பழையபள்ளி திருத்தலம், பள்ளியாடி

பழையபள்ளி திருத்தலம் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளியாடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் திருத்தலம் சமய நல்லினங்கத்திற்கு சாட்சியாக விளங்குகிறது. இத் திருத்தலத்தில் இந்துக்கள் தீபம் ஏற்றியும், கிறித்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் இசுலாமியர்கள் தூபமிட்டும் வழிபட்டு வருகின்றனர். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் திங்கள்கிழமை சம்பந்தி விருந்தும், அதற்கு முந்தின நாள் மத நல்லினக்க விழாவும் நடைபெறுகிறது. இத்திருத்தலம் நாகர்கோவிலில் இருந்து 25 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் உள்ளது.

வரலாறுதொகு

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாலயம் அமைந்திருக்கும் பகுதி காடுகள் நிறைந்ததாகவும் புலிகள் வசிப்பிடமாகவும் திகழ்ந்தது. அப்போது ஒரு மடத்திற்கு சொந்தமான இந்த நிலத்தை ஒரு குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இங்கிருந்த புளியமரத்தின் கீழ் செங்குத்தாக நின்ற கருங்கலில் அக்குடும்பத்தினர் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அம்மை அப்பனை குறிக்கும் வகையில் அதற்கு அருகில் இன்னொரு கல்லையும் நட்டு தீபம் எற்றினர். அம்மையும், அப்பனும் சேர்ந்து காணப்பட்டதால் காலப்போக்கில் பள்ளியப்பன் என்று பக்தர்கள் அழைக்க தொடங்கினர். இந்த நிலையில் அந்த பகுதியில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் மக்களை தாக்கி அதிகமான மக்கள் உயிரிழந்தபடியால் பயந்துபோன மக்கள் பள்ளியப்பன் திருத்தலம் சென்று வழிபட்டனர். உயிர்கள் பலியாவதை நிறுத்தினால் ஊருக்கெல்லாம் கஞ்சி காய்த்து ஊற்றுவதாக வேண்டினர். உயிர்கள் பலியாவது நின்றதால் மக்கள் தங்கள் வேண்டுதலை செலுத்தினார்கள். அன்று தொடங்கிய கஞ்சிதானம் இன்று அன்னதானமாக உருவெடுத்துள்ளது.

அன்னதானம்தொகு

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் திங்கள்கிழமை சம்பந்தி விருந்தும், அதற்கு முந்தின நாள் மத நல்லினக்க விழாவும் இங்கு நடைபெறுகிறது. மேலும் திருகார்த்திகை, கிறித்துமசு, சிவராத்திரி போன்ற விழகாக்களில் இங்கு ஏராளமான மக்கள் வழிபட வருகின்றனர். அனைத்து மதத்தினரும் வழிபடும் இத்திருத்தலத்தில் பக்தர்கள் காணிக்கையாக இனிப்பு, வாழைக்குலை, தேங்காய் போன்ற பொருட்களை கொடுக்கின்றனர்.

அணையா விளக்குதொகு

சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரமே இத்திருத்தலத்தின் கூரையாக திகழ்கின்றது. இங்கு கருங்கல்லில் ஏற்றப்படும் தீபங்கள் ஒருபோதும் அணைய விடாமல் பக்தர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

மேற்கோள்கள்தொகு

http://nagercoil.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/ http://nagercoil.blogspot.com/2009/03/16.html