பழியன் மொழி
பழியன் தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 10,000 பேர்களால் பேசப்படுகிறது. இது பழயா, பழியான், பழயன், மலைப் பழியர், பொழியர், சேரமார் போன்ற பல பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. தமிழுடனான இதன் சொல்லொற்றுமை 75% உம், மலையாளத்துடனான சொல்லொற்றுமை 62% உம் ஆகும். மலப் புழையன் என்னும் இதன் கிளை மொழி ஒன்றுடன் இது 82% சொல்லொற்றுமை கொண்டுள்ளது. இம்மொழி பேசுவோர் தமிழில் நன்றாகப் பேசக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர். சிலர் மலையாள அறிவும் கொண்டுள்ளனர்.
பழியன் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளாவின் இடுக்கி மாவட்டம், பீர்மேடு தாசில், குமிழி, வண்டன்மேடு, சக்குப்பள்ளம் பஞ்சாயத்துகள்; எர்ணாகுளம், கோட்டையம் மாவட்டங்கள்; தமிழ்நாட்டின் மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை,திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்கள்; கர்நாடகம். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 9,500 (2001 census, e18) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pcf |
மொழிக் குறிப்பு | pali1274[1] |