நஞ்சியம்மா
நஞ்சியம்மாள் (Nanjiyamma) அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளத் திரைப்படத்தின் தலைப்புப் பாடலைப் பாடி பார்வையாளர்களின் இதயங்களை வென்ற பழங்குடி கலைஞர் ஆவார்.[1][2][3] திரையரக்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பே தலைப்பு பாடலால் பாடகி நஞ்சியாம்மாளும் பிரபலமடைந்தனர். யூடியூப்பில் வெளியான பாடல் ஒரு மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட மக்களால் காணப்பட்டது. இந்தப் பாடலை நஞ்சியம்மாள் அவர்களே எழுதியுள்ளார். ஜாக்ஸ் பெஜாய் இசையமைத்தார்.[4][5]
நஞ்சியம்மாள் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சனவரி 1, 1960 அட்டப்பாடி,பாலக்காடு,கேரளம் |
விருதுகள்
தொகுஅய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் "கலக்காத" பாடலுக்காக இந்தியாவின் 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது நஞ்சியம்மாளுக்கு வழங்கப்பட்டது.[6] இவர் 2020 ஆம் ஆண்டில் கேரள மாநில திரைப்பட விருது நிகழ்ச்சியில்ன் சிறப்பு ஜூரி விருதைப் பெற்றார்.[7],[8].
கலைவாழ்வு
தொகுஇவரை ஆசாத் கலாசங்கத்தில் முக்கிய பாடகர் ஆசாத், அட்டப்பாடியை சார்ந்த பழனிசாமி ஆகியோர் வழி நடத்துகின்றனர். பழனிசாமி இப்படத்தில் திரைப்படத்தில் சுங்கவரித்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். நஞ்சியம்மாள் இயல்பாகவே பாடலை நேசிக்கக்கூடியவர், விவசாயம், கால்நடைகளை மேய்த்தல் போன்ற இயல்பான பணிகளை அம்மலைப்பகுதிகளில் இன்னும் நடத்திவருகிறார். நஞ்சியம்மாள் பாரம்பரியமாக மனதில் இருப்பவற்றை மடைதிறந்த வெள்ளம்போல் பாடக்கூடிய திறன் கைவரப்பெற்றவர். தனது முதல் பாடலை அகுடு நாயக (மாத்ரு மொழி) என்னும் ஆவணப்படத்தில் பாடினார். இந்த ஆவணப்படத்தை சிந்து சாஜன் (Sindhu Sajan) என்னும் பெண் இயக்குநர் இயக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை இந்த ஆவணப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.[9],[10] ,[11] கேரள அரசின் வாழ்வாதரத்திட்டத்தின் பரப்புரைப் பாடலை நஞ்சியம்மாள் இருள மொழியில் பாடினார். வரலாற்றில் முதன்முறையாக ஒரு மலையாளப் பாடல் இருளர் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது அப்போதுதான்.[12],[13] ,[14].
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடியிலுள்ள நக்குபதி பழங்குடி கிராமத்தில் வசிக்கிறார்.
இசைத்தொகுப்பு
தொகு2022 | உல்கானல் | "எலே லே லே" (பழங்குடி பாடல்) பாடல் வரிகளும் | |
---|---|---|---|
2022 | கையொப்பம் | "அட்டப்பாடி பாடல்" | |
2022 | செக்கன் | "அதுக்கு அந்தா" | |
2022 | ஈ. எம். ஐ. | "தெனா கொய்யானா" | |
2022 | நிலையம் 5 | "தக்கா தக்கா" | |
2020 | அய்யப்பனும் கோஷியும் | "அடாகச்சக்கோ (அறிமுகப் பாடல்" | ஜேக்ஸ் பெஜாய் |
"கலக்கத்தா" | |||
"தாலம் பொயி" | |||
2015 | வேலுதா ராத்ரிகல் | "ஏய் வனதி" | |
"மல்லிகா" | |||
"முட்டோலம் முண்டுதுத" | |||
"ஏய் காரடி" | |||
2015 | அக்ஜெது நயகா | "கக்கே டாகே" | மணக்கல குப்பாள கிருஷ்ணன் |
"கெலே டேஜ் கோகுந்தீ" | |||
"அக்கரே வந்த பச்சக்கிலியே" | |||
"லே லே கரடி" |
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2020 | அய்யப்பனும் கோஷியும் | கண்ணம்மாவின் தாய் | பாத்திரப் பெயர்ப்பற்று |
2020 | சுங்கன் | நஞ்சியம்மா | இசை காணொளி |
2020 | மாலிவுட் இளவரசர் பிருத்விராஜ் | நஞ்சியம்மா | இசை வீடியோ பாடகர் |
2021 | பயனம் | தன்னைத்தானே | இசை காணொளி |
2022 | செக்கன் | முத்தஸ்ஸி | |
2022 | ஈ. எம். ஐ. | பாடகர். | |
2022 | கையொப்பம் | ||
2022 | உக்கனால் | ||
2022 | பாதுகாவலர் ஏஞ்சல் | ||
2024 | மாயவனம் | பாடகர். | திரைப்படப் பாடல் |
தொலைக்காட்சி
தொகுநிகழ்ச்சி | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|
பம்பர் சிரி அகோசம் | மழவில் மனோரமா | |
நாட்டுப்பட்டு | ஜனம் தொலைக்காட்சி | |
பரயம் நெடம் | குமுதி | பங்கேற்பாளர் |
உப்பு மற்றும் மிளகு | குமுதி | வழங்குநர் |
ருசியத்ரா | சூர்யா | வழங்குநர் |
மதுரா பத்தினீட்டில் பிருத்வி | சூர்யா | விருந்தினர் |
கார்த்திகை தீபம் | ஜீ கேரளா | சிறப்புத் தோற்றம் தலைப்புப் பாடலுக்கான பாடகர் |
நஞ்சியம்மாவின் பழங்குடி கிராம உணவு | Umami@Kerala (யூடியூப் சேனல் | விருந்தினர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nanjiyamma-Tribal Artiste-Ayyapanum Koshiyum Song-".
- ↑ "Tribal woman from Attapadi to sing in Malayalam director Sachy's 'Ayyappanum Koshiyum-".
- ↑ "നിറഞ്ഞ ചിരിയോടെ ഹൃദയത്തിൽ നിന്നും നഞ്ചിയമ്മ പാടി; ഒരു കോടി കാഴ്ചക്കാർ-" (in ml).
- ↑ "Kalakkatha-Title Song-Ayyappanum Koshiyum - Prithviraj-Biju Menon - Sachy-Ranjith - Jakes Bejoy". YouTube.
- ↑ "60-year-old Nanjamma goes viral with song in Malayalam film 'Ayyappanum Koshiyum' which earned her the National Film Award for Best Female Playback Singer". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/60-year-old-nanjamma-goes-viral-with-song-in-malayalam-film-ayyappanum-koshiyum/article30750812.ece.
- ↑ "Best Female Playback Singer: Nanchamma-". www.thehindu.com.
- ↑ "Special Jury Award for Nanjamma-".
- ↑ "Special Jury Award for Nanjamma-".
- ↑ "Aggedu Nayaga (Mathrumozhi) by Sindhu Sajan -".
- ↑ "Nanjiyamma Songs-".
- ↑ "Nanjiyamma Songs-".
- ↑ "video of life mission housing -".
- ↑ "video of life mission housing-".
- ↑ "life mission -".