பலராம்பூர், சத்தீஸ்கர்

பலராம்பூர் (Balrampur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கில் அமைந்த பலராம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான இராய்ப்பூருக்கு வடக்கே 441 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பல்ராம்பூர்
பல்ராம்பூர் is located in சத்தீசுகர்
பல்ராம்பூர்
பல்ராம்பூர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்ராம்பூர் நகரத்தின் அமைவிடம்
பல்ராம்பூர் is located in இந்தியா
பல்ராம்பூர்
பல்ராம்பூர்
பல்ராம்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°36′18″N 83°37′01″E / 23.605°N 83.617°E / 23.605; 83.617
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்பலராம்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,456
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, சர்குஜா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
497119
தொலைபேசி குறியீடு எண்07831
வாகனப் பதிவுCG-30
இணையதளம்balrampur.gov.in

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 343 அம்பிகாபூர், இராமானுஜகஞ்ச் வழியாக ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா நகரத்துடன் இணைக்கிறது.

பலராம்பூர் நகரத்தின் அருகமைந்த தொடருந்து நிலையம் அம்பிகாபூர் மற்றும் கர்வா ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 15 வார்டுகளும், 972 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 4,456 ஆகும். அதில் ஆண்கள் 2,330 மற்றும் பெண்கள் 2,126 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 115 மற்றும் 1,665 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.77%, இசுலாமியர் 15.55%, கிறித்தவர்கள் 10.73%, மற்றும் பிறர் 1.95% % ஆகவுள்ளனர்.[1]இந்நகர்த்தில் இந்தி மொழி, சர்குஜா மொழி பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்பூர்,_சத்தீஸ்கர்&oldid=3514607" இலிருந்து மீள்விக்கப்பட்டது