பாததும்பறை

பாததும்பறை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இது நிர்வாகம் சார்ந்த பிரிவாகும். பாததும்பரை என்பது சிங்கள மொழியில் "கீழ் புகைமண்டிய மலை" என பொருள்படும். பாததும்பறை வட்டச் செயலாளர் பிரிவு 52 ஊருழியர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வத்தேகாமாம் இப்பிரிவில் காணப்படும் முக்கிய நகரமாகும். வத்தேகாமம் நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

பாததும்பரை

பாததும்பரை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°22′01″N 80°43′00″E / 7.367°N 80.7167°E / 7.367; 80.7167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
80224

 - 11344
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 20810
 - +9481
 - CP

புவியியலும் காலநிலையும்

தொகு

பாததும்பறை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 600-800 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

தொகு

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 80224 60517 2105 661 16733 88 120
நகரம் 11344 8648 979 364 1305 21 24
கிராமம் 68795 51866 1048 297 15424 67 63
தோட்டப்புறம் 85 3 78 0 4 0 0

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 80224 59948 2083 17048 922 216 7
நகரம் 11344 8468 934 1544 317 81 0
கிராமம் 68795 51477 1076 15495 605 135 7
தோட்டப்புறம் 85 3 73 9 0 0 0

கைத்தொழில்

தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

அரசியல்

தொகு

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பாததும்பறை பிரதேசசபை

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 13,943 48.29 8
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13,009 45.05 6
மக்கள் விடுதலை முன்னணி 1,922 6.66 1
செல்லுபடியான வாக்குக்கள் 28874 94.16% -
நிராகரிக்கப்பட்டவை 1790 5.84% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 30664 60.48% -
மொத்த வாக்காளர்கள் 50705 ** -

மூலம்:[1]

குறிப்புகள்

தொகு
  1. மூலம்2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பாததும்பறை பிரதேசசபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாததும்பறை&oldid=3220346" இலிருந்து மீள்விக்கப்பட்டது