மாணவர்களுக்கு எவ்வாரான கட்டுரைகளை வழங்களாம். தொகு

“கட்டுரை என்பது ஒரு பொருள் பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி கோர்வையாக எழுதுவதே ஆகும்” என்று க. சொக்கலிங்கம் அவர்கள் ‘கட்டுரை பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியம் படைக்க பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இவ்விலக்கியங்களுக்கும் கோவை’, எனும் தமது நூலில் குறிப்பிடுகிறார். இவரின் கருத்துப்படியே கட்டுரை தர்க்க வெளிப்பட்டிற்கும் தகவல் பறிமாற்றத்திற்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகிறது. கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பத்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை. தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல் போன்ற பண்புகள் ஒரு கட்டுரையில் பேணப்பட வேண்டும். கட்டுரை அளவில் சிறியதாக இருக்கும். கட்டுரையில் அதன் ஒழுக்கமே அதன் இலக்கணமாய் இருக்கும்.கட்டுரையில் வடிவம் எந்த வரையறைக்கும் உட்படாது போலவே, அதன் உள்ளடக்கமும் வரையறைக்கு உட்படாமல் பரந்தப்பட்டே இருக்கும். கட்டுரை விரிவாகவும் இருக்கலாம் அல்லது சுருக்கமாகவும் இருக்கலாம் ஆனால் ஒரு நூலைப் போன்று விரிந்துக்கொணடே செல்லக்கூடாது. கருத்துச் செறிவும் தெளிவும் தொடர்ச்சியும் அமையப்பெற்றிருப்பதே ஒரு சிறந்த கட்டுரையின் அமைப்பாகும். ஆ. ஒரு சிறந்தக் கட்டுரையைப் படைக்க மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் கட்டுரை வரைதல் என்பது நாம் புதியதாகத் தொடங்கும் ஒரு வேலை கிடையாது. நாம் ஒன்றைப் பற்றி முன்னரே நமக்குத் தெரிந்தவற்றை ஒழுங்குபடுத்திக் கோர்வையாக எழுதுதலே கட்டுரையாதலால், அது தொடரப்படும் ஒரு வேலையாகும்.ஆகவே, கட்டுரைக் கலையில் முதல் வேலை நாம் பல துறைகளைப் பற்றிய பல தகவல்களைத் தெறிந்து வைத்திருத்தல் வேண்டும். இதனைத் தரவுகளைச் சேகரித்தல் என்றும் உரைப்பர். பெரும்பாலும் இன்றைய கட்டுரையின் தலைப்புகள் நடைமுறை பிரச்சனைகளைப் பற்றியதாக இருப்பதால் மாணவர்கள் நாட்டு நடப்புகளை அறிந்திருத்தல் சிறப்பாகும். மாணவர்கள் தங்கள் கட்டுரைகளுக்கு வேண்டிய தரவுகளை மூன்று வழிகளில் சேகரிக்கலாம். அவை, கற்றல், கேட்டல், கவனித்தல் ஆகியன. கற்றல் என்பது மாணவர்கள் கற்றறிந்து பெறக்கூடிய தகவல்களாகும். அஃதாவது, ஆசிரியர்கள் வகுப்புக்களில் தரும் குறிப்புக்கள், நாளிதழ், சஞ்சிகை, இணையத்தளம், போன்ற தகவல் சாதனங்கள் தரும் தகவல்கள், புத்தகங்கள், கட்டுரைத் தொகுப்பு நூல்கள், ஆய்வுகள் போன்றவற்றைப் படித்து, அதன்மூலம் கிடைக்கப்பெறும் பொது விசயங்களை மாணவர்கள் தெரிந்துக் கொள்ளுதல் ஆகும். கேட்டல் என்பது மேற்கூறிய கற்றலின் மூலம் தெரிந்துக் கொள்ள அல்லது காண முடியாத பல செய்திகளை, அறிவிலும் அனுபவத்திலும் மூத்த அறிஞர்களைக் கொண்டு கேட்டு தெளிந்துக் கொள்ளுதல் ஆகும். இது கரணம் வழி கிடைக்கப்பெறும் செய்தியாதலால், இதனைப் பற்றி அறிவியல்பூர்வமாகவும் அனுபவப்பூர்வமாகவும் ஆராய்ந்து தெரிந்து, தெளிந்துக் கொள்ளுதல் சிறப்பிற்குறியது. கவனித்தல் எனப்படுவதோ, மேற்கூறிய இரு வழிகளிலும் அறிய முடியாதவற்றை மாணவர்கள் தாமே கவனித்தறிதல் ஆகும். கவனித்தல் என்பது கல்விக்கு இன்றியமையாதது. இதுவரை நமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்துமே எவரோ கவனித்து, ஊகித்தறிந்து, அதன்வழி அறிவுபெற்று, பின்பு நமக்குச் சொல்லியது ஆகும். இப்படி இதுவரை பிறர் கவனியாத அல்லது பிறர் கவனித்தும் கிட்டாத தகவல்களை நாம் சொந்தமாகக் கவனித்தறிதல் பிழையாக. இன்றையக் கட்டுரைகள் பொதுவாக சமயம், அறிவியல், விழா, சமூகம், திரைப்படம், இசை, சிறுகதை, நிகழ்ச்சி, இணையம், தத்துவம், பயணம், இலக்கியம், செய்யுள்/பழமொழி, புகைப்படம், இலக்கணம், உள்நாடு, வரலாறு, கட்டுரை, பிறநாடு, நூல், கலாச்சாரம், சட்டம், விமர்சகம், கலை, அனுபவம், அரசியல், தொழில், பொருளாதாரம், மருத்துவம், தகவல், தொழில்நுட்பம், விளையாட்டு, கணக்கியல், மொழி, உணவு, உடல், புவியியல்/இயற்பியல், போக்குவரத்து, தொழில்நுட்பம், விலங்கியல், கதை, விண்வெளி, இடம், பொருள், அன்பு / காதல், பயம் (உணர்ச்சி) போன்ற பல துறைகளைச் சார்ந்து வருகிறது. எனவே, மாணவர்கள் மேற்கூறிய துறைகளைப் பற்றிக் கூடுதலாக இந்த கற்றல், கேட்டல், கவனித்தல் ஆகிய வழிகளின் மூலம் வேண்டிய தரவுகளைச் சேகரித்துக் கொள்ளுதல் சிறப்பைப் பயக்கும்.

இப்படியாக மாணவர்கள் கட்டுரைக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்தப் பின்னர் எழுத்துப் பயிற்சி செய்வது அவசியம். கட்டுரை எழுதுதல் என்பது ஒரு சிறந்த கலை. இக்கலையை ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என செய்ய இயலாது. இதற்கான பல பயிற்சிகளை மேற்க்கொண்ட பின்னரே இதனை நம்மால் சிறந்த முறையில் படைக்க இயலும்.

மேலும், இதுபோன்ற பயிற்சிகளை மேற்ககொள்ளும் போது நமது பலம், பலவீனம் ஆகியவற்றை நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும். அதாவது குறித்த நேரத்திற்க்குள் மாணவர்களால் தங்கள் கட்டுரைகளை எழுதி முடிக்க முடிகிறதா இல்லையா என்று தெரியும். இக்கட்டுரைப் பயிற்சியை பலவிதமான தலைப்புக்களைக் கொண்டு நாம் எழுதி பழகினால், அது நமது கட்டுரைத் திறனையும் அறிவையும் மென்மேலும் வளர்க்கும்.

இதன்பிறகு, மாணவர்கள் பயிற்சிக்காக அல்லாது உண்மையாகவே ஒரு சிறந்த கட்டுரையை எழுதத் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய சில முக்கியமான வேலைகளுள், முதன்மையானது தாம் எழுதவிருக்கும் கட்டுரையின் தலைப்பைக் கவனித்தல் ஆகும். அஃதாவது அந்த தலைப்பின் பொருள் என்ன, அந்த தலைப்பு எதனை வேண்டுகிறது, அதன் கருப்பொருள் யாது, போன்றவற்றை நன்குணர்தல் வேண்டும். பின்னர், தலைப்பில் குறிக்கப்பெறும் சொற்களின் பொருளையும் சரியாய் உணர்தல் வேண்டும். சிலர் தலைப்பின் எழுத்தைக் கவனித்தும் பொருளைக் கவனிப்பதில்லை. உதாரணத்திற்கு, ‘குழவி வளர்ப்பு’, என்பதை ‘குளவி வளர்ப்பு’, என்றும் ‘கல்லாமை’, என்பதனை ஒரு வகை ஆமையென்றும் பொருட்பிறழ கருதிவிடுகின்றனர். இதுபோன்ற பிறழ்வுணர்ச்சிக்கு எண்ணாமையும் சொல்லறியாமையுமே காரணமாக அமைவதாக ஞா.தேவநேயப் பாவாணர் தமது ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதுபோன்று தலைப்பைக் சரிவரக் கவனியாது மாணவர்கள் கட்டுரை படைப்பின், அக்கட்டுரை ஒரு சிறந்தக் கட்டுரையாக நிற்காது பிழையாய் போகும்.

இதன்பின்னர், மாணவர்கள் அக்கட்டுரையின் அமைப்பினைப் புரிந்துக் கொள்ளல் அவசியம். அஃதாவது, அக்கட்டுரையை எந்த வடிவத்தில் நாம் அமைக்கவிருக்கிறோம் என அறிதல் வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல நாம் எழுதவிருக்கும் கட்டுரை, கதை, கருத்தியல், அறிக்கை, கடிதம், உரை, உரையாடல், செய்தி, சொற்போர் போன்ற பதினொன்று வகைக் கட்டுரையில் எவ்வகையைச் சார்ந்தது என்று தலைப்பை அல்லது கட்டளையைப் பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இப்படி தலைப்பின் தேவைகளையும் கருப்பொருளையும் தெளிந்த பின்னர், மாணவர்கள் கட்டுரைக்குறிய கருத்துக்களைச் சேகரிக்கத் தொடங்கலாம். கருத்துக்கள் தேடும் பொழுது, முதலில் மாணவர்கள் தங்களுக்குத் தோன்றிய கருத்துக்களையெல்லாம் குறித்துக் கொண்டு, பின்பு இக்கருத்துக்கள் கட்டுரையின் தலைப்புக்கும் கருப்பொருளுக்கும் ஏற்றதாக அமைகிறதா இல்லையா என ஆராய்ந்த பின்னரே அதனை கருத்தாக ஏற்பது நன்று. இதன் பின்னர், அக்கருத்துக்களை முக்கியத்துவ அடிப்படையிலும் கால, ஏரண முறைப்படியும், சீர்ப்படுத்தி அமைத்து அதற்கேற்றார்ப்போல் சட்டகம் அமைத்துக் கொள்ள வேண்டும். இச்சட்டகத்தை மாணவர்கள் தாங்கள் மட்டும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிய முறையில் அமைத்தல் நேரத்தை மிச்சப்படுத்தும். நிறைவான கருத்துக்கள் இருந்துவிட்ட போதிலும் அக்கருத்துக்களைத் தகுந்த கருப்பொருளுடன் புகுத்தி எழுதினால் மட்டுமே அப்படைப்பு சிறந்ததொரு படைப்பாக விளங்கும். இத்திறமை மாணவர்களிடையே இருத்தல் அவசியம்.

இதன்பின்னரே மாணவர்கள் கட்டுரை எழுத்தத் தொடங்க வேண்டும். எழுதவிருக்கும் கட்டுரையை அதன் அமைப்புமுறைக்கேற்றவாறு தொடங்குதல் அவசியம். அதாவது, முன்னுரை அல்லது பீடிகை, கருத்துக்கள், முடிவுரை என வரிசைக்கிரமாக அமைய வேண்டும்.

கட்டுரை எழுதும்போது மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்

	குன்றக் கூறல். குறித்தப் பொருளை விளக்குவதற்கு வேண்டிய சொற்களினுங் குறைவுபடச் சொல்லுதல். குறித்தப் பொருளைப் பற்றி கொஞ்சமாகக் கூறுதல்.
	கட்டுரையில் மையத்தொடர் இல்லாமை. தெளிவற்ற சிந்தனையால் சொல்ல வந்த கருத்தை துல்லியமாகச் சொல்ல தவறி விடுகின்றனர். கட்டுரையின் சாரத்தை மையத்தொடரின் மூலம் தெளிவுபடுத்த தவறிவிடுகின்றனர்.
	ஏரணத்தொடர்பற்ற முறையில் கருத்துக்கள் கூறப்பட்டிருத்தல். கட்டுரையில் கூறப்படும் கருத்துக்கள் ஒன்றையொன்று தொடர்பற்ற நிலையில் இருத்தல்.
	கருத்தொழுங்கு – புறவொழுங்கு. ஒவ்வொறு பத்தியும் தனித்தனியே வெவ்வேறு கருத்துக்கள் பற்றிப் பேசுவது போல் தோன்றும். இதன் காரணம் என்னவென்றால் பத்திகளுக்கிடையே ஓர் இணைப்பு இல்லாமையால்.
	இலக்கணப்பிழைகள். அதிகமான இலக்கண பிழைகளைச் செய்வதால் தவறான கருத்தை உறுவாக்கிவிடுகிறது.
	முறையான சட்டகமின்றி கட்டுரை உருவாக்கப்படுதல். எடுத்த எடுப்பில் கட்டுரையை எழுதுவது. இதனால் பல சிக்கல்களை மாணவர்கள் எதிர்நோக்குகின்றனர்.   
	முகவுரையும் முடிவுரையும் கவரும் வகையில் இல்லாமற் போதல். கவர்ச்சியற்ற முகவுரையும் முடிவுரையும் கட்டுரை படிப்போரின் ஆர்வத்தை மழுங்கச்செய்துவிடும். சிறப்பான புள்ளிகள் கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. 
	சொற்களின் வரையறை. மிகக் குறைவஅக எழுதினால் எழுதுவோர்க்குப் போதுமான விவரங்கள் இல்லை என்று கருத்தினை உறுவாக்கிவிடும் 
	மிகைப்படக் கூறல். குறித்தப் பொருளை விளக்குவதற்கு வேண்டும், சொற்களினும் மிகுதியாகச் சொல்லுதல். குறித்த பொருளைப்பற்றி அதிகமாகக் கூறுதல் மற்றக் கருத்துக்களை விட்டுவிடுதல்.
	கூறியது கூறல். சொன்ன பொருளையே திரும்பச் சொல்லுதல்.
	மாறுக்கொளக் கூறல். முன்னுக்குப் பின் முரண்படக் கூறல்.
	வழ உச்சொற் புணர்தல். குற்றமுள்ள அல்லது தவறான சொற்களை அமைத்தல். எ.கா. தவக்களை,நாக்காலி,ரொம்ப போன்றன.
	மயங்கவைத்தல். பொருள் தெரியாமல் மயங்கவும், பொருள் இதுவோ அதுவோ என ஐயுறவும் வைத்தல்.
	வெற்றெனத் தொடுத்தல். பொருட்சொறிவில்லாமல் வெறுமையாகச் சொற்களையமைத்து இடத்தை நிரப்புதல்.
	மற்றொன்று விரித்தல். சொல்லத் தொடங்கிய பொருளைப் பற்றிச் சுருக்கமாகவும் வேறொருப் பொருளைப் பற்றி விரிவாகவும் சொல்லுதல்.
	சென்றுதேய்ந்திறுதல். சிறப்பாகத் தொடங்கிப் போகப்போகச் சொற்சுவையும் மற்றும் பொருட்சுவையும் குன்றி கட்டுரையின் சுவாசிரியம் தோய்ந்து போகக்கூடிய நிலை.
	நின்று  பயனின்மை. ஒரு சொல்லோ தொடரோ பகுதியோ ஒரு பயனுமின்றி நிற்றல். அதாவது பயன்படுத்தக்கூடிய சொற்கள் அல்லது வாக்கியம் பொருள் பொதிந்தாக இல்லை என்பதாகும். 

முடிவுரை பொதுவாக கட்டுரை என்பது ஒரு தவலை நாலம் எழுத்தின் மூலம் பிறருக்கு அடையாளம் காட்டுவது ஆகும். வாக்கிய அமைப்புகளும், பிழை நீக்கமும், பத்தியமைப்பும், குறியீடுகளும் தெரிந்துக்கொண்டால் மட்டும் இனிய கட்டுரை எழுத முடியும். ஒருவருக்கு நல்ல மொழி இலக்கன அறிவு, இருந்தால் மட்டும் சிறப்பான கட்டுரையை இயற்ற முடியாது. பிழையில்லாமல் நல்ல இலக்கண முறையில் ஒரு கட்டுரை எழுதவே, அழகிய இனிய நடையில் இலக்கண வரம்புக்கு உட்பட்ட நல்ல தமிழ் உரைநடை நூல்களை படித்தல் வேண்டும். அதிகமான வாசிப்பு சிறந்த கட்டுரை எழுதுவதற்குப் பேருதவியாக இருக்கும். கட்டுரையாகப்பட்டது படிப்போரின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும், எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் இருத்தல் அவசியம். மாணவர்களை, தங்களுக்கு புரியும் வண்ணம் கட்டுரை எழுத வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும். ஒருவரின் கட்டுரை படைப்பு சிறப்பானதாகப் போற்றப்பட வேண்டுமானால் அங்கு நல்ல சொல்வளம். வாக்கிய செறிவு, தரமிக்க கருத்துக்கள், முதிர்ச்சி, சொற்குற்றம், பொருட்குற்றமின்மை ஆகியவற்றை உட்கொண்டிருப்பது அவசியமாகும். மேலும், கட்டுரையானது காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றம் கண்டு சமுதாயத்தை விழிப்புணர்ச்சி செய்யும் பாங்கினை வகிக்க வேண்டும். எனவே, மாணவர்கள் இதுபோன்று ஒரு தரமிக்கதொரு கட்டுரையப் படைத்து, இலக்கணத் தமிழின் மூலம் இலக்கியம் வளர்ப்போம். அதற்கு ஆசிரியர்களாகிய நாம் ஒரு தூண்டுகோளாக இருப்போம்.

வாருங்கள்!

வாருங்கள், Sudaroli, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:34, 29 சூன் 2014 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றிReply

வணக்கம், Sudaroli!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:34, 29 சூன் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sudaroli&oldid=1685840" இலிருந்து மீள்விக்கப்பட்டது