பற்றீசியா சூறாவளி
| ||||
---|---|---|---|---|
| ||||
தற்போதைய புயல் தரம் தரம் 4 (1-நிமி சராசரி) | ||||
தற்போதைய நிலவரம்: |
10:00 p.m. CDT October 23 (03:00 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் October 24) | |||
அமைவு: | மெக்சிக்கோவின் மான்சானில்லோவிலிருந்து ஏறத்தாழ 85 மை (135 கிமீ) NNW மெக்சிக்கோவின் புவர்ட்டோ வல்லார்தாவிலிருந்து ஏறத்தாழ 50 மை (75 கிமீ) SE | |||
காற்று வேகம்: |
115 kt (130 mph; 215 km/h) sustained (1-min mean) gusting to 140 kt (160 mph; 260 km/h) | |||
அமுக்கம்: | 946 பார் (அளவை) (27.94 பாதரச அங்குலம்) | |||
நகர்வு: | NNE at 17 kt (20 mph; 31 km/h) | |||
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க. |
பற்றீசியா சூறாவளி (Hurricane Patricia, எசுப்பானிய ஒலிப்பு: [paˈtɾisia]) மேற்கு மெக்சிக்கோவை தாக்கும் செயற்பாட்டிலுள்ள, வலிய ஆனால் வலுவிழந்து வருகின்ற, வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது அண்மைக்காலங்களில் மேற்கு அரைக்கோளத்தில் வளிமண்டல அழுத்தம் பொறுத்த மட்டில் வீசிய மிகவும் வலிதான வெப்பமண்டலச் சூறாவளி ஆகும். மிக உயர்ந்த தங்கு விரைவுக்காற்றைக் கொண்டளவில் இது உலகிலேயே மிக வலியதாகும்.[1] 2015 அக்டோபர் மத்தியில் டெகுயன்டெபெக் குடாவில் பரந்த காற்றழுத்தமாக துவங்கிய இது அக்டோபர் 20இல் வெப்ப மண்டலச் சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் மெதுவாக வலிவடையத் துவங்கிய இச்சூறாவளிக்கு பாட்றீசியா எனப் பெயரிடப்பட்டது. இது 2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலத்தில் பெயரிடப்பட்ட இருபத்து நான்காம் சூறாவளியாகும். தனிப்பட்ட சூழல்நிலைகளால் இது அக்டோபர் 22இல் பயங்கரமாக வலிவடைந்தது. நன்கு வரையறுக்கப்பட்ட மையம் உருவானது. பற்றீசியா 24 மணி நேரத்தில் வெப்ப மண்டலச் புயலிலிருந்து தரம் 5 சூறாவளியாக மாறியது. 1960களிலிருந்து இன்றுவரை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்ற இக்காலத்தில் மற்ற எந்த பசிபிக் சூறாவளியை விட மிக விரைவாக வலுவடைந்த சூறாவளியாக பற்றீசியா உள்ளது. இதற்கு முன்னால் 1997இல் வீசிய லிண்டா சூறாவளிதான் இதற்கு இணையான விரைவில் வலுடைந்தது.
இச்சூறாவளிக்கு முன்னோடியான மழையால் நடு அமெரிக்க நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டது. பற்றீசியாவால் ஆயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக குவாத்தமாலாவில், பாதிக்கப்பட்டுள்ளனர். எல் சால்வடோரில் நால்வரும், குவாத்தமாலாவில் ஒருவரும், நிக்கராகுவாவில் ஒருவருமாக குறைந்தது ஆறு பேராவது இறந்துள்ளனர்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Dennis Mersereau (October 23, 2015). "At 200 MPH, Hurricane Patricia Is Now the Strongest Tropical Cyclone Ever Recorded". The Vane (Gawker Media). http://thevane.gawker.com/at-200-mph-hurricane-patricia-is-now-the-strongest-tro-1738224692. பார்த்த நாள்: October 23, 2015.
வெளி இணைப்புகள்
தொகு- The National Hurricane Center's advisory archive for Hurricane Patricia
- The National Hurricane Center's advisory graphics archive for Hurricane Patricia
- ReliefWeb for Hurricane Patricia