பலூன் (2017 திரைப்படம்)
பலூன் (Balloon) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் சினிஸ் சரவணனால் இயக்கப்பட்டு திலிப் சுப்பராயன், அருண் பாலாஜி, மற்றும் நந்தகுமார் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட படமாகும்.[1] இத்திரைப்படத்தில் ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு சூன் 2016 இல் தொடங்கியது. 29 திசம்பர் 2017 இல் திரைக்கு வந்தது.[2] இத்திரைப்படம் வசூல்ரீதியாக சராசரியான வெற்றியைப் பெற்றது.
பலூன் | |
---|---|
இயக்கம் | சினிஸ் ஸ்ரீதரன் |
தயாரிப்பு | திலிப் சுப்பராயன் அருண் பாலாஜி நந்தகுமார் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜெய் அஞ்சலி ஜனனி ஐயர் |
ஒளிப்பதிவு | ஆர். சரவணன் |
படத்தொகுப்பு | ரூபண் |
கலையகம் | 70எம்எம் எண்டர்டெய்ன்மெண்ட் அண்ட ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ் |
விநியோகம் | அவுரா சினிமாஸ் |
வெளியீடு | திசம்பர் 29, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- ஜீவானந்தம் (ஜீவா), சார்லி மற்றும் ஜெய் ஆக ஜெய்
- ஜாக்லினாக அஞ்சலி
- செண்பகவல்லியாக ஜனனி ஐயர்
- பாண்டாவாக (நந்தா பாபு)யோகி பாபு
- சமுதாயத்தலைவராக நாகிநீடு
- பாதிரியார் ஆண்ட்ரூசாக ஜாய் மேத்யூ
- அடியாளாக ராமச்சந்திரன் துரைராஜ்
- ஆரோக்கியமாக கார்த்திக் யோகி
- ஜீவாவின் மருமகனாக செல்வன் ரிசி
- சார்லியின் மகளாக செல்வி மோனிகா
- ஜீவாவின் சகோதரனாக சுப்பு பஞ்சு அருணாச்சலம்
- போஸ்டர் நந்தகுமார்
- பி. எல். தேனப்பன்
- திரைப்படத் தயாரிப்பாளராக கே. எஸ். ஜி. வெங்கடேஷ்
- ஜீவானந்தமாக ராஜ் தருண் (சிறப்புத் தோற்றம்)
- ஜீவானந்தத்தின் தோழியாக சாந்தினி தமிழரசன் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
தொகுமார்ச் 2016 இல், சினிஸ் இயக்கத்தில் ஒரு திகில் திரைப்படத்தில் நடிக்க நடிகர் ஜெய் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இந்த இயக்குநர் முன்னதாக என்றென்றும் (2014) என்ற திரைப்படத்தை இயக்கியவரும் கந்தசாமி என்பவரால் தயாரிக்கப்பட்டு முடங்கிப்போன, வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தில் தயாரிப்புப் பணிகளில் உதவியரும் ஆவார். ஜெய் இந்தப் படத்தில் மணம் முடித்தவராக வருகிறாரெனவும், அவர் மூன்று தனித்தனியான தோற்றங்களில வருகிறாரென்றும் தெரிவித்துள்ளார்.[3][4] முன்னதாக 2011 ஆம் ஆண்டில் அஞ்சலி ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்த போதிலும், அஞ்சலி இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சூன் 2016 இல் ஒப்பந்தமானார்.[5][6] சூலை 2016 இல் பலூன் என பெயரிடப்பட்டு தயாரிப்புப் பணியானது அதற்குப் பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.[7] ஆகத்து 2016 இல் இத்திரைப்படத்தில் நடிக்க ஜனனியும் ஒப்பந்தமானார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குநர் சினிஸ் தெரிவித்தார். முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு பிடித்தமான படமாக பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருவதாகவும், இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், பலூன் படத்தில் மெல்லிசையில் இனிமையான பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதாகவும் இதற்காக யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்ததாகவும், பலூன் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் என்ற நிகழ்ச்சியில் ஓவியாவால் உச்சரிக்கப்பட்டுப் புகழடைந்த "நீங்க சட் அப் பண்ணுங்க" என்ற தொடர் இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்தப் பாடல் அனிருத்தால் பாடப்பட்டு 28 ஆகத்து 2017 இல் வெளியிடப்பட்து. இந்நேரத்தில் அஞ்சலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இத்திரைப்படத்தின் விளம்பர நோக்கத்திற்காக இணைந்தார்.[8]
கதைக்களம்
தொகுதிரைப்பட இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க்கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வருகிறார். தான் தங்குவதற்காக ஒரு பெரிய பங்களாவைத் தேர்ந்தெடுத்து அதில் தங்குகிறார். அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார். ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. பேயுடன் விளையாடும் பப்புவை ஒரு கட்டத்தில் பேய் பிடித்துக்கொள்கிறது. பேய் தன்னைக் கொன்றவர்களை பலிவாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்தக் குழந்தை சொல்லும் 'செண்பகவள்ளி' என்பவரைத் தேடிப் போக அந்த ஆவி ஜாக்குலின் (அஞ்சலி) உடம்புக்குள் இறங்கி விடுகிறது. செண்பகவள்ளி யாரால் கொல்லப்பட்டாள்? ஏன் கொல்லப்பட்டாள்? தன்னைக் கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறாள்? இந்தக் கதைக்கும் பலூனுக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் பிற்பாதிக் கதை. கதை எழுதப்போன இடத்தில் நடைபெறும் இந்த விபரீதங்களையெல்லாம் மீறி ஜெய் பேய்க்கதை எழுதினாரா அதைப் படமாக எடுத்தாரா என்பது படத்தின் உச்சகட்ட காட்சி.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "When Jai was surprised on his birthday" (in en-US). Top 10 Cinema. 2017-04-08 இம் மூலத்தில் இருந்து 10 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170410133023/https://www.top10cinema.com/article/42109/when-jai-was-surprised-on-his-birthday.
- ↑ Balloon Movie released on 29 Dec 2017 - Review
- ↑ "Horror interests Jai too!". deccanchronicle.com. 25 மார்ச்சு 2016. Archived from the original on 26 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2017.
- ↑ Ramanujam, Srinivasa (24 March 2016). "Jai to sport three looks in next". பார்க்கப்பட்ட நாள் 7 December 2017 – via www.thehindu.com.
- ↑ "Anjali and Jai pair up again!". deccanchronicle.com. 17 சூன் 2016. Archived from the original on 26 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2017.
- ↑ "Jai, Anjali part ways — Times of India". indiatimes.com. Archived from the original on 2 செப்டெம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2017.
- ↑ "Jai Anjali movie title Balloon — Tamil Movie News — IndiaGlitz". indiaglitz.com. Archived from the original on 26 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2017.
- ↑ "Anirudh’s hand for Jai’s horror film" (in en-US). Top 10 Cinema. 2017-08-25 இம் மூலத்தில் இருந்து 26 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170826113919/https://top10cinema.com/article/43763/anirudhs-hand-for-jais-horror-film.
- ↑ http://www.bbc.com/tamil/arts-and-culture-42512432
- ↑ https://tamil.filmibeat.com/reviews/balloon-movie-review-050927.html