பவனாத்து கண்காட்சி

பவனாத்து கண்காட்சி (Bhavnath fair) இந்தியாவின் குசராத் மாநிலம் சூனானாகத்து மாவட்டத்தில் உள்ள கிர்னார் மலை அடிவாரத்தில் சுவர்ணரேகா நதிக்கரையில் நடைபெறுகிறது. பாவ்நாத்து கண்காட்சி குசராத்து மாநிலத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.

பவனாத்து கண்காட்சி
பவனாத்து கண்காட்சி
Bhavnath Fair
பவனாத்து கண்காட்சியில் நாக சாது
வகைகலாச்சார மற்றும் மத விழா
தொடக்கம்மாசி ஏகாதசி
முடிவுமாசி அமாவாசை
காலப்பகுதிஒவ்வோர் ஆண்டும்
அமைவிடம்(கள்)சூனாகத்து, சூனாகத்து மாவட்டம், குசராத்து
நாடுஇந்தியா

இடம் தொகு

சூனாகத்து நகரத்தில் உள்ள கிர்னார் மலையடிவாரத்தில், சுவர்ணரேகா நதிக்கரையில், மிகவும் பழமையான பவநாத்து கோயில் உள்ளது. கோவிலின் தன்னிச்சையாகத் தோன்றிய சிவலிங்கத்தின் பின்னணி அற்புதமான இயற்கை காடுகளுடன் அழகாக இருக்கிறது. [1]

நேரம் தொகு

இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின் போது சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டி ஆண்டின் பதினோராவது மாதமான மாசி மாதத்தின் ஏகாதசியில் (கிருஷ்ண பட்சம் தொடங்கி மாசிமாதம் அமாவாசை வரையில் [1] [2]

மத முக்கியத்துவம் தொகு

பவனாத்து திருவிழாவில், மகா சிவராத்திரியின் நள்ளிரவில் பவனநாதர் வழிபடப்படுகிறார். மகாபூசையை முன்னிட்டு குசராத்தில் இருந்து ஏராளமான துறவிகளும், நாக சாதுக்களும் வருகிறார்கள் . [3] பார்வையாளர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானச் சத்திரங்களும் திறக்கப்பட்டுள்ளன. [1]

மாசி மாத நவமி நாளில், பவனநாதர் கோவிலில் மதம் மற்றும் கலாச்சாரத்தின் கொடி ஏற்றப்படுகிறது. இந்த நேரத்தில் சங்கு முழங்க, பல்வேறு வாத்தியங்கள் இசைக்க, மகாதேவா முழக்கத்துடன் நாகபாவர் யானைகள் மீது சவாரி செய்வதை காணலாம். முசுகுந்தன் குகை , பத்திரகிரியார் குகை மற்றும் குரு தத் குகைகளும் இந்த இடத்தில் மிகவும் பிரபலமானவை. இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். [1] [4]

இந்த இடம் அகிர் மற்றும் மெர் இனக்குழு மக்களுக்கு நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்குரிய ஓர் இடமாகும். நாட்டுப்புற இசை, ராசு-கர்பா மற்றும் பசன்-கீர்த்தனை நிகழ்ச்சிகளும் கண்காட்சி நாட்களில் இரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. [4]

வரலாறு தொகு

இசுஸ்கந்த புராணத்தில் பவனாத்து திருவிழா பற்றி ஒரு புராணக்கதை உள்ளது. இந்த புராணத்தின் படி, சிவன் - பார்வதி வானத்தில் தேரில் பயணம் செய்தபோது, அவளுடைய தெய்வீக ஆபரணம் பவனாத்து கோவிலுக்கு அருகில் கீழே விழுகிறது. எனவே இது வசுத்ர புடக்சேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. [1]

மகா சிவராத்திரி நாளில் மகா பூசையின் போது சங்கு முழங்க நாகபாவாவின் ஊர்வலமும், மிருகி குண்டத்தில் நீராடி, கிர்னார் மலையடிவாரத்தில் முழுக்கமிடுவதும் ஓர் ஆன்மீக அனுபவம். ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, மிருகி குண்டத்தில் நீராடுவது மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிறது. [1]

பர்துகரி , கோபிசந்த் மற்றும் அசுவத்தாமா போன்ற சித்தர்கள் நவநாத்து மற்றும் மகாசித்த தலமான கிர்னாரில் வாழ்கின்றனர் . மேலும் சிவராத்திரி நாளில் இந்த சித்தர்கள் மிருகி குண்டத்தில் நீராட வருகிறார்கள். சித்தர்கள் இந்த குண்டத்தில் குளித்தால் வெளியில் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. [4]

வசதிகள் தொகு

பவனாத்து கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 300 முதல் 350 பேர் வரை தங்கக்கூடிய கூடாரங்கள் மக்களுக்காக கட்டப்பட்டுள்ளன. மக்கள் வாங்கும் வகையில் பல்வேறு பிரசாதங்கள் மற்றும் பொருட்களுக்கான கடைகளும் அமைக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களும் தங்கள் சொந்த கண்காட்சிகளை இங்கு நடத்துகின்றன. [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. காந்திநகர்: Directorate of Information/ GujaratState. pp. 12–13.
  2. Jadav, Joravarsinh (2010). ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત. காந்திநகர்: Directorate of Information/ GujaratState. p. 181.
  3. 3.0 3.1 Vyas, Rajni (2012). ગુજરાતની અસ્મિતા (5th ed.). அகமதாபாது: Akshar Publication. p. 326.
  4. 4.0 4.1 4.2 Sedani, Hasutaben Shashikant (2015). ગુજરાતની લોકસંસ્કૃતિ. அகமதாபாது: University Granth Nirman Board - குசராத்து. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 97-89-381265-97-0.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவனாத்து_கண்காட்சி&oldid=3653469" இலிருந்து மீள்விக்கப்பட்டது