பாண் ஆற்றுப்படை
பாண் ஆற்றுப்படை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் ஏழு [1] உள்ளன. பாணனை வள்ளலிடம் வழி சொல்லி ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை.[2][3]
ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும், [4] கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியிடமும், [5] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும், [6] கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடமும், [7] பரணர் பேகனிடமும், [8] மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடமும், [9] மோசிகீரனார் கொண்கானங் கிழானிடமும் [10] அந்தப் பாடல்கள் பாணனை ஆற்றுப்படுத்துகின்றன.
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை நூல்கள் பாணனை ஆற்றுப்படுத்துவதும் இங்குக் கருதத் தக்கது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ புறநானூறு 68, 69, 70, 138, 141, 155, 180
- ↑
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 30) - ↑
சேண் ஓங்கிய வரை அதரில்,
பாணனை ஆற்றுப் படுத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 216 - ↑ புறநானூறு 69,
- ↑ புறநானூறு 68,
- ↑ புறநானூறு 70,
- ↑ புறநானூறு 180,
- ↑ புறநானூறு 141,
- ↑ புறநானூறு 138,
- ↑ புறநானூறு 155,