பாக்கித்தானில் சீக்கியம்
தற்கால பாக்கித்தானில் சீக்கியம் (Sikhism in present-day Pakistan area) விரிவான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இன்றைய பாக்கித்தானில் சீக்கியர்கள் மிகச்சிறுபான்மையராக உள்ளனர்; பெரும்பாலான சீக்கியர்கள் தங்கள் சமயம் தோன்றிய பெசாவரிலும் பஞ்சாப் பகுதியின் அங்கமான பஞ்சாபு மாகாணத்திலும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் வாழ்கின்றனர். சீக்கியத்தை நிறுவிய குரு நானக் பிறந்த நங்கானா சாகிபு பாக்கித்தானிய பஞ்சாபில் உள்ளது.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
80,116 (2011) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
லாகூர் · இஸ்லாமாபாத் · பெசாவர் · பைசலாபாத் · கராச்சி · நங்கானா சாகிபு · ஆசன் அப்தல் | |
மொழி(கள்) | |
பஞ்சாபி |
18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் சீக்கிய சமூகம் செல்வாக்குள்ள அரசியல் சக்தியாக விளங்கியது; சீக்கிய அரசர் ரஞ்சித் சிங் முதல் சீக்கியப் பேரரசை நிறுவினார்; இதன் தலைநகரம் லாகூராக இருந்தது. பஞ்சாபின் பெரிய நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் சீக்கிய மக்கள் வாழ்கின்றனர்: இலாகூர், இராவல்பிண்டி, பைசலாபாத். 1947இல் பாக்கித்தான் உருவான பின்னர், சிறுபான்மை இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர்; இந்தியாவிலிருந்து பல முஸ்லிம் ஏதிலிகள் பாக்கித்தானில் குடியேறியுள்ளனர்.
1947இல் பாக்கித்தான் உருவாக்கத்திற்கு பின்னர் சீக்கிய சமூகம் மீளமைத்துக் கொள்ளத் துவங்கியது. பாக்கித்தான் சீக்கிய குருத்துவாரா பிரபந்தக் குழு அமைக்கப்பட்டது. இது பாக்கித்தானில் உள்ள குருத்துவாராக்களையும் பாரம்பரியத்தையும் காக்கும் பொறுப்புடையது. பாக்கித்தானிய அரசு அண்மையில் இந்திய சீக்கியர்கள் பாக்கித்தானில் உள்ள சீக்கிய புனிதத்தலங்களுக்கு சென்று வழிபடவும் பாக்கித்தானிய சீக்கியர்கள் இந்திய குருத்துவாராக்களுக்குச் செல்லவும் அனுமதிக்கின்றது.
ஐக்கிய அமெரிக்க நாட்டு அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி 2006இல் பாக்கித்தானில் சீக்கியர்கள் மக்கள்தொகை 20,000ஆக இருந்துள்ளது.[1]
பிரிவினைக்கு முன்பாக
தொகுஇந்தியப் பிரிவினைக்கு முன்பாக பாக்கித்தானியப் பகுதிகளில் வாழ்ந்திருந்த சீக்கியர்கள் அரசு நிர்வாகத்திலும் வேளாண்மை, வணிகம் போன்ற பொருளியல் செயற்பாடுகளிலும் செல்வாக்கோடு இருந்தனர். பாக்கித்தானிய பஞ்சாபின் இலாகூரில் உள்ள அரண்மனை, இரஞ்சித் சிங்கின் சமாதி, நங்கானா சாகிபு உள்ளிட்ட ஒன்பது குருத்துவாராக்கள் போன்ற சீக்கியப் பண்பாட்டு/சமய தலங்கள் உள்ளன. உலகெங்கும் உள்ள சீக்கியர்களுக்கு குரு நானக் பிறந்த நங்கானா சாகிபு முக்கியமான வழிபாட்டிடம் ஆகும்.
ஒளிப்படத் தொகுப்பு
தொகு-
இரஞ்சித்சிங் சமாதி
-
பாஞ்சா சாகிபு குருத்துவாரா, ஆசன் அப்தாலாவின் வெளிப்புறத் தோற்றம்
-
சீக்கியர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஐந்து பொருட்களில் ககன் (மரச்சீப்பு), கங்கணம் மற்றும் கீர்ப்பன் எனும் கத்தி
-
ஃபைசலாபாத் குருத்துவார்
-
கராச்சி விசா சுக குருத்துவாரா
மேற்சான்றுகள்
தொகுஇதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Muslim leaders condemn brutal killing of Sikhs by Taliban in Pakistan. TCN News.
- "Pakistan: Insufficient protection of religious minorities". Amnesty International. 2001-05-14. பார்க்கப்பட்ட நாள் 2010-08-13.
- Frei, Matt (2002-01-13). "Time stands still at Khyber Pass". British Broadcasting Corporation. http://news.bbc.co.uk/1/hi/programmes/from_our_own_correspondent/1756957.stm. பார்த்த நாள்: 2010-08-13.
- Jolly, Asit (2001-10-11). "Sikh Families Escape Afghanistan". British Broadcasting Corporation. http://news.bbc.co.uk/1/hi/world/south_ஆசியா/1593075.stm. பார்த்த நாள்: 2010-08-13.[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
- Rana, Yudhvir. "NWFP Sikhs sore over denial of visas to India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2010-08-13.