பஸ்ரூர்
பஸ்ரூர் (Basrur) என்பது கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுரா 'வட்டத்திலுள்ள ஓர் கிராமமாகும். வரலாற்று ரீதியாக பஸ்ரூர் பார்சிலர், பார்சிலோர், பார்கலோர், பஸ்னூர், பாரேஸ், அபு-சரூர் மற்றும் பார்செல்லர் என்றும் அழைக்கப்பட்டது.
பஸ்ரூர்
பார்சிலர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 13°37′53″N 74°44′20″E / 13.6313°N 74.7388°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 576 211 |
வாகனப் பதிவு | கேஏ-20 |
வரலாறு
தொகுபஸ்ரூர், ஒரு காலத்தில் வசுபுரா என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் கர்நாடகாவில் கனரா கடற்கரையில் வாராஹி ஆற்றங்கரையில் உள்ள ஒரு வரலாற்று துறைமுக நகரமாகும். பதினாறாம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் சிறந்த நெல் துறைமுகமாக இருந்தது.[1] சிமோகாவிற்கு அருகில் இருந்த கேளடி சமஸ்தானத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல வெளிநாடுகளின் வர்த்தகர்களால் இந்த துறைமுகம் பயன்படுத்தப்பட்டது. நகரம் பல தெருக்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் குறிப்பாக வணிகர்கள், கைவினைஞர்கள், நடனக் கலைஞர்கள், நெசவாளர்கள் போன்ற சமூகங்களைக் கொண்டுள்ளது. பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சமூகங்களுக்கும் இது பிரபலமானது. இந்தக் கலைகள் மறக்கப்பட்டது, மேலும் இப்போது இல்லை. நகரம் ஒரு சிறிய தெளிவற்ற கிராமமாக மாறிவிட்டது. இப்போது வர்த்தகமும் நடைபெறுவதில்லை.
ஹொன்னாவராவிலிருந்து மலபார் செல்லும் வழியில் கனராவுக்குச் சென்ற மொராக்கோ பயணி இப்னு பதூதா (அபு அப்துல்லா முகமது (1304-1358)) தனது பயணக் கணக்கில், "முலைபார் (மலபார்) தேசத்தில் நாங்கள் நுழைந்த முதல் நகரம் அபு-சரூர் (பஸ்ரூர்), ஒரு பெரிய நுழைவாயிலில் உள்ள சிறிய இடம் மற்றும் கோகோ பனைகள் நிறைந்தது" எனக் கூறுகிறார் [2] ஆங்கிலேய பொறியாளர் ஜேம்ஸ் ரெனெல், தொலெமியின் வரைபடத்தை பார்சிலர் அல்லது பஸ்ரூர் என்று தகுந்த ஆய்வுடன் முடித்தார்.[3]
பஸ்ரூர் அதன் பழமையான கோவில்களுக்கு பிரபலமானது. இதில் சிறீமகதோபர் மகாலிங்கேசுவரா கோவில் முக்கியமானது [4]. ஆண்டுதோறும் தேர் திருவிழா ஒவ்வொரு ஏப்ரல் மாதம் சித்ரா பௌர்ணிமா - அனுமன் ஜெயந்தி ( இந்து நாட்காட்டியின்படி ) நாளில் நடைபெறும்.
புகழ்பெற்ற கன்னட புதின ஆசிரியர் சிவராம காரந்த் பஸ்ரூர் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதினத்தை எழுதியுள்ளார். முக்கியமாக பாடல் மற்றும் நடன சமூகத்தை விவரிக்கிறார். மேலும், பஸ்ரூர் கிராமத்தின் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் படம் இந்த புதினத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. புதினத்தின் பெயர் மை மணகலா சுளியல்லி (1970) என்பதாகும். இது காரந்தின் சிறந்த புதினங்களில் ஒன்று. இது பெங்களூரில் உள்ள "சப்னா புத்தக ஹவுஸ்" நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது.[5]
போர்த்துகீசிய ஆட்சி
தொகுபஸ்ரூர் (பார்சிலர்) 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு குடியேற்றமாக இருந்த இது அதன் சொந்த கோட்டையைக் கொண்டிருந்தது, 17-ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள படம் - ஆப்பிரிக்கா & இந்தியா கடற்கரையில் கோட்டைப்பட்ட நகரங்கள் - 1630 ஜோவா டீக்சீராவால் அல்பெர்னாஸ், ஓ வெல்ஹோ.