பவநாத்
பவநாத் (Bhavnath) இந்தியாவின் மாநிலமான குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்தின் அருகே கிர்நார் மலையின் அடிவாரத்தில் அமைந்த சிறு கிராமம் ஆகும்.
வரலாறு
தொகுகிர்நார் மலை அடிவாரத்தில் உள்ள பவநாத் கிராமத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. [1] பவநாத்தில் உள்ள கிர்நார் மலையில் அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.
விழாக்கள்
தொகுஇந்து மற்றும் சமணர்களுக்கு புனிதமான பவநாத் கிராமத்தில், ஆண்டு தோறும், மகா சிவராத்திரியும் கிர்நார் கிரிவலம் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[2]
மாசி மாத மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது இராஜஸ்தானின் மேவார், குஜராத்தின் கட்ச், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும் இங்கு வருகின்றனர். [3] [4]
கிரிவலம் நிகழ்வின் போது தத்தாத்ரேயர் ஐந்து நாட்கள் பவநாத் கிராமத்தில் தங்கியிருப்பார் என இந்துக்கள் கருதுகிறார்கள்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் History of Bhavnath at GujaratTourism.com
- ↑ [2] Bhavnath Festival, Mahashivratri
- ↑ "Bhavnath fair". Archived from the original on 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
- ↑ Bhavnath Fair