பாட்டியா சாதி
பாட்டியா (Bhatia) என்பது பஞ்சாப், ராஜஸ்தான், சிந்து மற்றும் குசராத்தில் காணப்படும் ஒரு மக்கள் குழு மற்றும் ராஜபுத்திர சாதியாகும் . பாட்டியாக்கள் முதன்மையாக வடமேற்கு இந்தியா மற்றும் பாக்கித்தானில் வாழ்கின்றனர். [1]
பாட்டியா | |
---|---|
மதங்கள் | இந்து சமயம், இசுலாம் மற்றும் சீக்கியம் |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | ராஜஸ்தான், இந்திய பஞ்சாப், குசராத்து, சிந்து மாகாணம் |
உட்பிரிவுகள் | கட்ச், அலாய், காந்தி, நவ்காம், பச்சீச்காம், தட்டாய் மற்றும் பஞ்சாபி |
வரலாறு
தொகுபாட்டியா சாதியின் புவியியல் தோற்றம் நிச்சயமற்றது. 19 ஆம் நூற்றாண்டில் சிந்து மற்றும் குஜராத்தில் பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிசு இராச்சியத்தின் இனவியலாளர் டென்சில் இபெட்சன் குறிப்பிட்டார். ஆனால் அவர்கள் பட்னர், ஜெய்சல்மர் மற்றும் இராஜபுதனம் என்று அழைக்கப்பட்ட பகுதியிலிருந்து (நவீனகால ராஜஸ்தான்) குடியேறினர் என்று நம்புவதற்கான காரணங்கள் இருந்தன. ஆண்ட்ரே விங்கின் மிக சமீபத்திய ஆய்வில் ஜெய்சல்மரின் பாட்டியாக்களுக்கும் குசராத்தின் சோலாங்கிகளுக்கும் இடையே 12 ஆம் நூற்றாண்டின் தொடர்பு இருப்பதைக் காணலாம். அதே நேரத்தில் அவர்களின் தாயகத்தைக் கண்டுபிடிப்பதற்கான சமகால முயற்சியில் அந்தோனி ஓ பிரையன் என்பவர் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து சிந்துவைச் சுற்றி வைக்க காரணமாக அமைந்தது. மற்றொரு இனவியலாளரான ராபர்ட் வேன் ரஸ்ஸல், 19 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பிரத்தியேகமாக இந்துக்கள் என்று கருதினார். [2]
சிந்துவில் உள்ள முல்தான் பகுதியுடன் குறிப்பாக தொடர்பு கொண்டிருந்த பாட்டியாக்கள் வரலாற்று ரீதியாக வணிகர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் மத்திய ஆசியாவில் காணப்பட்ட ஆரம்பகால இந்திய புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியாக, போரா மற்றும் லோகனா சமூகங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டிருக்கலாம். [a] ஒரு குறிப்பிடத்தக்க வணிகக் குழுவாக அவர்கள் தோன்றுவது 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய தேதிகளாகும். நிச்சயமாக இந்தியா காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட காலப்பகுதியில், பாட்டியாக்கள் மற்றும் பிற இரண்டு ஆரம்ப புலம்பெயர் சமூகங்கள் வர்த்தக மற்றும் பணமளிப்பு வலைப்பின்னல்களை நிறுவியுள்ளன. மத்திய ஆசியாவின் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற ஸ்காட் லெவியின் கூற்றுப்படி, "...ஆப்கானித்தான், மத்திய ஆசியா முழுவதும் பரவியது. இறுதியில் அரேபிய தீபகற்பம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாண்டி மேற்கில் கரீபியன் தீவுகளுக்கும், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கில் சீனாவுக்கும் சென்றடைந்தது ".
துணைக் குழுக்கள்
தொகுபாட்டியாக்களில், ஜாகர், கட்ச், வேகா, அலாய், காந்தி, பவ்ராய், நவ்காம், பச்சீச்காம், தட்டாய் மற்றும் பஞ்சாபி போன்ற வெவ்வேறு துணை சாதிகள் உள்ளன. கட்ச்சிலிருந்து வந்த பாட்டியாக்கள் கட்ச் பாட்டியா என்றும், ஜாம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அலாய் பாட்டியா என்றும், இன்றைய பாக்கித்தானில் உள்ள சிந்துவிலிருந்து வந்தவர்கள் சிந்தி பாட்டியா என்றும் இன்றைய பஞ்சாப்பிலிருந்து (இந்தியா) வந்தவர்கள் பஞ்சாபி பாட்டியா என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஏராளமான பஞ்சாபி பாட்டியாக்கள் 1947 இல் பாக்கித்தான் பஞ்சாபில் குடியேறினர. [4]
சில முக்கிய குழுக்கள் அவர்கள் பின்பற்றும் முக்கிய தொழில்களிலிருந்தோ அல்லது அவர்கள் கடைப்பிடிக்கும் கைவினைகளிலிருந்தோ பெறப்பட்டவை. [5]
தொழில்
தொகுமுக்கியமாக பாட்டியாக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபின் பல மாவட்டங்களில் அவர்கள் நில உரிமையாளர் அல்லது ஜமீந்தார் என்று அழைக்கப்படுகிறார்கள். ஜமீந்தார்கள் பிரபுக்களுக்கு சமமானவர்கள் என்று கருதப்பட்டாலும் [6] சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சுயாதீனமான, இறையாண்மை கொண்ட இளவரசர்களாகக் காணப்பட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Tribalism in India, pp 160, By Kamaladevi Chattopadhyaya, Edition: illustrated, Published by Vikas, 1978, Original from the University of Michigan.
- ↑ 2.0 2.1 Levi, Scott (2007). "Multanis and Shikarpuris: Indian Diasporas in Historical Perspective". In Oonk, Gijsberk (ed.). Global Indian Diasporas: Exploring Trajectories of Migration and Theory. Amsterdam University Press. pp. 64–65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5356-035-8. பார்க்கப்பட்ட நாள் 1 May 2013.
- ↑ Falzon, Mark-Anthony (2004). Cosmopolitan Connections: The Sindhi Diaspora, 1860-2000. BRILL. pp. 32–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-0414-008-0. பார்க்கப்பட்ட நாள் 1 May 2013.
- ↑ People of India: Gujarat Part 1, pp 201, 899, By Kumar Suresh Singh, Rajendra Behari Lal, Published by Popular Prakashan, 2003
- ↑ The Sikhs in History, pp 92, By Sangat Singh, Edition: 2, Published by S. Singh, 1995, Original from the University of Michigan
- ↑ "Cinema: A Tragedy of Pride". TIME.com. 13 September 1963. Archived from the original on 17 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
குறிப்புகள்
தொகு- ↑ காலனித்துவ இந்தியாவில் வணிக வலைப்பின்னல்களை உள்ளடக்கிய ஆய்வுகளை மேற்கொண்ட கிளாட் மார்கோவிட்ஸ் என்பவர், 'லோகானா' என்ற சொல் பாட்டியாக்கள் மற்றும் கத்ரிகள் தவிர சிந்தின் அனைத்து வணிக சமூகங்களையும் குறிக்கிறது என்று கூறுகிறார்]]. [2] மார்க்-அந்தோனி பால்சன் என்பவர், பிராமணர்கள் மற்றும் பாட்டியாக்களைத் தவிர்த்து, அனைத்து சிந்தி இந்து சமூகங்களையும் லோகானா சாதிகளாக கருதுகிறார்.[3]
மேலும் படிக்க
தொகு- Markovits, Claude (2000). The Global World of Indian Merchants, 1750 - 1947: Traders of Sind from Bukhara to Panama. Cambridge Studies in Indian History and Society (Book 6). Cambridge: Cambridge University Press.
- O'Brien, Anthony (1996). The Ancient Chronology of Thar: the Bhattika, Laukika and Sindh Eras. Delhi: Oxford University Press.
- Wink, André (1997). Al-Hind - The Making of the Indo-Islamic World: The Slave Kings and the Islamic Conquest, 11th - 13th Centuries. Vol. 2. Leiden: E. J. Brill.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பாட்டியா சாதி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.