பரஜன்யா
பரஜன்யா (சமக்கிருதம்: पर्जन्य) வேதங்களின் படி மழை, இடி, மின்னல் மற்றும் பூமியை வளமாக்கும் இந்து தெய்வம் ஆவார். இவர் வானத்திற்கும் சொர்க்கத்திற்கும் தெய்வமான இந்திரனின் வேதத்தில் குறிப்பிடப்பட்ட வடிவமாவார்.[1][2]
விளக்கம்
தொகுபர்ஜன்யா என்பவர் பசுவின் மடியாக உருவாக்கப்படுத்தப்படுகிறார். மழை பசுவின் பாலைக் குறிக்கிறது. மேலும், இவர் சில நேரங்களில் இந்திரனால் கட்டுப்படுத்தப்படும் மழை தரும் ஒரு மிருகமாக கருதப்படுகிறார். இடி இவரது கர்ஜனையாக கருதப்படுகிறது. இவர் வேகமாக வளரும் அம்பு அல்லது நாணல் புற்களின் தந்தை ஆவார். இவர் கவிஞர்களின் பாதுகாவலராகவும், நெருப்பின் எதிரியாகவும் கருதப்படுகிறார்.[3]
அர்த்தங்கள்
தொகு1965 சமசுகிருத-ஆங்கில அகராதி படி, பர்ஜன்யா என்பதன் பொருள்
- மழை மேகம், இடி மேகம், பொதுவாக ஒரு மேகம்
- மழை (பகவத் கீதை அத்தியாயம் 3 ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)
- மழையின் தேவர் கடவுள் அதாவது இந்திரன்
இலக்கியம்
தொகுரிக் வேதத்தின் மூன்று பாடல்களான 5.83,7.101 மற்றும் 7.102 ஆகியவை பர்ஜன்யாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. வேத சமஸ்கிருதத்தில் பர்ஜன்யா என்றால் "மழை" அல்லது "மழை மேகம்" என்று பொருள்.[4] பர்ஜன்யாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனைகள் அதர்வண வேதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளன.[5] மான்வந்தராவில் சப்தரிஷிகளில் (ஏழு பெரிய முனிவர்கள்) பர்ஜன்யாவும் ஒருவர். இவர் 12 ஆதித்தர்களில் ஒருவர் மற்றும் விஷ்ணு புராணத்தின் படி, கார்த்திக்கை மாதத்தின் பாதுகாவலர், ஹரிவம்சத்தில் ஒரு காந்தர்வர் மற்றும் ஒரு முனிவர்.[6]
பிற தெய்வங்கள்
தொகுஇவர் பௌத்த இலக்கியத்திலும் தோன்றுகிறார். தேரவாத பௌத்த நியமத்தில், இவர் பஜ்ஜுனா என்று அழைக்கப்படுகிறார். மேகங்கள் மற்றும் வானிலை மீது கட்டுப்பாட்டைக் கொண்ட வசவலஹாக தேவர்களின் மன்னராக இவர் உள்ளார். இவருக்கு கோகோக்கனடா என்ற மகள் உள்ளார்.[7] ஸ்லாவிக் பெருன், லித்துவேனியபெர்குனாக்கள், லாத்விய பெர்கோன்ஸ் மற்றும் பின்னிய பெர்கெலே "இடி கடவுள்", கோதிக் பேர்குனி "மலை" மற்றும் மோர்ட்வின் புர்ஜினெபாஸ் போன்ற பல்வேறு இந்தோ-ஐரோப்பிய கடவுள்களுடன் இந்த தெய்வத்தை அடையாளம் காணலாம்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ MacDonell, Arthur Anthony (1995). Vedic Mythology - Arthur Anthony Macdonell - Google Książki. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120811133.
- ↑ Gonda, Jan (1969). Aspects of Early Viṣṇuism - Jan Gonda - Google Książki. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120810877.
- ↑ Vedic Mythology - Nagendra Kr Singh - APH Publishing, Jan 1, 1997
- ↑ Prayer.. Atharvaveda, translated by Ralph T.H. Griffith, 1895, Book 4: Hymn 15, A charm to hasten the coming of the rains.
- ↑ Fifth interval of Manu Vishnu Purana, translated by Horace Hayman Wilson, 1840, Book III: Chapter I. p. 262-263, In the fifth interval the Manu was Raivata: the Indra was Vibhu: the classes of gods, consisting of fourteen each, were the Amitábhas, Abhútarajasas, Vaikunthas, and Sumedhasas: the seven Rishis were Hirańyaromá, Vedasrí, Urddhabáhu, Vedabáhu, Sudháman, Parjanya, and Mahámuni.
- ↑ Parashara...In the month of Kártik they are Parjanya, Bharadwája, (another) Viswávasu, Viswáchí, Senajit, Airávata, and Chápa Vishnu Purana, translated by Horace Hayman Wilson, Book II: Chapter X. p. 233, Names of the twelve Ádityas. Names of the Rishis, Gandharbhas, Apsarasas, Yakshas, Uragas, and Rákshasas, who attend the chariot of the sun in each month of the year. Their respective functions...
- ↑ Mahāthero, Punnadhammo. "The Buddhist Cosmos: A Comprehensive Survey of the Early Buddhist Worldview; according to Theravāda and Sarvāstivāda sources" (PDF). Archived from the original (PDF) on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
- ↑ Parjanya means "the rain" or "the thunderer.. Songs of the Russian People, by W. R. S. Ralston, 1872, Chapter II: Section I.--The Old Gods. p. 87. The description of Parjanya is in all respects applicable to the deity worshipped by the different branches of the Slavo-Lettic family under various names, such as the Lithuanian Perkunas, Lettish Pērkons, the Old Prussian Perkunos, the Polish Piorun, the Bohemian Peraun, and the Russian Perun. There is resemblance also to the Finnic Mordvin / Erza thunder god Pur'ginepaz. According to a Lithuanian legend, known also to other Indo-European nations, the Thunder-God created the universe by the action of warmth—Perkunas wis iszperieje. The verb perieti (present form periu) means to produce by means of warmth, to hatch, to bear, being akin to the Latin pario, and the Russian parit' . In Lithuania Perkunas, as the God of Thunder, was worshipped with great reverence. His statue is said to have held in its hand "a precious stone like fire," shaped "in the image of the lightning," and before it constantly burnt an oak-wood fire. If the fire by any chance went out, it was rekindled by means of sparks struck from the stone. The Mordvin /Erza tradition has " Sparks fly from the cartwheels and the hooves of fiery-red horses of Pur'ginepaz, when he drives across the sky " (Yurtov, A. 1883. Obraztsy mordovskoi narodnoi slovesnosti. 2nd ed. Kazan. :129)