பழனிசாமி அட்டப்பாடி

பழனிசாமி, இருளர் பழங்குடியினரின் இருளர் நடனத்தில் மாஸ்டர். மேலும் கலைஞர்களில் ஒருவராகவும், மலையாள திரைப்படத் துறையில் ஒரு நடிகராகவும் இயங்கிவருகிறார் [1],[2]. அவர் கேரள பழங்குடி சமூகத்தின் இருள நடனத்தை நிகழ்த்தும் அட்டப்பாடியின் முக்கியக் குழுவான ஆசாத் கலா சங்கத்தின் தலைவராக உள்ளார் [3],[4],[5].இந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரான நஞ்சியம்மா, அய்யப்பனும் கோசியும் என்ற மலையாளத் திரைப்படத்தில் பாடிய 'கலக்கத்தா' பாடல் பல லட்சம் மக்களை சென்று சேர்ந்து பிரபலமானது [6].

பழனிசாமி
பிறப்புபெப்ரவரி 14, 1979 (1979-02-14) (அகவை 45)
அட்டப்பாடி, பாலக்காடு, கேரளம்
பணிநடிகர்
பெற்றோர்சுப்பிரமண்யன்
குப்பம்மா
வாழ்க்கைத்
துணை
ஷோபா
பிள்ளைகள்அனு பிரசோபினி, ஆதித்யன்

விருதுகளும் அங்கீகாரங்களும் தொகு

பழனிசாமி ஒரு புகழ்பெற்ற இருள நடனக் கலைஞர் . 2012 ஆம் ஆண்டு வயநாட்டின் வள்ளியூர்க்காவு மானந்தவாடியில் நடைபெற்ற தேசிய பழங்குடியினர் விழாவில் கேரள மாநிலத்தில் பின்தங்கிய சமூகங்களின் நலத்துறை அமைச்சர் பி.கே.ஜெயலட்சுமி விருது பெற்றார்[7] ,[8].2015 ஆம் ஆண்டு கேரள நாட்டுப்புற அகாடமியால் இளம் பிரதிபா என்னும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கான சிறப்பு விருதைப் பெற்றார்[9].கேரள வனத் துறையில் அலுவராகப் பணியாற்றும் பழனிசுவாமி 2018 ஆம் ஆண்டில் சிறந்த சேவைக்காக கேரள முதலமைச்சரின் சிறப்பு விருதையும் பெற்றிருக்கிறார். மும்பை, டெல்லி போன்ற இந்தியாவின் பல்வேறு பெரிய நகரங்களில் ஆசாத் கலா சங்கம் தனது இருள நடனத்தை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறது [10].

திரைப்படங்கள் தொகு

வ எண் வருடம் திரைப்படம் மொழி பாத்திரம் இயக்குநர்
1 2009 பழசிராசா மலையாளம் குரிச்சியா வீரன் ஹரிகரன்
2 2009 பாக்யதேவதா மலையாளம் சிறு பாத்திரம் சத்யன் அந்திக்காடு
3 2013 பூம்பாற்றகளுடெ தாழ்வாரம் [11]. மலையாளம் முத்து வி எம் அகிலேஷ்
4 2020 அய்யப்பனும் கோஷியும் மலையாளம் கலால் வரித்துறை ஆய்வாளர் சச்சி

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் அவர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடியில் உள்ள சொரியன்னூர் பழங்குடி கிராமத்தில் வசிக்கிறார். மனைவியின் பெயர் ஷோபா. அனு பிரசோபினி என்னும் பெண் குழந்தையும் ஆதித்யன் என்னும் ஆண்குழந்தையும் உள்ளனர். கேரள வனத்துறையின் மண்ணார்க்காடு கோட்டத்தில் அலுவலராகப் பணியாற்றுகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Attappadi’s popular folk music expert S Pazhaniswami -". 
  2. "Pazhani Swami -". 
  3. "Pazhani Swami and team from Attappady-Threeday national tribal festival at Nilambur -". 
  4. "Pazhani Swami and team from Attappady-VAJRA KERALAM FOLK FEST – IRULA DANCE -". 
  5. "Pazhani Swami -". 
  6. "Meet Nanjiyamma, the tribal artiste who is social media’s darling -". 
  7. "National Tribal Fest - Valliyurkavu, Mananthavady, Wayanad -2012 -". 
  8. "National Tribal Fest - Valliyurkavu, Mananthavady, Wayanad -2012 -". 
  9. "the Kerala Folklore Academy Award in 2015 -". 
  10. "VAJRA KERALAM FOLK FEST – IRULA DANCE". iffk.in. Archived from the original on 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-30.
  11. "Poombattakalude Thazhvaram-". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிசாமி_அட்டப்பாடி&oldid=3589624" இலிருந்து மீள்விக்கப்பட்டது