பழைய இராணுவத் தலைமையகம், கொழும்பு

பழைய இராணுவத் தலைமையகம் (Old Army Headquarters, Colombo) என்பது இலங்கை தரைப்படையின் முன்னாள் இராணுவத் தலைமையக வளாகத்தைக் குறிக்கிறது. காலிமுகத் திடல் மற்றும் பாலதக்ச மாவத்தைக்கு (கீழ் ஏரி வீதி) அருகில் அமைந்துள்ள இந்த வளாகத்துக்கு பேரே ஏரி எல்லையாக உள்ளது. இதன் பிரதான நுழைவாயிலானது கொள்ளுப்பிட்டி, பாலதக்ச மாவத்தையின் கொம்பனித் தெரு முனையில் அமைந்துள்ளது. பாலதக்ச மாவத்தையின் காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டடங்களும் இந்த வளாகத்தில் அடங்கும். நடவடிக்கை மற்றும் நிர்வாக அலுவலகங்களைத் தவிர, இங்கு இலங்கை இராணுவத்தின் பல படையணிகள் மற்றும் படைகளின் மையங்களும், கொழும்பு இராணுவ மருத்துவமனை மற்றும் இராணுவ விளையாட்டு மைதானங்களும் இருந்தன.

பழைய இராணுவத் தலைமையகம்
Old Army Headquarters
පරණ යුද්ධ හමුදා මූලස්ථානය
கொழும்பு 3, இலங்கை
பழைய இராணுவத் தலைமையகம் Old Army Headquarters පරණ යුද්ධ හමුදා මූලස්ථානය is located in Central Colombo
பழைய இராணுவத் தலைமையகம் Old Army Headquarters පරණ යුද්ධ හමුදා මූලස්ථානය
பழைய இராணுவத் தலைமையகம்
Old Army Headquarters
පරණ යුද්ධ හමුදා මූලස්ථානය
ஆள்கூறுகள் 6°55′24″N 79°50′52″E / 6.923320°N 79.847661°E / 6.923320; 79.847661
வகை இராணுவத் தலைமையகம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது  இலங்கை தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
1940s–2012
சண்டைகள்/போர்கள் ஈழப் போர்
காவற்படைத் தகவல்
காவற்படை இலங்கை பொறியியலாளர்கள் படை
இலங்கை இராணுவ மகளிர் படை
இலங்கை ரைபிள் படை

பாதுகாப்பு அமைச்சகத்தையும், இராணுவத் தலைமையகத்தையும் சிறீ ஜெயவர்தனபுர கோட்டையிலுள்ள புதிய பாதுகாப்புத் தலைமையக வளாகத்திற்கு மாற்றும் திட்டத்துடன், இங்கிருந்த பல பிரிவுகள் 2012 இல் வெளியேறத் தொடங்கின. இங்குள்ள நிலமானது சங்கிரி-லா கொழும்பு மற்றும் பெரிய காலி முகத்திடல் அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்ட வர்த்தக மறு அபிவிருத்தி திட்டத்துக்காக கொடுக்கப்பட்டது.

வரலாறு

தொகு

இலங்கையில் காலனித்துவ ஆட்சியின் போது பிரித்தானியரால் இத்தளம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது விரிவாக்கம் செய்யபட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 1942, ஏப்ரல், 5 அன்று யப்பானால் நடத்தப்பட்ட உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலின்போது கொழும்பை பாதுகாத்தது. 1949 இல் இலங்கையின் விடுதலைக்குப் பிறகான காலத்தில் இலங்கை இராணுவம் உருவாக்கபட்டது. அதன் பின்னர் 1980 களின் பிற்பகுதியில் பல அலுவலகங்கள் பழைய ரைபிள் படைமுகாமிலிருந்து நகர்ந்த பிறகு இத்தளம் அதன் தலைமையகமாக பயன்படத் தொடங்கியது.

தீவிரவாத தாக்குதல்கள்

தொகு

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த வளாகத்தை குறிவைத்து இரண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முதலாவது தாக்குதல் 1995, நவம்பர் 24 அன்று நடத்தபட்டது. அப்போது இரண்டு பெண் தற்கொலை குண்டுதாரிகள் இதன் தலைமையகத்திற்கு வெளியே தாக்குதலை நடத்தினர். அதில் 16 பேர் கொல்லப்பட்டனர், 52 பேர் காயமடைந்தனர்.[1][2] இரண்டாவது தாக்குதலானது, 2005, ஏப்ரல் 25 அன்று நிகழ்த்தப்பட்டது. அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்போல வேடமணிந்த பெண் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி, அப்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வாகன வரிசையைக் குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தினார்.[3][4] தாக்குதலில் பொன்சேகா பலத்த காயமடைந்தாலும் உயிர் தப்பினார்; இந்தத் தாக்குதலில் 8 பேர் இறந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.[3] இந் நிகழ்வுக்குப் பிறகு இராணுவ வைத்தியசாலை கொழும்பின் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டது.

இடிப்பு

தொகு

ஷாங்கிரி லா/ஒன் கொழும்பு மற்றும் ஐடிசி கொழும்பு ஆகிய இரண்டு பெரிய வீடு, மனை விற்பனைத் திட்டங்களுக்காக இந்த வளாகம் 2012 இல் இடிக்கப்பட்டது.[5][6][7] இங்கிருந்து இடம் மாற்றபட்ட இராணுவ நிர்வாக அலுவலகங்கள் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை அக்குரேகொடவில் உள்ள ஒருங்கிணைந்த முப்படைகளின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லபட்டன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Law Paper Attachment 5- List of LTTE Suicide Attacks". Internationallawbureau.com. International Criminal Law Bureau. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "World News Briefs;Main Army Base Bombed In Sri Lanka and 15 Die". The New York Times. 11 November 1995. https://www.nytimes.com/1995/11/11/world/world-news-briefs-main-army-base-bombed-in-sri-lanka-and-15-die.html. பார்த்த நாள்: 9 August 2017. 
  3. 3.0 3.1 "Suicide attack on Sri Lanka's top military commander leaves 8 dead". The New York Times. 25 April 2006. https://www.nytimes.com/2006/04/25/world/asia/suicide-attack-on-sri-lankas-top-military-commander-leaves-8-dead.html. பார்த்த நாள்: 9 August 2017. 
  4. "Bomb targets Sri Lanka army chief". BBC. 25 April 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4941744.stm. பார்த்த நாள்: 9 August 2017. 
  5. 5.0 5.1 "Security Forces HQ moving to Akuragoda". Sundaytimes.lk. Sunday Times Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.
  6. "Sweeping tax benefits for Shangri-La". Sundaytimes.lk. Sunday Times Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.
  7. "ITC begins mixed development project near Galle Face Green". Sundaytimes.lk. Sunday Times Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.