோகபடுத்தப்படும் தமிழை உப்யோகபடுத்தினால் போதும்.
அனைவரும் ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி வணக்கம்.
சரண், உங்கள் கருத்துகளுக்கு நன்றி. உங்கள் கருத்து கட்டுரைப் பக்கத்தில் இருந்ததால் அதை இங்கு நகர்த்தி இருக்கிறேன். நீங்கள் இட்ட பக்கத்தை அழிக்க வேண்டி வரும். உங்கள் கருத்து குறித்து மற்றவர்கள் இங்கு கருத்து தெரிவிப்பார்கள் என்று நினைக்கிறேன். விக்கிப்பீடியா குறித்த உங்கள் பாராட்டுக்கு நன்றி. இயன்ற அளவு எளிய தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமும். குறிப்பாக உங்களுக்கு எந்தெந்த சொற்கள் புரியவில்லை என்று சொன்னால் அவற்றுக்கான மாற்றுச் சொற்களைப் பயன்படுத்த முயல்வோம். எனினும், முழுக்க செய்தித் தாள் தமிழில் எழுதுவது இயலாது. ஏனென்றால் நீங்கள் பள்ளியில் படிக்கும் பாட நூலுக்கும் செய்தித் தாளுக்கும் வேறுபாடு உண்டு தானே? விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் அது ஓரளவு பாட நூல் தொனியிலேயே எழுதப்படும். பலருக்கும் அறிமுகமாகாத புதிய சொற்கள் குறித்து தேவையான விளக்கங்களைத் தர முயல்கிறோம்--ரவி 08:11, 9 மே 2008 (UTC)
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. எங்கு எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் இடத்தைச் சுட்டி காட்டுங்கள், கட்டாயம் திருத்தி எளிமைப்படுத்தலாம். எளிமையாகவும், நன்றாக புரிந்து கொள்ளுமாறும் இருக்கவேண்டும் என்பதே இங்கு பலருடைய கருத்து. அன்றாடம் செய்தி ஊடகங்களிலே இருப்பது போல் இருப்பதை விட படித்தால் எளிமையாக புரிந்துகொண்டு பயன்படுமாறு இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள். கலைக்களஞ்சிய நடை செய்தி ஊடகங்களின் நடையில் இருந்து சற்று வேறுபட்டு இருப்பது இயல்புதானே. ஆனால் அதே நேரத்தில், கடுமையாகவோ, புரியாத நடையாகவோ இருப்பது கூடாது. புதிய சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் தேவைக்கேற்ப வருவதும் இயற்கை. ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல்லை எதிர்கொண்டால் எப்படி அனுகுகிறோமோ, அதே கண்ணோட்டத்தோடு தமிழில் பலர் அணுகுவதில்லை என்பது என் கணிப்பு. எப்படியாயினும், நீங்கள் எங்கு சற்று எளிமையாக இருக்கலாம் என்பதைச் சுட்டி, அந்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடலாமே. நன்றி.--செல்வா 12:26, 9 மே 2008 (UTC)
நன்றி திரு செல்வா மற்றும் ரவி அவர்களே.
நான் குறிப்பிட்டது பொதுவான கருத்து மட்டுமே. திரு செல்வா குறிப்பிட்டதை போல புதிய தமிழ் வார்த்தைகளை படிக்கும்போது சற்று கடினமாக இருந்தாலும் அதை புரிந்துகொள்ள மேலும் தெரிந்து கொள்ள முயலுகிறேன்.
உங்கள் உடனடி கருத்திற்கு எனது நன்றிகள் பல. - சரவணன் திருப்பூர்