பல்ராம் நாயக்
பல்ராம் நாயக் (Balram Naik) என்று அழைக்கப்படும் பொரிகா நாயக் பல்ராம் (Porika Naik Balram) (பிறப்பு 6 சூன் 1964) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான 15 வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[2]
பொரிகா நாயக் பல்ராம் | |
---|---|
பதவியில் சூன் 2009 – மே 2014 | |
பின்னவர் | சீதாராம் நாயக் அஸ்மீரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சூன் 1964 மகபூபாபாத், ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர்(கள்) | திருப்பதம்மா திருமணம் ஆன நாள் 17 சூலை 1986 |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம்(s) | பஞ்சாரா குன்றுகள், ஐதராபாத் |
முன்னாள் கல்லூரி | ஐதராபாத்து, ஆந்திரப் பல்கைலக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டம் |
தொழில் | சமூக சேவகர், அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபல்ராம், வாரங்கலின் மதனபள்ளியில் கிராமப்புற பஞ்சாரா குடும்பத்தில் லக்ஷ்மன் நாயக் மற்றும் லட்சுமிக்கு மகனாகப் பிறந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
தொழில்
தொகுபல்ராம் நாயக் ஒரு காவல்துறையில் காவலராகப் பணியிலிருந்தார், பின்னர் 2009 ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வீட்டு மனை விற்றல் வாங்கல் தொழிலில் இருந்தார்.
இவர் 2009 ஆம் ஆண்டில் 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மஹபூபாபாத் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் தொழிலாளர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
2012 அக்டோபரில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவியேற்றார். இப்போது அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள்
தொகுஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்கான சமூகப் பணிகளில் பல்ராம் ஈடுபட்டுள்ளார் மற்றும் முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு தங்குமிடம் வழங்க முதியோர் இல்லங்களை நடத்தி வருகிறார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபல்ராம் நாயக்கிற்கு திருப்பதம்மா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 4 September 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Reddy Told to Avoid Repressive Means to Curb Protests | news.outlooki…". Archived from the original on 11 July 2012.
- ↑ 3.0 3.1 "Fifteenth Lok Sabha Members Bioprofile - Balram, Shri Porika Naik". Archived from the original on 20 August 2010. பார்க்கப்பட்ட நாள் 24 June 2010.