பவித்ரா நந்தகுமார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார்

பவித்ரா நந்தகுமார் (Pavithra Nandakumar) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார். இவரது படைப்புகள் சிறுகதை,[1] கட்டுரை,[2][3] கவிதை, குறுநாவல் என இவருடைய இலக்கிய உலகம் விரிந்து கிடக்கிறது.[4]

பவித்ரா நந்தகுமார்
Pavithra Nandakumar
பிறப்புஆகத்து 24, 1979 (1979-08-24) (அகவை 45)
வேலூர்
தேசியம்இந்தியர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சீ. நந்தகுமார்
பிள்ளைகள்ந.லோஷிகா, ந.கிரிஷிகா
விருதுகள்தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான விருது உட்பட பல அறக்கட்டளை விருதுகள்.

தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற[5] பவித்ராவின் கதைகளில் உயிர்ப்பும், உணர்வுகளும் சுவாரசியம் தருமளவிற்கு கலந்திருப்பது இவருடைய படைப்புகளின் சிறப்புகளாகும். நேர்மறை எண்ணங்களும் சமூக அக்கறையும் கொண்ட நடுப்பக்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.[6] காதலே உறவுகள் அனைத்துக்குமான அன்புப்பாலம் என்பதை வலியுறுத்தும் கவிதைகள் பல புனைந்துள்ளார். புரியாத குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி எளிய சொற்களால் கவிதை படைத்து இலக்கியச் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ச.சாமிநாதன் – நிர்மலா தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 1979 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதி பவித்ரா வேலூரில் பிறந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஈ.வே.ரா.நாகம்மையார் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் படித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைபட்டங்கள் பெற்ற இவர் பின்னர் தமிழிலும் முதுநிலை பட்டத்தை பெற்றுள்ளார். தற்போது ஆரணி அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். 15 வருடங்களுக்கும் மேலாக இலக்கியப்பங்களிப்பை ஆற்றி வரும் இவரது படைப்புகளை ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கல்வித்துறை செயல்பாடுகள்

தொகு

2017 – 2018 கல்வியாண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட புதியப் பாடத்திட்ட குழுவின் அழைப்பின்பேரில் “படைப்பாற்றல் திறனை மாணவர்களிடம் வளர்ப்பது எப்படி?” எனும் பயிலரங்கில் கலந்து கொண்டு தன் கருத்துக்களை அங்கு பதிவு செய்து பாடத்திட்டகுழுவின் பாராட்டைப் பெற்றார். கரோனா தொற்றை முன்னிட்டு 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்ட குறைப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

எழுதியநூல்கள்

தொகு
  1. சற்றே பெரிய தனிமை[7]
  2. பிடிக்குள் அடங்கா மௌனம்’
  3. தொலைந்து கொண்டே இருக்கிறேன்… உன்னுள்’
  4. மௌனமான விவாதங்கள்,
  5. வன் கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது[8]
  6. வெற்றிடத்தின் நிர்வாணம்’
  7. கொஞ்சம் விவாதித்தும் கொஞ்சம் மௌனித்தும்
  8. தாழிட்ட கதவு[9]
  9. மாவளி[10]

விருதுகள்

தொகு
  1. சிறந்த எழுத்தாளர் விருது (2014) – நெய்வேலி புத்தகக் கண்காட்சி[11]
  2. ராஜம் கிருஷ்ணன் விருது (2015) –கோவை தமிழ் ஐயா கல்விக்கழகம்
  3. தமிழன்னை விருது (2015)
  4. நங்கூரக் கவிஞர் விருது (2016)
  5. சிறுகதைத் தாரகை விருது (2017)
  6. சக்தி எக்ஸ்னோரா விருது (2018)[12]
  7. அறிஞர் அண்ணா விருது (2019)
  8. THE ENLIGHMENT AWARD (2019)
  9. சாதனை மகளிர் விருது (2020)
  10. திருப்பூர் சக்தி விருது[13] (2021)
  11. இலக்கியச் செம்மல் விருது (2021)

மேற்கோள்கள்

தொகு
  1. "வந்தது வசந்த காலம்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  2. "எங்கும் அன்பை விதைப்போம்". Dinamalar. 2021-01-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  3. "39 வயதினிலே". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/sep/04/39-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-3227661.html. பார்த்த நாள்: 17 July 2021. 
  4. Correspondent, Vikatan. "வலையோசை : பவித்ரா நந்தகுமார்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.
  5. "மௌனமான விவாதங்கள்". எமரால்டு பதிப்பகம். https://www.emeraldpublishers.com/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/. பார்த்த நாள்: 17 July 2021. 
  6. Correspondent, Vikatan. "வலையோசை : பவித்ரா நந்தகுமார்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  7. "சற்றே பெரிய தனிமை /பவித்ரா நந்தகுமார். Car̲r̲ē periya tan̲imai /Pavitrā Nantakumār. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  8. "வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது :சிறுகதைகள் /பவித்ரா நந்தகுமார். Van̲koṭumaikku uṭpaṭṭavaḷin̲ pirātu :Cir̲ukataikaḷ /Pavitrā Nantakumār. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  9. "நூல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/apr/26/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3611909.html. பார்த்த நாள்: 17 July 2021. 
  10. "மாவளி /பவித்ரா நந்தகுமார். Māvaḷi /Pavitrā Nantakumār. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  11. "நெய்வேலி புத்தகக் கண்காட்சி தமிழ்ப் படைப்பாளிகளின் திருவிழாவாக மாற வேண்டும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் - Tamil Nadu". Dailyhunt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
  12. "எழுத்தாளருக்கு விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/mar/06/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2875446.html. பார்த்த நாள்: 17 July 2021. 
  13. "திருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -". www.geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவித்ரா_நந்தகுமார்&oldid=3480049" இலிருந்து மீள்விக்கப்பட்டது