பாக்கம் கோட்டூர்

பாக்கம் கோட்டூர் (Pakkam Kottur) என்பது தமிழ்நாடு, நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிராமம். இது திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே மூன்று கிலோ மீட்டார் தொலைவில் உள்ளது.

பாக்கம் கோட்டூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
அருகாமை நகரம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

சுமார் 500 குடும்பங்கள் அனைத்து தரப்பினருமாய் வாழும் இவ்வூரில் சமூக கட்டமைப்பில் பெரும்பான்மையாய் இசுலாமியர்களும், இந்துக்களும் கணிசமான அளவில் கிறித்துவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் வாழ்வதாரமாய் விளங்குவதில் வேளாண்மை முக்கிய இடத்தை வகிக்கிறது.

கட்டமைப்பைப் பொறுத்த வரையில் பாக்கம் கோட்டூர் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒரு வங்கி, மற்றும் சில்லறை வணிக கூடங்கள் உள்ளன. ஆன்மீக தளங்களில் இரு மசூதிகள், மற்றும் சில புராதன கோவில்களைக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தில் போக்குவரத்திற்கென ஒருசில பேருந்துகள் திருவாரூர் நகருக்கும் திட்டச்சேரி மற்றும் நாகப்பட்டினம் இடையே அரசால் இயக்கப்படுகிறது. மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக அருகாமையில் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஏனங்குடி மற்றும் ஆண்டிப்பந்தல் ஆகிய ஊர்களுக்கு ஆட்டோ போன்ற தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டமாக இருப்பினும் பெரும்பாலும் தம் கொள்முதல் தேவைகளுக்காக மக்கள் அருகாமையில் இருக்கும் திருவாரூர் நகரையே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், போக்குவரத்து வசதி இல்லாததும் ஒரு பெரும் குறையாகவே இங்கு காணப்படுகிறது. மாணவர்கள் தங்களின் உயர் நிலை கல்விக்கு அருகே அமைந்திருக்கும் ஏனங்குடியில் உள்ள உயர் நிலை பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர்.

அவசர கால மருத்துவத்திற்கு அங்கு உள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்கின்றனர். புத்தாறு என்னும் ஆற்றுப் படுகையும், விவசாய காலங்களில் பசுமையாய் காட்சி தரும் வயல் வெளிகளும், இவ்வூரின் சிறப்புகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்

தொகு

https://pakkamkotturonline.blogspot.ae/

https://www.youtube.com/watch?v=jVdoEOi2LeM

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கம்_கோட்டூர்&oldid=3463365" இலிருந்து மீள்விக்கப்பட்டது