பவய்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பவாய் என்ற பெயர் பவாய் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் இந்து பத்மாவதி அம்மன் கோவிலை ஒட்டி, உள்ளூர் மொழி மராத்தியில் பத்மா ஆய், பத்மா அன்னை என பொருள்படும் சொல்லில் இருந்து இது எழுந்தது.
பவாய் | |
— புறநகர் — | |
அமைவிடம் | 19°07′N 72°55′E / 19.12°N 72.91°E |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் |
ஆளுநர் | ரமேஷ் பைஸ் |
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 50 மீட்டர்கள் (160 அடி) |
இந்தப் புறநகர் பெரும் இரநந்தானி கார்டன்சு பூங்காக்களும் புதிய கட்டிடத்தொகுதிகளும் இருப்பிடங்களும் அமைந்து அதிநவீன குடிப்பகுதியாக விளங்குகிறது.
பல்வேறு இனங்கள் மற்றும் நாட்டினரின் வசிப்பிடமாக ஓர் உண்மையான உலகப்பொது குடியிருப்பாக விளங்குகிறது.
பவய் ஏரி தவிர, இங்குள்ள சில முதன்மையான மும்பை அடையாளங்கள்:
- இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை (ஐ.ஐ.டி மும்பை),
- கட்டுமானம், பொறியியல் மற்றும் தயாரிப்பு திரள் லார்சன் & டூப்ரோ குழும நிறுவனங்கள்
- தேசிய தொழிலக பொறியியல் கழகம் (NITIE),
- ஐந்து நட்சத்திர விடுதிகள் : ரோடாசு மற்றும் தி ரெசிடென்சி
- அரசு அலுவலர் குடியிருப்புகள்: வருமானவரி,சுங்கத்துறை,கடலோரப்பாதுகாப்பு படையினர் முதலியோர்
- ஐபிஎசு,மும்பை
- கோபால்சர்மா பள்ளிகள்
- பிராத்மேசு கலாக்சி
- பிரமோத் விகார் விடுதி
- பம்பாய் எசுகாட்டிசு பள்ளி பவாய்
- பன்னாட்டு வணிக பள்ளி (IBS)
- எல் எச் இரநந்தானி மருத்துவமனை
- கலேரியா வணிக வளாகம்
- ஃககோன் கோ கார்ட் மற்றும் நிகழ்ஒளி விளையாட்டுகள்
- பவாய் பிளாசா
- பாப் டேட்சு உணவகம்
பவாயில் அய்யப்பன் கோவில்,சுவாமி நாராயண் கோவில்,பஞ்ச் குதிர் கோவில்,சீக்கிய குருத்வாரா,இரு மாதாக்கோவில்கள் மற்றும் ஓர் மசூதி உள்ளன.
பவாய் பகுதி கடந்த பத்தாண்டுகளில் பெரிதும் வளர்ந்து மும்பையின் கிழக்கு புறநகர் பகுதிகளுக்கு குடியிருப்பு,வணிக மற்றும் சிறுவணிக மையமாக விளங்குகிறது.இங்கு நிலவும் சாலை போக்குவரத்து ஊர்தல்கள் அண்மைக்கால செய்திகளில் அதிகம் அடிபடும் நிகழ்வாகும்.
உள்ளூர் செய்தியிதழ் பிளானெட் பவாய் அண்மைய செய்திகளையும் மேம்பாடுகளையும் வெளியிடுகிறது.
சோகேசுவரி-விக்ரோலி இணைப்பு(JVL) சாலையின் பகுதி இப்புறநகர் வழியே செல்கையில் 'ஆதி சங்கராச்சார்யா மார்க்' என வழங்கப்படுகிறது.
குடியிருப்பு வளாகங்கள் தொகு
- இரநந்தானி கார்டன்சு
- ராகேசா விகார் சாந்திவாலி பண்ணை சாலையை விலகி
- சல் வாயு விகார் வளாகம், இரநந்தானி அடுத்து(ஒரு MHADA திட்டம்)
- சன்சிடி வளாகம் : (நெப்ட்யூன், சூபிடர், மெர்குரி, வீனசு, ப்ளூட்டோ மற்றும் மார்சு கட்டிடங்களை கொண்டது..காந்திநகர் மேம்பாலம் அருகில்)
- சிவ் சிருட்டி வளாகம், எசு.எம் செட்டி பள்ளி பின்புறம்
- இ.தொ.க மும்பை அலுவலர் கூட்டுறவு குடியிருப்பு, எசு.எம் செட்டி பள்ளி பின்புறம்,இரநந்தானி பவாய்
- பஞ்சரத்னா குடியிருப்பு, ஆதி சங்கராசார்யா மார்க் [எசு.பி.ஐ மற்றும் என்.டி.பி.சி அலுவலர் குடியிருப்புகள் உள்ளிட]
- மாடா (MHADA) எச் ஐ ஜி காலனி, ராம்பாக் (பவாய் காவல்நிலையம் அருகில்)
- எவர்சைன் சப்பைர் சாந்திவாலி பவாய்
- நகாரின் அம்ரித் சக்தி வளாகம், சாந்திவாலி, பவாய்
- லேக் ஹோம்சு வளாகம், பவாய்
- ஓம் சாந்தி வளாகம்
- லியோ வளாகம்
- பவாய் விகார்
- பத்மாவதி குடியிருப்பு காலனி
- ரகேசா நெசுட்
பிற வசதிகளும் வகுப்புகளும் தொகு
- சியாமக் தாவரின் நடன வகுப்புகள்
- வனசரக மன்றம் - சுகுவாசு,நீச்சல்,பரதநாட்டியம்(சுதா சந்திரன்)மற்றும் டென்னிசு வகுப்புகள்
- ஆகார் அறிவியல் மன்றங்கள் மற்றும் வகுப்புகள்
- அன்சார் மேற்கத்திய நடன அகாதெமி
- ஆப்பிள் ட்ரீ: பாலே,ஃபாக்சுட்ராட்
- குருகுல்: ஆளுமை மேம்பாடு,நடனம்,இசை,நாடகம்
- ஃகாகோன் கோ கார்ட்சு மற்றும் நிகழ்ஒலி விளையாட்டுகள்
பவாயில் உள்ள இரநந்தானி கார்டன்சு பகுதி பல பாலிவுட் படங்களில் இடம் பெற்றுள்ளது.