பவுலோ பிரைரே

பவுலோ ரெகுலசு நெவ்சு ஃபிரைரே (Paulo Reglus Neves Freire) என்று அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் பிரேசிலிய கல்வியாளர்.பிரேசிலின் ரெசிப் என்னுமிடத்தில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்,கல்வியாளர் தத்துவவாதி, மற்றும் முன்னணி வழக்குறைஞர் என பல்துறை வல்லுநராக விளங்கியவா்.

பவுலோ ஃபிரைரே
Paulo Freire 1977.jpg
பிறப்புசெப்டம்பர் 19, 1921(1921-09-19)
ரெசிப், பிரேசில்
இறப்புமே 2, 1997(1997-05-02) (அகவை 75)
São Paulo, São Paulo, Brazil
படித்த கல்வி நிறுவனங்கள்ரெசிப் பல்கலைக்கழகம்
பணிகல்வியலாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுகல்வியியல் தத்துவம்
சமயம்Liberal (Catholic)

வரலாறுதொகு

உலகத்தின் மிகப்பெரும் பொருளாதார மந்தம் 1930களில் ஏற்பட்ட நேரம் இவரது குடும்பத்தையும் பாதித்தது . அந்த நேரம் கடும் பசியும் பட்டினியும் பாவ்லோ பிரையரை வாட்டியது. இந்த வறுமையின் காரணமாக அவரது படிப்பு நான்கு ஆண்டுகள் தாமதப்பட்டது. அந்த நேரத்தில் அவர் அருகாமையில் இருந்த சேரியில் வசிக்கும் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியபடியே கழித்தார். இந்த சேரியில் இருக்கும் சிறுவர்களுடன் அவர் மிகுந்த நட்புடன் இருந்த காலத்தில் தான் அவர் ஏராளமான விஷயங்களை கற்றார். கற்றல் என்பது வேறு படிப்பு என்பது வேறு என்பதை அங்கு உணர்கிறார் பாவ்லோ பிரையர்.பசிக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி சிந்திக்கும் பாவ்லோ பிரையர் , வகுப்பறையில் ஒருவன் பட்டினியாக அமர்ந்திருந்தால், நிச்சயமாக அவனுக்கு அங்கு நடத்தப்படும் பாடங்கள் புரியாது, அது புரியாததற்கு காரணம் அவன் மந்தமானவனோ, அல்லது படிப்பில் ஆர்வம் குறைவானவனோ என்பது அல்ல என்கிறார் பாவ்லோ பிரையர்.எனவே 1931 ல் இவரது குடும்பம் செபோட்டா டோசு குவார்ரப்சு என்ற நகரத்திற்கு குடிபெயர்ந்தது. 1934 அக்டோபர் 31ல் இவரது தந்தை மறைந்தார்.

" அனுபவம், வர்க்கம் மற்றும் அறிவுக்கு இடையிலான உறவை எனக்கு மீண்டும் காட்டியது"

—பாவ்லோ பிரையர், [1]
 • பிரைரே 1943 இல் ரசிஃப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பள்ளியில் சேர்ந்தார். அவர் தத்துவம், மேலும் குறிப்பாக பெனோமெனாலஜி மற்றும் மொழி உளவியல் ஆகியவற்றைப் படித்தார். சட்ட பட்டியில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஒருபோதும் சட்டத்தை இயற்றவில்லை. அதற்கு பதிலாக இடைநிலைப் பள்ளிகளில் போர்த்துகீசியம் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார். 1944-ல், சக ஆசிரியரான எல்ஸா மியா கோஸ்டா டி ஒலிவேராவை மணந்தார். இருவரும் சேர்ந்து வேலை செய்தனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
 • 1946 ஆம் ஆண்டில், பெர்னம்புவோவில் கல்வியியல் மற்றும் கலாசார சமூகசேவை துறையின் இயக்கநராக நியமிக்கப்பட்டார்.
 • 1961 இல், அவர் ரெசிஃப் பல்கலைக்கழக கலாச்சார விரிவாக்க துறை இயக்குனரான நியமிக்கப்பட்டார். 1962 ஆம் ஆண்டில், அவருடைய கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கான முதல் வாய்ப்பினைப் பெற்று, 300 கரும்பு தொழிலாளர்களுக்கு 45 நாட்களில் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுத்தார். இந்த பரிசோதனையின் விளைவாக, பிரேசிலிய அரசாங்கம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கலாச்சார வட்டாரங்களை உருவாக்கியது.
 • 1986 ல், அவரது மனைவி எலிசா மறைந்தார்.
 • பாவ்லோ பிரையர் மே 2, 1997 இல் இதய கோளாறு காரணமாக இறந்தார்.[2]

தொழில்முறை வாழ்க்கைதொகு

1943ல் பாவ்லோ பிரையர் சட்டம் பயின்றார். 1946ல் அவர் சமூகப் பணி - கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1961ல் கலாச்சாரத்துறையின் இயக்குநரானார். 1964ல் அங்கு நடந்த ராணுவ ஆட்சியின் போது 70 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் சிறிது நாட்கள் பொலிவியாவில் இருந்து விட்டு பிறகு சிலியில் கிரிஸ்துவ ஜனநாயக விவசாய சீர்திருத்த இயக்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தார்.[2]

பிரபலமான நுால்கள்தொகு

இந்நுாலில் கல்வித்தத்துவம், ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுதல் பற்றி கூறியுள்ளார்.

அங்கீகாரம்தொகு

கால்கரி பல்கலைக்கழகத்தில் கல்வி பேராசிரியராக இருந்த டாக்டர் மேத்யூ சக்கரியா அவர்களால் இவ்விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

 • அவரது மனைவி எலிசா உடன் சிறந்த கிரிஸ்துவர் கல்வியாளர்களுக்கான பரிசு.
 • 1986ல் சமாதான கல்விக்கான யுனெஸ்கோ பரிசு.
 • க்ளாரெமோன் பட்டதாரிப் பல்கலைக்கழகத்திலிருந்து 1992 ஆம் ஆண்டுக்கான கெளரவ பட்டம்.

மேற்கோள்கள்தொகு

Jump up ↑ https://en.wikipedia.org/wiki/Paulo_Freire

Jump up ↑ முனைவர் மீனாட்சி சுந்தரம் (2005). [சிந்தனையாளர்களின் கல்விக் கருத்துக்கள் பவுலோ பிரைரே]. காவ்யமாலா. பக். 100-102. வழிசெலுத்தல் பட்டி

 • Bernhard Mann, The Pedagogical and Political Concepts of Mahatma Gandhi and Paulo Freire. In: Claußen, B. (Ed.) International Studies in Political Socialization and ion. Bd. 8. Hamburg 1996. ISBN 3-926952-97-0
 • Stanley Aronowitz (1993). Paulo Freire's radical democratic humanism. In P. McLaren & P. Leonard. (Eds.), Paulo Freire: A critical encounter (pp. 9-)
 • Joe L. Kincheloe (2008). Critical Pedagogy. 2nd Ed. New York: Peter Lang.

உலகம் முழுவதும் உள்ள பாவ்லோ பிரையர் நிறுவனங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

 1. Stevens, C. (2002). Critical Pedagogy on the Web. Retrieved July 18, 2008
 2. 2.0 2.1 2.2 "Paulo Freire". பார்த்த நாள் 22 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுலோ_பிரைரே&oldid=2915492" இருந்து மீள்விக்கப்பட்டது