பர்வதராஜன்

பர்வதராஜன் என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் பர்வதகிரி எனும் மலையின் அரசனாவார். இவரது மனைவி மைனாவதி ஆவார். [1]

பர்வதம் என்றால் மலை என்று பொருளாகும். பர்வதகிரி என்பது மலைகளுக்கெல்லாம் மலை என்ற பொருள் தரக்கூடியது. பர்வதகிரி என்பது கையிலைக்கு வழங்கக்கூடிய மற்றொரு பெயராகும், இதனால் இமயத்தின் அரசன் என்று பொருள் கொள்ளும்படி இமவான் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

தட்சனின் மகள் தாட்சாயனியாக பிறந்த உமையம்மை, தட்சனின் யாகத்தில் விழுந்து மறைந்தார். அதன் பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள பர்வதராஜன் மைனாவதி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். அவர் பார்வதி என்று அழைக்கப்பட்டார்.[2]

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=34&Cat=3 சிவன் பார்வதி திருக்கல்யாணம் - தினகரன்
  2. http://kolu.freewebsitetoolz.com/2011/10/11/paarvathi-pirapu/ PAARVATHI PIRAPU Kolu
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வதராஜன்&oldid=1725367" இருந்து மீள்விக்கப்பட்டது