பாபா சித்திக்
பாபா ஜியாவுதீன் சித்திக் (Baba Ziauddin Siddique, 13 செப்டம்பர் 1958-12 அக்டோபர் 2024) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர மாநிலத்தின் வாந்த்ரே மேற்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2004 மற்றும் 2008 க்கு இடையில் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் அமைசரவையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
பாபா ஜியாவுதீன் சித்திக் | |
---|---|
2021 இல் சித்திக் | |
உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் தொழிலாளர் துறைக்கான மாநில அமைச்சர், மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 9 நவம்பர் 2004 – 1 திசம்பர் 2008 | |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | தொகுதி நிறுவப்பட்டது |
பின்னவர் | ஆஷிஷ் ஷெலர் |
தொகுதி | வாண்ட்ரே மேற்கு |
பதவியில் 1999–2009 | |
முன்னையவர் | ஜெயஸ்ரீ நாயக் |
பின்னவர் | தொகுதி கலைக்கப்பட்டது |
தொகுதி | வாந்த்ரே |
மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பாராளுமன்ற தொகுதி குழு உறுப்பினர் | |
பதவியில் 19 மே 2019 – 8 பெப்ரவரி 2024 | |
மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் மூத்த துணைத் தலைவர் | |
பதவியில் 15 அக்டோபர் 2014 – 8 பெப்ரவரி 2024 | |
மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் | |
பதவியில் 2000–2004 | |
பெருநகரமும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1993–2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோபால்கஞ்ச், பீகார், இந்தியா | 13 செப்டம்பர் 1958
இறப்பு | 12 அக்டோபர் 2024 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 66)
காரணம் of death | துப்பாக்கிச் சூட்டால் படுகொலை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (பிப்ரவரி-அக்டோபர் 2024) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1976–2024) |
துணைவர் | ஷெஹ்சீன் சித்திக் |
பிள்ளைகள் | ஜீஷான் உட்பட இருவர் |
வாழிடம் | சி-858/57, அம்பேத்கர் சாலை, மும்பை மேற்கு |
முன்னாள் கல்லூரி | எம். எம். கே கல்லூரி |
முன்னதாக 1992 முதல் 1997 வரை தொடர்ந்து இரண்டு முறை மும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இறப்பதற்கு முன், இவர் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகாராட்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற வாரியத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 8 பிப்ரவரி 2024 அன்று, இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.[2] பின்னர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சியில் 12 பிப்ரவரி 2024 அன்று இணைந்தார்.[3]
சித்திக் 12 அக்டோபர் 2024 இரவு 9:15 - 9:30 மணியளவில் தன் மகன் ஜீஷானின் அலுவலகம் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார்.[4][5][6][7]
அரசியல் வாழ்க்கை
தொகுபாபா சித்திக் என்றழைக்கப்படும் ஜியாவுதீன் சித்திக், 1977 இல் இந்திய தேசிய காங்கிரசில் (இ.தே.கா) இளம் வயதிலேயே இணைந்தார். காங்கிரசின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மும்பை பிரிவின் உறுப்பினரான இவர் அக்காலத்தின் பல்வேறு மாணவர் இயக்கங்களில் பங்கேற்றார். 1980 இல் பாந்த்ரா இளைஞர் காங்கிரஸின் பாந்த்ரா வட்ட பொதுச் செயலாளராக ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ல் மும்பை இளைஞர் காங்கிரசின் தலைவரானார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் பெருநகரமும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ல் பாந்த்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2000 முதல் 2004 வரையான காலகட்டத்தில் மகாராட்டிர அரசாங்கத்தால் மகாராட்டிர வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணைய (MHADA) மும்பை வாரியத்தின் தலைவராக சித்திக் நியமிக்கப்பட்டார். 2004 மற்றும் 2008 காலகட்டத்தில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் (எஃப். டி. ஏ) மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2011 இல், பாந்த்ரா-காரில் ஒரு சூழலியல் பூங்காவை உருவாக்க நிதியளித்தார்.[8][9]
வகித்த பதவிகள்
தொகு- இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் (மும்பை) (1977)
- பாந்த்ரா இளைஞர் காங்கிரசின் பாந்த்ரா வட்டத்தின் பொதுச் செயலாளர் (1980)
- பாந்த்ரா இளைஞர் காங்கிரசின் பாந்த்ரா வட்டத்தின் தலைவர் (1982)
- மும்பை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் (1993-1998), (1998-2003)
- சட்டமன்ற உறுப்பினர் - (1999-2004), (2004-2009), (2009-2014)
- உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் (எஃப். டி. ஏ) மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், (2004-2008)
- தலைவர், மகாராட்டிர வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணைய மும்பை வாரியம் (2000-2004)
- தலைவர் மற்றும் மூத்த துணைத் தலைவர் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி (2014)
- பாராளுமன்ற சபை மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (2019)
- உறுப்பினர் தேசியவாத காங்கிரசு கட்சி . 12 பிப்ரவரி 2024 அன்று பதவியேற்றார்
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபாபா சித்திக் ஷெஹ்சீன் சித்திக்கை மணந்தார். இவர்களுக்கு அர்ஷியா சித்திக் என்ற மகளும், ஜீஷான் சித்திக் என்ற மகனும். என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
மரணம்
தொகுபாபா சித்திக் 12 அக்டோபர் 2024 அன்று மும்பையில் மூன்று கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் இவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு இவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவருக்கு வயது 66. பாந்த்ரா கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவரது மகன் ஜீஷானின் அலுவலகம் அருகே இரவு 9:30 மணியளவில் சித்திக் மீது மூன்று தோட்டாக்கள் பாய்ச்சபட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன. இருவர் கைது செய்யபட்டனர்.[10] அவர்கள் அரியானாவைச் சேர்ந்த குர்மெயில் பல்ஜித் சிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் என அடையாளம் காணப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிவக் குமார், மற்றும் முகமது ஜீஷன் அக்தர் ஆகிய இரு சந்தேக நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதை மும்பை காவல் துறை உறுதி செய்துள்ளது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Maharashtra Online "Members of the Legislative Assembly: Maharashtra" பரணிடப்பட்டது 7 மே 2013 at the வந்தவழி இயந்திரம். Retrieved 22 June 2013.
- ↑ "Baba Siddique announcement regarding resignation from INC".
- ↑ "Baba Siddique X announcement regarding joining NCP".
- ↑ Mallick, India TV News; Mallick, India TV (12 October 2024). "Baba Siddique, who was shot at in Mumbai, dies, confirms Lilavati Hospital". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 October 2024.
- ↑ "Politician Baba Siddique Known for Grand Bollywood Iftar Parties Shot Dead!". outfable.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2024.
- ↑ "Indian politician Baba Siddique shot dead in Mumbai". BBC News.
- ↑ "Indian Politician Known For His Close Ties With Bollywood Is Killed in Mumbai". Time Magazine.
- ↑ "Bandra-Khar locals get a green Christmas present". 26 December 2011. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Bandra-Khar-locals-get-a-green-Christmas-present/articleshow/11249770.cms.
- ↑ "Narayan Rane may run for council polls". 6 October 2015.
- ↑ "Maharashtra Ex Minister Baba Siddique Shot At In Mumbai". NDTV.
- ↑ "Lawrence Bishnoi's Gang Claims Responsibility For Baba Siddique's Murder". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2024.