பல்லடம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]பல்லடம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பல்லடம் நகரத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,948 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 24,415 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஐம்பதாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் விவரம்:

 1. ஆறுமுத்தாம்பாளையம்
 2. சித்தம்பலம்
 3. கணபதிபாளையம்
 4. இச்சிப்பட்டி
 5. கே. அய்யம்பாளையம்
 6. கே. கிருஷ்ணாபுரம்
 7. கரடிவாவி
 8. கரைபுதூர்
 9. கோடாங்கிபாளையம்
 10. மல்லேகவுண்டன் பாளையம்
 11. மாணிக்காபுரம்
 12. பனிக்கம்பட்டி
 13. பருவாய்
 14. பூமலூர்
 15. புளியம்பட்டி
 16. செம்மிபாளையம்
 17. சுக்கம்பாளையம்
 18. வடுகபாளையம்புதூர்
 19. வேலம்பாளையம்

பல்லடம் ஒன்றியத்தை பிரிக்கும் நடவடிக்கைதொகு

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபது ஊராட்சிகள் அடங்கியுல்லதால் ஒன்றிய சேவைகளை பெற தொய்வு ஏற்படுகிறது.எனவே காமநாயக்கன் பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் காமநாயக்கன் பாளையத்தை சுற்றி உள்ள

 1. அனுப்பட்டி
 2. புளியம்பட்டி
 3. கே.கிருஷ்ணாபுரம்
 4. மல்லேகவுண்டன் பாளையம்
 5. கரடிவாவி
 6. பருவாய்

என ஆறு ஊராட்சிகளும் பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள

 1. கேத்தனூர்
 2. வாவி பாளையம்
 3. கள்ளிப் பாளையம்
 4. இளவந்தி வடுகபாளையம்
 5. வி.வடமலைப்பாளையம்

என நான்கு மொத்தத்தில் பதினோறு ஊராட்சிகள் பயன்பெறும். மேலும் இந்த ஊராட்சிகள் யாவும் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது முக்கிய காரணமாகும். இதன் மூலம் மக்கள் சுமார் பத்து கி.மீ - க்குள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் மக்கள் ஒன்றியம் மற்றும் காவல் நிலைய சேவைகளை ஒருங்கே பெற முடியும். எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
 2. 2011 Census of Tiruppur district Panchayat Unions