பாதுகாப்பு தலைமை இயக்குனரகம் (இந்தியா)
பாதுகாப்புத் தலைமை இயக்குநரகம் (Directorate General of Security) இந்தியாவின் நான்கு முக்கிய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாகும். இது இந்திய அமைச்சரவை செயலகத்தின் கீழ் இயங்குகிறது. இந்தியாவின் நான்கு முக்கியப் புலனாய்வு அமைப்புகளான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இந்திய உளவுத்துறை, தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் போன்று பாதுகாப்பு தலைமை இயக்குநரகம் செயல்படுகிறது.[2][3] ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் செயலாளர், 1971 முதல் இதன் பாதுகாப்பு தலைமை இயக்குநராக செயல்படுகிறார்.
Suraksha Mahanideshalay सुरक्षा महानिदेशालय | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | பெப்ரவரி 1965 |
வகை | புலனாய்வு அமைப்பு |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
நிலை | செயலில் |
தலைமையகம் | புது தில்லி |
அமைச்சர் | |
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | அமைச்சரவை செயலகம் |
கீழ் அமைப்புகள் |
|
வான்பரப்பு ஆய்வு மையம், சிறப்பு எல்லைப்புறப் படை மற்றும் சிறப்புக் குழுக்கள் பாதுகாப்பு தலைமை இயக்குநரகத்தின்கீழ் செயல்படுகிற்து.
நிறுவனத்தின் அமைப்பு
தொகுபொதுவாக பாதுகாப்பு தலைமை இயக்குநராக, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் செயலாளர் செயல்படுவார். தலைமை இயக்குநரின் கீழ் செயல்படும் முதன்மை இயக்குநரே உண்மையில் இதன் அமைப்பை வழிநடத்துகிறார். முதன்மை இயக்குநரின்கீழ் கீழ்க்கண்ட அமைப்புகள் செயல்படுகின்றன.
இதன் அண்மைய நடவடிக்கைகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Appointment Order, Appointments Committee of the Cabinet, 10 July 2019
- ↑ Schedule to the Intelligence Organisations (Restriction of Rights) Act, 1985, from India Code
- ↑ S.O. 208(E) dated 11 March 1987, The Gazette of India