பாண்டு நாயக்

பாண்டு வாசு நாயக் (Pandu Vassu Naik) (31 ஆகஸ்ட் 1940 - 2 ஆகஸ்ட் 2016) கோவாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை மற்றும் 1994 முதல் 1999 வரை உள்ள காலங்களில் சங்குயெம் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கோவா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். [1]

பாண்டு நாயக்
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்குர்தாஸ் நாயக் தாரி
பின்னவர்இரானு பிரபு தேசாய்
தொகுதிசாங்க்யும் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1994–1999
முன்னையவர்இரானு பிரபு தேசாய்
பின்னவர்பிரபாகர் கோன்கர்
தொகுதிசாங்க்யும்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாண்டு வாசு நாயக்

(1940-08-31)31 ஆகத்து 1940
சாங்க்யும், கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா
இறப்பு1 ஆகத்து 2016(2016-08-01) (அகவை 75)
கர்சோரெம், கோவா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1984–1994)
துணைவர்கிசோரி நாயக்
பிள்ளைகள்3
வேலை
  • அரசியல்வாதி
  • வணிகர்
தொழில்சமூகப்பணி
செயற்குழு
  • பொது நிறுவனங்கள்
  • நூலகம்
  • மதிப்பீட்டுக் குழுக்கள்
  • அரசு ஈட்டுறுதி நிறுவனங்கள்
உடைமைத்திரட்டு
  • வனம்
  • சுரங்கம்

தொடக்க கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பாண்டு வாசு நாயக் பென்வாடோ, சாங்க்யுமில் பிறந்தார். இவர் தனது முறையான கல்வியை முடித்தார். இவர் கிசோரி நாயக்கை மணந்தார், தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நாயக் நாடகங்களில் பங்கேற்பதையும் வாசிப்பதையும் விரும்பினார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற தனி ஆர்வம் இவருக்கு இருந்தது. இவர் சமூகப் பணியிலும் ஈடுபட்டார் மற்றும் பசார்வாடா, சாங்க்யுமில் வசித்து வந்தார்.

இறப்பு

தொகு

1 ஆகத்து 2016 அன்று பிற்பகல் 2:45 மணியளவில், நாயக் தனது 75 வயதில் ஒரு நோயால் இறந்தார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Goa Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  2. "Ex-Sanguem MLA Naik passes away". பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டு_நாயக்&oldid=3818137" இலிருந்து மீள்விக்கப்பட்டது